மீத்தேன், ஷெல் கேஸ் எடுக்க எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை!- ஓஎன்ஜிசி விளக்கம்!
திருவாரூர் மாவட்டம், காவிரி டெல்லா பகுதிகள், நன்னிலம் போன்ற கிராமங்களில், அவ்வப்போது ஓஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, ஓஎன்ஜிசி நிறுவனம், மீத்தேன், ஷெல் கேஸ் எடுப்பதாகவும் அவர்கள் புகார் எழுப்பி வந்தனர். ஓஎன்ஜிசி நிறுவனம் அவ்வாறான பணிகளில் ஈடுபடவில்லை என, அதன் செயல் இயக்குநர் ஷியாம் மோகன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பில் 9 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது. இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் ஷியாம் மோகன்,
தங்களுக்கு மீத்தேன், ஷெல் கேஸ் எடுக்க எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை என்றும், இயற்கை வாயு, கச்சா எண்ணெய், ஆகியவற்றைத்தான் எடுப்பதாகவும் கூறினார். இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.