திருநெல்வேலி & தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி : முதலமைச்சர் அறிவிப்பு!

திருநெல்வேலி & தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி : முதலமைச்சர் அறிவிப்பு!

தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. வரலாறு காணாத கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்து, பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர். குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது.இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். கிராமங்களில் பல வீடுகள், வெள்ளத்தில் மூழ்கி, முற்றிலும் இடிந்து நாசமானது. இந்நிலையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,,” ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.ஒருசில இடங்களில் 1871-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழை பெய்துள்ளது. அதன்காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்வசிக்கும் சுமார்கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில்நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை நமக்கு சற்றே தாமதமாக கிடைத்தாலும், அதில் அளித்துள்ள அளவை விட அதிகமாக மழை பொழிவு ஏற்பட்ட சூழ்நிலையிலும், தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது . மழைப்பொழிவு கடுமையான உடனேயே 10 அமைச்சர்கள், 10 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாவட்ட வாரியாக, இந்திய காவல் பணி அதிகாரிகள் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் நியமிக்கப்பட்டார்கள். அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் வீரர்கள், படகுகள், உபகரணங்கள், 375 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்கள், 275வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் 10குழுக்கள் களத்தில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கூடுதலாக, மீட்பு பணிகளை விரைவுபடுத்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 230பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதுமட்டுமின்றி, நமது இராணுவ வீரர்கள் 168பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 12 ஆயிரத்து 653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும். அதேபோல் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிப்புக்கு ஏற்றார்போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.மத்திய அரசு இதுவரை தென் மாவட்ட மழையை கடும் பேரிடராக அறிவிக்கவில்லை. தற்போது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அளித்துள்ளது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!