சசிகலா நாளை டிஜ்சார்ஜ்!

சசிகலா நாளை டிஜ்சார்ஜ்!

கொரோனா தொற்று முழுமையாக குணமாகி பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா நாளை வீட்டிற்கு அனுப்பப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.நாளை மருத்துவமனையிலிருந்து திரும்பும் அவர் பிப்ரவரி 3 அல்லது 5-ம் தேதி தமிழகத்திற்கு திரும்புவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை வழங்கப்பட்டது. ஆனால் திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியிலும் தண்டனைக் காலம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் உடல் நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து சசிகலா நாளை (ஜன. 31) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடனடயாக பெங்களூரு திரும்ப மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு – ஓசூர் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரும் 5ம் தேதி வரை தங்கி முழுமையாக ஓய்வு எடுத்தபின் பிப்ரவரி 5ம் தேதி சென்னை செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

error: Content is protected !!