32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 55 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 55)
புதியதோர் உலகு செய்வோம்!- பாரதிதாசன் பல்கலை. விழாவில் பிரதமர் பேச்சு! Exclusive

புதியதோர் உலகு செய்வோம்!- பாரதிதாசன் பல்கலை. விழாவில் பிரதமர் பேச்சு!

திருச்சியில், பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு […]

January 2, 2024 admin
முதல்வரின் பாதுகாப்புக்காக கருப்பு நிறத்தில் 6 புதிய வாகனங்கள்! ஏன்? என்ன சிறப்பு? Exclusive

முதல்வரின் பாதுகாப்புக்காக கருப்பு நிறத்தில் 6 புதிய வாகனங்கள்! ஏன்? என்ன சிறப்பு?

முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய கருப்பு இன்னோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாகனங்கள் ஏற்கெனவே வெள்ளை நிறத்தில் இருந்த நிலையில் தற்போது 6 கருப்பு நிற இன்னோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த புதிய வாகனங்களில் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.   மேலும் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் என்பது அரசியல்வாதிகள் உட்பட அரசு அதிகாரிகள் என பலரும் பயணம் செய்ய ஏற்ற காராக […]

January 1, 2024 admin
பா.இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கோலாகலம்! Exclusive

பா.இரஞ்சித்தின் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கோலாகலம்!

“கலை என்பதே அரசியல் நடவடிக்கை தான்” என்ற கூற்றிற்கிணங்க தனது ஒவ்வொரு படைப்பிலும் தனது அரசியல் நடவடிக்கையை சமரசமில்லாமல் முன்னகர்த்திச் சென்று கொண்டிருக்கும் இயக்குனர் பா. இரஞ்சித் திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். இவர் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் ஆவணப்படங்களை தயாரித்தல், நாடகங்களை அரங்கேற்றுதல் என சினிமாவை தாண்டிய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் “நீலம் பண்பாட்டு மையம்”, “கூகை திரைப்பட இயக்கம்”, “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, […]

January 1, 2024 admin
ஆர்டிபிசிஆர் பரிசோதனை -சுகாதாரத் துறை உத்தரவு! Exclusive

ஆர்டிபிசிஆர் பரிசோதனை -சுகாதாரத் துறை உத்தரவு!

சளி, காய்ச்சல், மூச்சிரைத்தல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் […]

December 30, 2023 admin
கவர்னரை முதல்வர் சந்தித்து பேசியது என்ன ?- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்! Exclusive

கவர்னரை முதல்வர் சந்தித்து பேசியது என்ன ?- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதாகவும், இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து சுமுகமாக பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் இன்று பேசினார். ராஜ்பவனில் கவர்னரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய அவருடன் அமைச்சர்கள் […]

December 30, 2023 admin
`மணியம் 100′ & ம.செ. ஓவியக் கண்காட்சி! Exclusive

`மணியம் 100′ & ம.செ. ஓவியக் கண்காட்சி!

ஓவியர் திரு. மணியம் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில், இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓவியத்திற்காகவே வாழ்ந்தார். அவர் படைத்த ஓவியங்கள் ரசிகர்களின் நினைவிலும், மனதிலும் அமர்ந்து கொண்டன. தம்முடைய வாழ்நாள் முழுவதிலும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஓய்வே இல்லாமல் உழைத்தார். ஒரு தனித்த பாணியுடன் சித்திரங்கள் வரைந்து ஓவிய உலகில் நிரந்தரமாய்த் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் பிரபல ஓவியர் அமரர் மணியம். 1941 ஆம் ஆண்டில் கல்கி பத்திரிகையைத் தொடங்கினார்கள். இளைஞர் மணியம் அவர்களிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறமையை ‘ஆசிரியர் […]

December 30, 2023 admin
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: முதல்வர் திறந்து வைத்தார்! Exclusive

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: முதல்வர் திறந்து வைத்தார்!

தமிழக தலைநகரான சென்னை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது இங்குள்ள போக்குவரத்து நெரிசல் தான். காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமானோர் அலுவலகம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் பொது போக்குவரத்து மற்றும் சொந்த வாகனங்களில் செல்வதால் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகிறது.அதிலும் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசின் சார்பிலும்,காவல் […]

December 30, 2023 admin
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்! Exclusive

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்!

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71), உடல்நலக் குறைவால் சென்னை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 6.10 மணிக்கு காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திலும், பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திலும் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், […]

December 29, 2023 admin
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல், பராமரிப்புக்கு ஐ எஸ் ஓ தரச் சான்றிதழ்! Exclusive

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல், பராமரிப்புக்கு ஐ எஸ் ஓ தரச் சான்றிதழ்!

தமிழகத்திற்கே பெருமை அளிக்கக் கூடியதும், சென்னை மாநகருக்கு மதிப்பு கூட்டத் தக்கதும், 14,600 கோடி ரூபாய் மதிப்பில் உருவானதுமான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ஐ.எஸ்.ஓ. 9001 தர மேலாண்மை அமைப்பு மற்றும் ஐ.எஸ்.ஓ. 14001 சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றிற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது. தென்சென்னையிலிருந்து வடசென்னைக்கோ, வடசென்னையிலிருந்து தென்சென்னைக்கோ செல்ல வேண்டும் என்றால், குறைந்தபட்சம் இரண்டு மூன்று பேருந்துகள் அல்லது ஷேர் ஆட்டோக்கள் மூலம்தான் சென்றடைய […]

December 29, 2023 admin
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்! Exclusive

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்!

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நிமோனியாவுக்காக அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்களின் தீவிர முயற்சியும் பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார்” என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக “மருத்துவப் பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது” என்று தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் […]

December 28, 2023 admin
உடனடி செய்திகள்