32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 133 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 133)
தலைமை தேர்தல் ஆணையர் 10ம் தேதி தமிழகம் வருகை! தமிழகம்

தலைமை தேர்தல் ஆணையர் 10ம் தேதி தமிழகம் வருகை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 2-வது வாரத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10-ம் தேதி சென்னை வர உள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடத்தப்படும் என கூறப்படுகிறது. தேர்தல் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் […]

February 4, 2021 admin
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் : கவர்னர் பன்வாரிலால் உரை -விபரம்! தமிழகம்

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் : கவர்னர் பன்வாரிலால் உரை -விபரம்!

தமிழக சட்டசபை இன்று காலை 11 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10.57 மணிக்கு சபைக்குள் வந்தார். அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். 10.59 மணிக்கு கவர்னர் வந்தார். அவரை சபாநாயகர் தனபால், செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வந்தனர். 11 மணிக்கு சட்டசபை துவங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபை ஆரம்பமானது. இதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. அனவரும் […]

February 2, 2021 admin
கடலுக்கு அடியில் போய் கல்யாணம் செய்து கொண்ட திருவண்ணாமலை ஜோடி! = வீடியோ தமிழகம்

கடலுக்கு அடியில் போய் கல்யாணம் செய்து கொண்ட திருவண்ணாமலை ஜோடி! = வீடியோ

ஆழ்கடலுக்குள் திருமணம் நடத்தி அசத்தியிருக்கிறார்கள் ஐ.டி. ஊழியர்கள். சென்னையில் ஆழ்கடலுக்குள் இந்து முறைப்படி நடந்த இந்த திருமணம் இந்தியாவில் இதுதான் முதல்முறை என்பதால் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. 60 அடி ஆழ கடலுக்குள் சென்று அங்கே தோரணம் கட்டி, இந்து முறைப்படி நடந்திருக்கிறது இந்த திருமணம். சென்னை திருவான்மியூர் கடலில்தான் இந்த திருமணம் இனிதே நடந்து முடிந்திருக்கிறது. திருவண்ணாமலை வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னதுரை(29)ம், கோவை வடவெள்ளி ஸ்வேதா(26)வும் சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த […]

February 2, 2021 admin
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா!- ரிலீஸன்று தினகரன் கிளப்பிய சர்ச்சை- வீடியோ! தமிழகம்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா!- ரிலீஸன்று தினகரன் கிளப்பிய சர்ச்சை- வீடியோ!

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்பதால் தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது. சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமையும் உள்ளது. அதில் எந்த சர்ச்சையும் இல்லை. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. இது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா அதிமுக பொது செயலாளர்தான்- என்று டிடிவி தினகரன் தெரிவித்தது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய […]

January 31, 2021 admin
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன்  – முழு விபரம்! தமிழகம்

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் – முழு விபரம்!

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஓய்வு பெறுவதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஓய்வு பெற்ற சண்முகத்துக்கு தமிழக அரசின் ஆலோசகராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் உள்ளார். அவர் 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பதவி ஏற்றார். அவர் கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெற வேண்டி வந்தது. இதனால் அவரது பதவிக்காலத்தை மேலும் 3 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று […]

January 31, 2021 admin
சசிகலா நாளை டிஜ்சார்ஜ்! தமிழகம்

சசிகலா நாளை டிஜ்சார்ஜ்!

கொரோனா தொற்று முழுமையாக குணமாகி பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா நாளை வீட்டிற்கு அனுப்பப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.நாளை மருத்துவமனையிலிருந்து திரும்பும் அவர் பிப்ரவரி 3 அல்லது 5-ம் தேதி தமிழகத்திற்கு திரும்புவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை வழங்கப்பட்டது. ஆனால் திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அரசு […]

January 30, 2021 admin
ஜனவரி 31- தமிழக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்! தமிழகம்

ஜனவரி 31- தமிழக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகத்தில் வருகிற 31-ம் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் கடந்த 17-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி காரணமாக, போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 31-ம் தேதி, 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஒட்டி தமிழ் நாட்டில் உள்ள […]

January 29, 2021 admin
ஜெ. பிறந்தநாளான பிப்.24ம் தேதி அரசு விழா- முதலமைச்சர் அறிவிப்பு.! தமிழகம்

ஜெ. பிறந்தநாளான பிப்.24ம் தேதி அரசு விழா- முதலமைச்சர் அறிவிப்பு.!

சென்னை போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமை யாக்கப்பட்டு ஜெயலலிதா நினைவு இல்லம் என மாற்றப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவருடன் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் லேடி வெலிங்டன் கல்லூரியிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா வளாகம் என்று பெயர் சூட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 அடி உயரம் கொண்ட ஜெயலலிதாவின் வெண்கல சிலையை முதலமைச்சர் […]

January 28, 2021 admin
ஜெ. -வின் வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட தடை! தமிழகம்

ஜெ. -வின் வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட தடை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாகத் திறக்கத் தடைவிதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபாவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதி சேஷசாயி முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தீபக் தரப்பு வழக்கறிஞர், தங்களை வாரிசாக அறிவித்த உத்தரவில், நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய […]

January 27, 2021 admin
சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்! தமிழகம்

சென்னை மெரினா கடற்கரையில் 72வது குடியரசு தின விழா கோலாகலம்!

72வது குடியரசு தினத்தையொட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா இன்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 7.52 மணிக்கு அங்கு வந்தார். கடற்கரை […]

January 26, 2021 admin
உடனடி செய்திகள்