32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 149 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 149)
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது!- தமிழகம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக கல்வி ஒளிபரப்பு தொடங்கியது!-

10 வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் திங்கள் முதல் வெள்ளி வரையிலான சிறப்பு கல்வி நிகழ்ச்சியினை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் பள்ளி திறக்கும் வரை வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் […]

July 14, 2020 admin
மதுரையில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு தமிழகம்

மதுரையில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு

மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க 15.07.2020 அதிகாலை 00 மணிமுதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை, 24.6.2020க்கு முன்னர் இருந்த ஊரடங்கு நிலை மீண்டும் அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதுரையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க தமிழ்நாடு அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது., மதுரை மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் […]

July 12, 2020 admin
நெடுஞ்செழியனுக்கு சிலை + ஆண்டுதோறும் அரசு விழா!- முதல்வர் அறிவிப்பு தமிழகம்

நெடுஞ்செழியனுக்கு சிலை + ஆண்டுதோறும் அரசு விழா!- முதல்வர் அறிவிப்பு

பன்முகத் தன்மைக் கொண்ட நாவலர் இரா. நெடுஞ்செழியன் பிறந்த தினமான ஜூலை 11-ஆம் நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவும் தமிழ்நாடு அரசின் சார்பில் முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (10.7.2020) வெளியிட்டுள்ள அறிக்கை : புரட்சித் தலைவி அம்மாவின் அரசு, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், நமது மாநிலம் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும் […]

July 10, 2020 admin
கொரொனா ; தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை – முதல்வர்  பேச்சு தமிழகம்

கொரொனா ; தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை – முதல்வர் பேச்சு

சென்னையில் கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் 750 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட அதி நவீன கரோனா சிறப்பு மருத்துவமனையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க் கிழமை தொடக்கிவைத்தார். ரூ.127 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள அந்த மருத்துவ மனையில் உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களும், உயிர் காக்கும் கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன. கரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து, இந்த மருத்துவமனை இரு வாரங்களில் அமைக்கப்பட்டதாகவும், 300 படுக்கைகளில் பிராணவாயு கருவிகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்தது. தேசிய முதியோர் […]

July 7, 2020 admin
நாளை முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: யாருக்கு, எவ்வளவு நேரம், என்னென்ன அனுமதிகள்?! தமிழகம்

நாளை முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: யாருக்கு, எவ்வளவு நேரம், என்னென்ன அனுமதிகள்?!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் தலைநகர் சென்னைதான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முதலிடம் வகிக்கிறது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் கொரோனா பரவல் வேகம் கட்டுக்குள் வந்த பாடில்லை. இதனால் தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட்டாலும் தமிழகம் முழுவதும் திங்கள் கிழமை (6-7-2020) முதல் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு […]

July 5, 2020 admin
மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு! தமிழகம்

மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக ஜூலை 5 வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த முழு முடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை இதோ: மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, கொரோனா நோய்த்‌ தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது. அதனால்‌ தமிழ்நாட்டில்‌ சிகிச்சைக்குப்‌ பின்‌ குணமடைந்து வீடு திரும்புவோர்‌ சதவீதம்‌ நாட்டிலேயே […]

July 4, 2020 admin
போலீஸாக  இருந்த 5 கொலையாளிகள் கைது! – ஐகோர்ட் பாராட்டு தமிழகம்

போலீஸாக இருந்த 5 கொலையாளிகள் கைது! – ஐகோர்ட் பாராட்டு

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்–-இன்ஸ் பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமை காவலர் ரேவதியை தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் ஒருவரும், மற்றொரு காவலரும் அப்ரூவராகிறார்கள். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். […]

July 2, 2020 admin
என்எல்சி அனல் மின் நிலையத்தில் விபத்து: 7 பேர் பலி! – வீடியோ Running News

என்எல்சி அனல் மின் நிலையத்தில் விபத்து: 7 பேர் பலி! – வீடியோ

என் எல் சி என்றழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழில் இணைந்து உள்ள 5வது அனல் மின்சார உற்பத்திப் பிரிவில் இன்று காலை 10 மணிக்கு பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது இந்த கோர விபத்தில் 7தொழிலாளர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் 16 பேர் கடுமையாக காயமடைந்தனர் காயமடைந்த 16 பேரில் 11 பேர் 40 சதவீதத்துக்கு மேல் தீப்புண்களால் பாதிப்படைந்து இருப்பதாக கூறப்படுகிறது அவர்கள் சென்னை மருத்துவ மனைக்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மீதமுள்ள ஐந்து […]

July 1, 2020 admin
ஊரடங்கு ஜூலை 31 வரை  நீட்டிப்பு :தமிழக அரசு அறிவிப்பு Running News

ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு :தமிழக அரசு அறிவிப்பு

கொரோனாவின் கோர ரூபம் குறையாத காரணத்தால் தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்க்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களிலும் ஜூலை 5ம் தேதி வரை […]

June 29, 2020 admin
திருநெல்வேலி இருட்டு லாலா கடை அதிபர் ஹரிசிங் தற்கொலை! Running News

திருநெல்வேலி இருட்டு லாலா கடை அதிபர் ஹரிசிங் தற்கொலை!

திருநெல்வேலி டிஸ்டிரிக்கில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதாவது நேற்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஹரிசிங். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக அவர் இன்று தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. இருட்டுக் கடையில் அல்வா என்பது மாலை நேரத்தில் மட்டும் அதாவது மாலை ஆறு மணிக்குத் துவங்கி […]

June 25, 2020 admin
உடனடி செய்திகள்