32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 169 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 169)
தேனி : பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட ஐகோர்ட் தடை! தமிழகம்

தேனி : பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட ஐகோர்ட் தடை!

துணை முதல்வர் ஓ.பி எஸ்.ஸின் கோட்டை என்று சொல்லப்படும் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, செயல்பட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தான் பழனிச்செட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் […]

September 12, 2019 admin
தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலம் என்ற விருதை பெற்றது மதுரை மீனாட்சியம்மன் கோயில்! Running News

தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலம் என்ற விருதை பெற்றது மதுரை மீனாட்சியம்மன் கோயில்!

இந்தியாவின் இரண்டாவது தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலம் என்ற விருதை மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெற்றுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இக்கோயில் பல்வேறு மன்னர்களால் பல்வேறு கால கட்டங்களில் சிறிது சிறிதாகக் கட்டி தற்போது பல்வேறு மண்டபங் களுடன் கூடிய பரந்து விரிந்த மிகப் பெரிய கோயிலாக உருவெடுத்துள்ளது. இக்கோயிலை வைத்தே மதுரை நகரம் உருவாகி இருக்கிறது. தாமரையின் நடுவில் உள்ள மொட்டு கோயில். சுற்றியுள்ள இதழ்கள் தெருக்களாக அமையப் […]

September 10, 2019 admin
குழாய்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்திக் கட்டணம்!- சென்னை குடிநீர் வாரியம் முடிவு! Running News

குழாய்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்திக் கட்டணம்!- சென்னை குடிநீர் வாரியம் முடிவு!

நம்ம சிங்கார சென்னையின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு சுமார் 1,400 மிமீ. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வறட்சி மட்டுமல்லாமல், 2019-ல் தொடர்ந்து 200 நாட்களுக்கும் மேலாக ஒரு சொட்டு மழைகூடப் பெய்யவில்லை. இந்நிலையில், 2019 ஜூன் மாதத்தில் சென்னையின் முக்கிய நீர் வளங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் முற்றிலும் வறண்டு போன தால் ‘சுழிய தின’த்தை (Day Zero) சென்னை எதிர்கொள்ள நேர்ந்தது. இதுவரை சந்தித்திராத குடிநீர்ப் பிரச்சினையில் சிக்கி சென்னையின் இயல்பு […]

September 9, 2019 admin
‘ரயில்வே தேர்வுகள்’ தமிழ் மொழியில் எழுதலாம்!- மு.க. ஸ்டாலின் ஹேப்பி! Running News

‘ரயில்வே தேர்வுகள்’ தமிழ் மொழியில் எழுதலாம்!- மு.க. ஸ்டாலின் ஹேப்பி!

ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வேயின் அனைத்துப் பிராந்திய பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதத்தில், ‘ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம்’ என்று ரயில்வே வாரியம் விளக்கம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் ‘துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை (General Departmental Competitive Examination), தமிழ் […]

September 9, 2019 admin
விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி – சென்னையில் அமைதியாக நடந்தது! Running News

விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி – சென்னையில் அமைதியாக நடந்தது!

நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை முழுவதும் 2602 விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறையினர் அனுமதி அளித்திருந்த நிலையில் கடலில் கரைக்கும் நிகழ்வு அமைதியாக நடந்தது. சென்னையின் பல்வேறு இடங்களில் அத்திவரத விநாயகர், சங்கு விநாயகர், ராணுவ விநாயகர் என பல்வேறு வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. 3 நாட்கள் வழிபாட்டுக்குப் பின் கடந்த 5-ஆம் தேதியும் நேற்றும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இந்நிலையில் இந்து அமைப்புகள் சார்பில் […]

September 8, 2019 admin
தமிழிசை ஆகிய நான் தெலுங்கானா கவர்னர் ஆகிப்புட்டேன்! Running News

தமிழிசை ஆகிய நான் தெலுங்கானா கவர்னர் ஆகிப்புட்டேன்!

தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பி லிருந்து விலகினார். தெலுங்கானா மாநில ஆளுநராக இன்று தமிழிசை சவுந்திரராஜன் பதவி யேற்றார். ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடை பெற்றது. இவருக்கு தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ராகவேந்திரா எஸ் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் ஆளுநர்களில், 58 வயதில் ஆளுநராகி, […]

September 8, 2019 admin
மரங்களில் விளம்பரத் தட்டி/ கேபிள் ஒயர்கள் இருந்தால் அபராதம் + சிறை = சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு! Running News

மரங்களில் விளம்பரத் தட்டி/ கேபிள் ஒயர்கள் இருந்தால் அபராதம் + சிறை = சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு!

தமிழகத்தில் சுவர் விளம்பரம், தட்டி மற்ரும் பேனர் விளம்பரங்கள் வைக்க அரசு தடை விதித்து இருந்தாலும் ஆங்காங்கே இந்த விதியை கண்டு கொள்ளாமல் ஆங்காங்கே உள்ள மரம் உள்ளிட்ட வைகளில் விளம்பரம் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகரில் இனிமேல் மரங்களில் விளம்பரத் தட்டிகள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அதாவது இந்த சிங்காரச் சென்னை மாநகராட்சி, கடந்த 2011-ம் ஆண்டு விரிவாக்கப்பட்ட […]

September 7, 2019 admin
சென்னை ஐகோர்ட் சீஃப் ஜட்ஜ் தஹில் ரமணி பதவி விலக முடிவு! Running News

சென்னை ஐகோர்ட் சீஃப் ஜட்ஜ் தஹில் ரமணி பதவி விலக முடிவு!

சென்னை ஐகோர்ட் சீஃப் ஜடஜாக  பதவி வகித்து வருபவர் வி.கே.தஹில் ரமணி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி யேற்றுக் கொண்டார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியை, மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு மத்திய […]

September 6, 2019 admin
கால நிலை அவசர பிரகடனத்தை உடனடியாக செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை! Running News

கால நிலை அவசர பிரகடனத்தை உடனடியாக செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

ஏற்கெனவே இந்த பரந்த உலகில் தேவைப் படும் இடத்தில் மழை இல்லாமையும்,காய்ந்து கிடக்க வேண்டிய இடத்தில் தீப் பிடித்தும் சூழல் மாரி வரும் நிலையில் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்! இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புவிவெப்பமயமாதலின் தாக்கமும், அதனால் மனிதகுலத்திற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை யில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக […]

September 6, 2019 admin
மீத்தேன், ஷெல் கேஸ் எடுக்க எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை!- ஓஎன்ஜிசி விளக்கம்! தமிழகம்

மீத்தேன், ஷெல் கேஸ் எடுக்க எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை!- ஓஎன்ஜிசி விளக்கம்!

திருவாரூர் மாவட்டம், காவிரி டெல்லா பகுதிகள், நன்னிலம் போன்ற கிராமங்களில், அவ்வப்போது ஓஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, ஓஎன்ஜிசி நிறுவனம், மீத்தேன், ஷெல் கேஸ் எடுப்பதாகவும் அவர்கள் புகார் எழுப்பி வந்தனர். ஓஎன்ஜிசி நிறுவனம் அவ்வாறான பணிகளில் ஈடுபடவில்லை என, அதன் செயல் இயக்குநர் ஷியாம் மோகன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பில் 9 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது. இந்த […]

September 6, 2019 admin
உடனடி செய்திகள்