தலைமை தேர்தல் ஆணையர் 10ம் தேதி தமிழகம் வருகை!

தலைமை தேர்தல் ஆணையர் 10ம் தேதி தமிழகம் வருகை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 2-வது வாரத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 10-ம் தேதி சென்னை வர உள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடத்தப்படும் என கூறப்படுகிறது. தேர்தல் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 2-வது வாரத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் அட்டவணை அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார் உள்ளிட்டோர் வரும் 10-ம் தேதி சென்னை வர உள்ளனர்.

இரண்டு நாட்கள் சென்னையில் இருக்கும் அவர்கள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் மாவட்டம், தொகுதி வாரியாக தேர்தல் ஏற்பாடுகளைக் கேட்டறிகின்றனர். அதன்பின், தமிழக தலைமைச் செயலர், பல்வேறு துறைகளின் செயலர்கள், வருமான வரி, சுங்கத்துறை, வருவாய் புலனாய்வுப் பிரிவு, கலால்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

error: Content is protected !!