‘ரயில்வே தேர்வுகள்’ தமிழ் மொழியில் எழுதலாம்!- மு.க. ஸ்டாலின் ஹேப்பி!

‘ரயில்வே தேர்வுகள்’ தமிழ் மொழியில் எழுதலாம்!- மு.க. ஸ்டாலின் ஹேப்பி!

ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வேயின் அனைத்துப் பிராந்திய பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதத்தில், ‘ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம்’ என்று ரயில்வே வாரியம் விளக்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் ‘துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை (General Departmental Competitive Examination), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை’ என்றும், ‘ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தி னால் போதும்’ என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ரயில்வேயின் இந்த நடவடிக்கை ஹிந்தி தவிர்த்து பிற மாநில மொழிகளை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஒழிக்கும் முயற்சியென்று தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

கட்சி வேறுபாடு இல்லாமல், ரயில்வே நிர்வாகத்திடம் இன்று திமுக தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டனர்.

அதைத் தொடர்ந்து ரயில்வே போர்டு இணை இயக்குனர் டி. ஜோசப் இன்று வெளியிட்டுள்ள உத்தரவின் நகல் கீழே தரப்பட்டுள்ளது. (No.E(NG)I/2018/PM 1/4, New Delhi, dated September 9, 2019, Language of Question Papers for GDCE – Clarification,)

இந்த உத்தரவு பிராந்திய மொழிகளில் ரயில்வேயில் துறைசார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்பதை உறுதி செய்துள்ளது.

ரயில்வே நிர்வாகம் நடத்துகிற தேர்வுகள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், இதனை தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

aகட்சி வேறுபாடு இல்லாமல், ரயில்வே நிர்வாகத்திடம் இன்று திமுக தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டனர்.

அதைத் தொடர்ந்து ரயில்வே போர்டு இணை இயக்குனர் டி. ஜோசப் இன்று வெளியிட்டுள்ள உத்தரவின் நகல் கீழே தரப்பட்டுள்ளது. (No.E(NG)I/2018/PM 1/4, New Delhi, dated September 9, 2019, Language of Question Papers for GDCE – Clarification,)

இந்த உத்தரவு பிராந்திய மொழிகளில் ரயில்வேயில் துறைசார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்பதை உறுதி செய்துள்ளது.

ரயில்வே போர்டு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, திமுக போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் – தமிழ் மொழிக்காக தொடர்ந்து திமுக போராடும் எனவும் திமுக தலைவர் மு.க.  ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக  தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில், ரயில்வே நிர்வாகம் ஈடுபடவேண்டாம். ரயில்வே குரூப் சி தேர்வை, தமிழில் எழுதுவதற்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும். தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு, போராட்டத்தை தூண்டிவிட வேண்டாம் என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரயில்வேயில் துறை சார்ந்த தேர்வுகளை தமிழில் மற்றும் அந்தந்த மாநில மொழி களில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

error: Content is protected !!