32°C
விளம்பரம்
Advertisement

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்கள்!

admin சேலம் Published: August 9, 2019 2 நிமிட வாசிப்பு Updated: August 13, 2019 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பல நடவடைக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் பேட்டரிப் பேருந்துகள் இயக்கப் பட உள்ளதாக, போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த இயக்குநர்கள் குழு பரிசீலனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் மாநகரம், விரைவு மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், புதிய அறிவிப்புகளை செயல்படுத்துதல், புதிய பேருந்துகளின் இயக்கம், வசூல் நிலவரம் தொடர்பாக ஆலோசிக்கப் பட்டது.

அப்போது பேசிய போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,160 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 881 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவற்றை நல்ல முறையில் பராமரித்து வருவாயைப் பெருக்க கேட்டுக் கொண்டார். தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறும் வசதி செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மின்சாரப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக பொதுப்பணி மற்றும் மின்சாரத் துறைகளின் அதிகாரி களோடு ஆலோசனை நடத்தி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். முழு அர்ப்பணிப்புடன் தரமான சேவையை வழங்க வேண்டும் என்று போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

அடிசினல் ரிப்போர்ட்!

கடந்த 2 ஆண்டுளாக சுற்றுச் சூழலை பாதிக்காதவகையில் பேட்டரியில் எலக்ட்ரிக் பஸ்களை சென்னையில் சோதனை ஓட்டம் பரீட்சார்த்த முறையில் நடத்தப்பட்டு வந்தது. தமிழக போக்கு வரத்துதுறையில் இதுவரை டீசல் பஸ்கள்தான் இயக்கப்பட்டு வருகிறது. பேட்டரி யில் இயங்கும் எலக்ட்ரிக் பஸ்சின் வழித்தடத்தை கண்காணிக்கும் ஜி.பி.எஸ். வசதி, தானியங்கிகியர், தானியங்கிகதவு, தீயணைப்புகருவி, முதலுதவிபெட்டி, கண்காணிப்பு கேமரா போன்றவை இருக்கும். மாற்றுத் திறனாளிகள் 3 சக்கர சைக்கிளுடன் பஸ்சில் ஏறுவதற்கும் இதில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பஸ் இயங்க 26 பேட்டரிகள் பொருத்தப் பட்டு இருக்கும். இந்த பேட்டரிகளை 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 150 கி.மீ. வரை இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்