என்எல்சி அனல் மின் நிலையத்தில் விபத்து: 7 பேர் பலி! – வீடியோ

என் எல் சி என்றழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழில் இணைந்து உள்ள 5வது அனல் மின்சார உற்பத்திப் பிரிவில் இன்று காலை 10 மணிக்கு பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது இந்த கோர விபத்தில் 7தொழிலாளர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் 16 பேர் கடுமையாக காயமடைந்தனர் காயமடைந்த 16 பேரில் 11 பேர் 40 சதவீதத்துக்கு மேல் தீப்புண்களால் பாதிப்படைந்து இருப்பதாக கூறப்படுகிறது அவர்கள் சென்னை மருத்துவ மனைக்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மீதமுள்ள ஐந்து நெய்வேலி நிலக்கரிச் சுரங்க பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு மே மாதம் 7-–ந் தேதி இதே அலகில் நடைபெற்ற விபத்தில் பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தில் 7 யூனிட்டுகள் உள்ளன. இங்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து தீ பிடித்து எரிந்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர். தொழிலாளர்கள் பலர் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்த வெளியில் ஓடிவந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ கொளுந்து விட்டு எரிந்தததால் கரும் புகை கிளம்பியது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்த 17 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப் படுகிறது. படுகாயமடைந்த 17 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் அவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
விபத்தில் பலியான 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த தொழிலாளர்களின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். மேலும் ஆம்புலன்சில் ஏற்பட்ட இறந்த தொழிலாளர் களின் முகத்தை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி ஆம்புலன்சை முற்றுகை யிட்டனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில், உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/aanthaireporter/status/1278231625453592577