32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 56 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 56)
அதிமுக பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்- முழு விபரம்! Exclusive

அதிமுக பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்- முழு விபரம்!

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பல்வேறு முக்கிய அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகள் படி இன்று டிச.26, […]

December 26, 2023 admin
நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் சார்பில் முப்பெரும் விழா! Exclusive

நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் சார்பில் முப்பெரும் விழா!

சென்னை புழலில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரிலால் பரிஹர்சைன் பவன் அரங்கில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவுக்கு வருகை தந்தவர்களை ஆந்திர மாநில, மாவட்ட மாஜிஸ்திரேட்டும், நவசமாஜ் அமைப்பின் பொதுச் செயலாளருமான திரு.சூரியா நாராயணா வரேவற்றார். கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர், முனைவர் டாக்டர் எம்.அன்பானந்தம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பிசி பன்வார், மாநில பொருளாளர் டாக்டர் சேகர் பாபு, மாநில அமைப்புச் செயலாளர் பாலசந்தர், மாநில துணைத் […]

December 24, 2023 admin
தூத்துக்குடியில் 3ஆவது நாளாக ஆறுதல் சொல்லி, நிவாரணம் வழங்கும் டிடிவி தினகரன்! Exclusive

தூத்துக்குடியில் 3ஆவது நாளாக ஆறுதல் சொல்லி, நிவாரணம் வழங்கும் டிடிவி தினகரன்!

அமமுக தலைவர் தினகரன் போக்கைப் பார்த்து பல அரசியல் கட்சிகள் வாயை பிளக்கிறதாம்.. காரணம்.. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே முதல் பணி என்பதால் சென்னையில் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திட்டமிட்டிருந்த எம்.ஜி.ஆர் நினைவு நாள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்து விட்டு கடந்த மூன்று நாட்களாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் உள்ள மக்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லி நிவாரணம் வழங்கி வருவதுதான். இது குறித்து […]

December 24, 2023 admin
திருநெல்வேலி & தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி : முதலமைச்சர் அறிவிப்பு! Exclusive

திருநெல்வேலி & தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி : முதலமைச்சர் அறிவிப்பு!

தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. வரலாறு காணாத கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்து, பொதுமக்கள் பெரும் […]

December 21, 2023 admin
பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை & 50 லட்சம் அபராதம்!- ஐகோர்ட் அதிரடி Exclusive

பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை & 50 லட்சம் அபராதம்!- ஐகோர்ட் அதிரடி

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து இருந்த சென்னை ஐகோர்ட் தண்டனையாக பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை; ரூ.50 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக […]

December 21, 2023 admin
சென்னை புத்தகக் காட்சி: ஜன.3-ல் தொடங்குகிறது! Exclusive

சென்னை புத்தகக் காட்சி: ஜன.3-ல் தொடங்குகிறது!

ஜனவரி மாதம் வந்துவிட்டாலே, புத்தகக் கண்காட்சி குறித்த எண்ணங்கள் நமது மூளையில் ஓடதுவங்கிவிடும். சென்னை புத்தகக் கண்காட்சியில், அனைத்து பதிப்பகத்தின் புத்தகங்களும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், எங்கும் கிடைக்காத பல புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அதுவும் சிறப்புத் தள்ளுபடி விலையில் புத்தகம் விற்கப்படுவதால் புத்தகப்பிரியர்கள் இந்தக் கண்காட்சியைத் தவறவிடுவதில்லை. இதனால் புத்தகக்கண்காட்சி நடைபெறும் நாள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. இந்நிலையில் 47 ஆவது சென்னை புத்தகக் காட்சியை ஜனவரி 3 ஆம் தேதி முதலமைச்சர் […]

December 21, 2023 admin
நிஜமாகவே ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!- Exclusive

நிஜமாகவே ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!-

மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில், (கடந்த டிசம்பர் இரண்டாம் வாரத்திலேயே பரவியபடி- இப்போது நிஜமாலுமே) ’ நீர் வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருதுகள் இலக்கிய உலகிற்கு அவர்களின் பங்களிப்பிற்காக எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த மற்றும் மிகப்பெரிய கௌரவமாகும். சாகித்ய அகாடமி விருது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டு அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் ஆங்கிலம் மற்றும் ராஜஸ்தானி ஆகிய மொழிகளுக்கும் வழங்கப்படுகிறது. […]

December 20, 2023 admin
தென் மாவட்டங்களில் 60 ஆண்டுகளாக இல்லாத மழை பெய்துள்ளது. எதிர்பாராதது இது -முதல்வர் ஸ்டாலின் பேட்டி! Exclusive

தென் மாவட்டங்களில் 60 ஆண்டுகளாக இல்லாத மழை பெய்துள்ளது. எதிர்பாராதது இது -முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

“இன்று இரவு பிரதமரை சந்தித்து வெள்ள பாதிப்பு நிலவரங்களை தெரிவித்துவிட்டு நாளை நான் தூத்துக்குடி, நெல்லை பகுதிகளுக்கு செல்லவுள்ளேன். கடந்த காலங்களில் கிடைக்க வேண்டிய நிவாரண நிதிகளும் கிடைக்கும் நம்பிக்கையில் தான் பிரதமரை சந்திக்கவுள்ளேன் “என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோருவதற்கும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்துவரும் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு, நிவாரண பணிகள் குறித்து […]

December 19, 2023 admin
சொத்து குவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை: ஐகோர்ட் அதிரடி! Exclusive

சொத்து குவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை: ஐகோர்ட் அதிரடி!

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்திருந்தது. இந்தநிலையில் இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் தற்பொழுது ரத்து செய்துள்ளது.மேலும், இந்த வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும் டிசம்பர் 21-ம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராகவும் […]

December 19, 2023 admin
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா -கொடி ஏற்றம் – வீடியோ! Exclusive

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா -கொடி ஏற்றம் – வீடியோ!

சர்வதேச புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் . ஆருத்ரா தரிசனம் என்பது சேந்தனார் வீட்டுக்கு சிவ பெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி மாதம். திருவாதிரை நட்சத்திரம் அன்று ஆகும். இந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.எனவே இந்த நாளன்று ஒவ்வொருவர் வீட்டிலும் களி […]

December 18, 2023 admin
உடனடி செய்திகள்