32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 172 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 172)
ஆயுள் கைதிகளை அவிய்ங்க இஷ்டபடி ரிலீஸ் செய்யச் சொல்லி கேட்க ரைட்ஸ் இல்லை! தமிழகம்

ஆயுள் கைதிகளை அவிய்ங்க இஷ்டபடி ரிலீஸ் செய்யச் சொல்லி கேட்க ரைட்ஸ் இல்லை!

முன்னாள் பிரதமர்ர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி, தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக உள்துறை செயலாளர் சார்பிலும், வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளர் சார்பிலும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், நளினி உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரை, […]

August 13, 2019 admin
மோடியாய நமஹா ! – ரவீந்திரநாத் ஓப்பன்  பேட்டி =வீடியோ தமிழகம்

மோடியாய நமஹா ! – ரவீந்திரநாத் ஓப்பன் பேட்டி =வீடியோ

அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யான ஓ.பி. ரவீந்திரநாத், “நாட்டை புதிதாக கட்டமைப்பதற்கான பணியில் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பேன்” என்று கூறியுள்ளார். இன்று (ஆகஸ்டு 12) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஓ.பி. ரவீந்திரநாத். நாடாளுமன்றத்துக்கு சென்று முதல் கூட்டத் தொடர் எவ்வாறு இருந்தது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பாரத பிரதமர் மோடி சிறப்பான இந்தியாவை, புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அதற்கான முயற்சியாக […]

August 12, 2019 admin
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்கள்! Running News

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்கள்!

மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பல நடவடைக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் பேட்டரிப் பேருந்துகள் இயக்கப் பட உள்ளதாக, போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த இயக்குநர்கள் குழு பரிசீலனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் மாநகரம், விரைவு மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் […]

August 9, 2019 admin
வேலூர் ; திமுகவின் பொருளாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.! Running News

வேலூர் ; திமுகவின் பொருளாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.!

வேலூர் பார்லிமெண்ட் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,78,855 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,70,395 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 8460 ஆகும். வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகளும் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகளும் கிடைத்துள்ளது. வாணியம்பாடி தொகுதியில் அதிமுகவை விட திமுகவுக்கு சுமார் 30 […]

August 9, 2019 admin
அயோடின் உப்புதான் உபயோகிக்கணும்-ங்கற உத்தரவை நீக்க சொல்லுங்க யுவர் ஆனர்! Running News

அயோடின் உப்புதான் உபயோகிக்கணும்-ங்கற உத்தரவை நீக்க சொல்லுங்க யுவர் ஆனர்!

உணவில் இப்போதெல்லாம் பலர் மீண்டும் கல் உப்புதான் பயன் படுத்துகிறார்கள் உண்மை. ஆனால், அரசு அனைத்து உப்பு உற்பத்தியாளர்களையும் உப்பில் அயோடின் சேர்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது. தற்போதுள்ள ‘எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.’ (FSSAI-Food Safety and Standards Authority of India) சட்டம், உணவுக்கான உப்பில் அயோடின் சேர்க்காமல் விற்பதை தடைசெய்கிறது. சிகரெட்டை தடைசெய்ய முடியாத அரசு, அயோடின் சேர்க்காத உப்பை இவ்வளவு பிரயத்தனப்பட்டு தடைசெய்வது விந்தை. அயோடின் உப்பு காரணமாக நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. எனவே, அதைத் […]

August 8, 2019 admin
தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி! Running News

தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தன் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், இந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மணிகண்டன் இதுவரை வகித்து […]

August 7, 2019 admin
கருணாநிதி நினைவு தினம்: முரசொலி அலுவலகத்தில் வெண்கல சிலை திறப்பு! Running News

கருணாநிதி நினைவு தினம்: முரசொலி அலுவலகத்தில் வெண்கல சிலை திறப்பு!

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களின் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் கருணா நிதி கடந்த ஆண்டு இதே நாளில், உடல் நலக்குறைவால்காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, கருணாநிதியின் வெண்கலசிலை முரசொலி அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்டது. மேற்கு வங்‌க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கருணாநிதியின் சிலையை திறந்து‌வைத்தார்.‌ இதன்பின் கருணாநிதியின் நினைவுதின பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றிய போது, ‘ இழக்கக் கூடாதவரை இப்போது இழந்து நிற்கின்றோம். பேனாவையும், தாளையும் அவரிடம் கொடுத்தால் அண்ணா […]

August 7, 2019 admin
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்! – தமிழக கல்வித்துறை அறிவிப்பு! Running News

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்! – தமிழக கல்வித்துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எல்லா மாணவர் களுக்கும், ஆதார் எண் கட்டாயம் எனவும் ஒவ்வொரு மாணவர்கள் மற்றும் அவரின் பெற்றோர் ஆதார் எண் விவரங்களை சேகரித்து கல்வித்தகவல் மேலாண்மை இணையதளமான EMIS–ல் பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் […]

August 6, 2019 admin
வாக்காளர் சரிபார்ப்பு திட்ட முகாம்- தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் செயல்படும்! Running News

வாக்காளர் சரிபார்ப்பு திட்ட முகாம்- தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் செயல்படும்!

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கும் நிலையில் வாக்காளர் அட்டையில் உள்ள பிழை களை திருத்தம் செய்வதற்காக வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை நாடு முழுவதும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, வரும் 16ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை […]

August 6, 2019 admin
தமிழக அரசு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரலை! – மத்திய தலைமை கணக்காயர் அதிருப்தி! Running News

தமிழக அரசு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரலை! – மத்திய தலைமை கணக்காயர் அதிருப்தி!

நம் தமிழக அரசு அடுத்தடுத்து வாங்கி வரும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. அப்படி வாங்கிய கடனை பொறுத்தவரை ரூ. 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மட்டும் ரூ. 33226.27 கோடியாக உள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் மூல வெளியான தகவலின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் […]

August 3, 2019 admin
உடனடி செய்திகள்