32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 120 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 120)
‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். குழந்தைகளுக்கான ஒரு ஷோ! Running News2

‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். குழந்தைகளுக்கான ஒரு ஷோ!

சமீபத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி ‘கலர்ஸ் தமிழ்’. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் ‘கலர்ஸ்’ தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்கு பெயர்போனது. இந்த ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் படிப்பை தாண்டி வியக்கத்தக்க திறமைகளை கொண்ட குழந்தை மையமாக வைத்து ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ என்ற ஒரு ஷோவை தொடங்கியுள்ளனர். ”தொலைக்காட்சியை கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும் , இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை […]

March 2, 2018 admin
ஜோதிகா நடிக்கும் படத்தை ராதா மோகன் இயக்குகிறார்; தனஞ்செயன் தயாரிப்பு! Running News2

ஜோதிகா நடிக்கும் படத்தை ராதா மோகன் இயக்குகிறார்; தனஞ்செயன் தயாரிப்பு!

வெற்றிப்படமான ‘துமாரி சுலு’ (இந்தி) தமிழில் தயாராகிறது! தற்போது ராதாமோகன் இயக்கவிருக்கும் இப்படத்தில் வித்யாபாலன் விருதுபெற்ற வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்! கடந்த வருடத்தில் வெளியாகி மகத்தான வெற்றிபெற்ற ‘துமாரி சுலு’ படத்தை டிசீரிஸ் மற்றும் எல்லிப்சிப்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தத் திரைப்படத்தில் வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடிக்க… மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர்.  அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த குடும்ப & நகைச்சுவை படமான ‘துமாரி […]

February 28, 2018 admin
டிராபிக் ராமசாமி-யால் இணைந்த சீமான் & குஷ்பு! Running News2

டிராபிக் ராமசாமி-யால் இணைந்த சீமான் & குஷ்பு!

அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும் குஷ்புவும் ‘டிராபிக் ராமசாமி ‘ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை ‘டிராபிக் ராமசாமி’ என்கிற திரைப்படமாகி வருகிறது. கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இப்படத்தின் இயக்குநராக விக்கி அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படக்கல்லூரியில் திரைத் தொழில்நுட்பம் படித்தவர். ஐந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் […]

February 27, 2018 admin
எம்.ஜி.ஆர். எடுக்க விரும்பிய ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தில் ஜெயலலிதா! Running News2

எம்.ஜி.ஆர். எடுக்க விரும்பிய ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தில் ஜெயலலிதா!

மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் […]

February 26, 2018 admin
வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’ என்கிற புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்திய ஆக்டர் ஆர்கே!. Running News2

வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’ என்கிற புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்திய ஆக்டர் ஆர்கே!.

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக… தயாரிப்பாளராக…. அறியப்படுகின்ற ஆர்.கே.,வுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே. அதிலும்  ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும்விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’வின் அறிமுக நிகழ்ச்சி  சென்னை […]

February 25, 2018 admin
என்கிட்ட இவ்ளோ லவ் -வா? – கரு நாயகி சாய் பல்லவி பெருமிதம்! Running News2

என்கிட்ட இவ்ளோ லவ் -வா? – கரு நாயகி சாய் பல்லவி பெருமிதம்!

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்  இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் புதிய படம் கரு. அம்மா மகள் பாசத்தை வித்தியாசமான களத்தில் சொல்ல வந்திருக்கும் படம். இதில் பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக தமிழக இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட புகழ்பெற்ற சாய்பல்லவி ஹிரோயினாக நடித்திருக்கிறார். அவரது முதல் தமிழ்த் திரைப்படமாக கரு படம் உருவாகியிருக்கிறது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் படக்குழுவினர் இயக்குநர் விஜய், இசையமைப்பாளர் சாம், பாடலாசிரியர் கார்கி, எடிட்டர் ஆண்டனி மற்றும் […]

February 25, 2018 admin
ஆறு அத்தியாயம் – விமர்சனம் =  அரை பிரசவ அத்தியாயங்கள்!. Running News2

ஆறு அத்தியாயம் – விமர்சனம் =  அரை பிரசவ அத்தியாயங்கள்!.

ஆறு வேறு வேறு சிறுகதைகள். அனுமானுஷ்யமும், பேயும் பொதுவாய் எழுதப்பட்ட கதைகள், ஆறு குறும்  படங்களாய் எடுத்து அதன் கிளைமாக்ஸ் மட்டும் தனியாக இறுதியில் இணைகிறது. இப்படியான விசயங்கள் ஹாலிவுட்டில் அதிகம் இருக்கிறது. ஆந்தாலஜி எனச் சொல்லப்படும் இது போன்ற ஒரு பொதுவான விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை வேறு வேறு களங்களில் எழுதி எடுப்பார்கள். பாலிவுட்டில் கூட இப்போது அறிமுகமான இந்த ஃபார்மேட்டை கோலிவிட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்த 6 அத்தியாயம். இதில் ஆறு குறும்படங்கள்.. எல்லாமே பேய்க்கதைகள். மிகக் […]

February 23, 2018 admin
கேணி – திரை விமர்சனம் = கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்! Running News2

கேணி – திரை விமர்சனம் = கண்டிப்பாக எட்டிப் பார்க்க வேண்டிய படம்!

கலை, காப்பியம், பேய், பழிவாங்கல், காதல், கல்யாணம், காலேஜ்பாய், மசாலா என்று விதவிதமாய் தயாராகி, வெளியாகி காணாமல் போகும் தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற் போல் உருவாகி தனிக் கவனம் பெற்ற படம்தான் கேணி. ஆமாமுங்கோ.. வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட இந்த இந்திய திருநாட்டில் இயற்கையாகவே இணைக்கப்பட்டிருக்கும் நதிகளின் நீர் பங்கீட்டிலே இந்திய தேசிய ஒற்றுமை என்பது பல்லிளித்துக்   கொண்டிருக்கிறது. உற்பத்தியாவதாலே காவிரி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடகமும், அணையில் உரிய அளவு நீரைத் தேக்கினால் […]

February 23, 2018 admin
குடும்பத்தோடு வந்து  ரசிக்கத்தக்க படம் ‘ பதுங்கி பாயணும் தல’ Running News2

குடும்பத்தோடு வந்து ரசிக்கத்தக்க படம் ‘ பதுங்கி பாயணும் தல’

மீடியா பேஷன் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் ஆமீனா ஹுசைன் தயாரித்துள்ள புதியபடம் “பதுங்கி  பாயணும் தல” இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கிறது. . படத்தின் அறிமுக இயக்குனர் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயக்குனர்S.A.சந்திரசேகரிடம்இணை இயக்குனராகவும் இயக்குனர் சீமானிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் .இந்த படத்தில் பர்மா மைக்கேல் நாயகனாக நடித்துள்ளார் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடிக்க ,சிங்கப்பூர்தீபன், ராகுல் தாத்தா ,சிங்கம்புலி, மூவரும் காமெடியில் கலக்க ,RNR […]

February 22, 2018 admin
உடனடி செய்திகள்