32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 13 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 13)
கோலாகலமாக நடந்த ‘ஆல் பாஸ்’ இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்! Running News

கோலாகலமாக நடந்த ‘ஆல் பாஸ்’ இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்!

மைதீன் இயக்கத்தில், வடசென்னை மக்களின் இயல்பான வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ படப்புகழ் துஷ்யந்த் கதாநாயகனாகவும், ‘லியோ’ படப்புகழ் ஜனனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். திரை பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்ட இவ்விழாவில் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்யமான செய்திகளின் […]

August 16, 2026 admin
மகுடம் – விமர்சனம்! Running News

மகுடம் – விமர்சனம்!

கேமராவுக்கு முன்னால் நின்று கைதட்டல் வாங்கிய கதாநாயகர்கள் பலர், கேமராவுக்குப் பின்னால் இறங்கி ‘மேகாஃபோன்’ பிடிக்கும்போது சறுக்கிய வரலாறுகளும் உண்டு, சரித்திரம் படைத்த கதைகளும் உண்டு. அந்த வரிசையில், தனக்குள் இருக்கும் இயக்குநரை வெளிக்கொண்டு வரும் தீவிர வெறியோடு, முதன்முறையாகத் தானே இயக்கி, இரட்டை வேடத்திலும் நடித்திருக்கும் ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் களமிறங்கியிருக்கிறார் விஷால். கமர்ஷியல் ஆக்ஷன் உலகைக் கைப்பற்ற நினைத்த விஷாலின் இந்த முயற்சி, ரசிகர்களின் மனதில் அரியணையைப் பிடித்ததா அல்லது அசாத்தியச் சோதனையைக் கொடுத்ததா? […]

August 15, 2026 admin
’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’-விமர்சனம்! Running News

’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’-விமர்சனம்!

திரைக்கதை அமைப்பில் வழக்கமான ஆக்ஷன் பாதையை விடுத்து, குடும்பங்கள் கொண்டாடும் உணர்வுபூர்வமான பாதையைத் தேர்ந்தெடுத்ததற்காகவே நடிகராகச் சூர்யாவை முதலில் மனதாரப் பாராட்டலாம். இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், வயது வித்தியாசம் கொண்ட காதல் மற்றும் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை எந்தவித முகம்சுளிப்பும் இன்றி மிக இயல்பாகவும் அழகாகவும் கையாண்டு வெற்றி பெற்றுள்ளது. கதைக்களம் சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா) சிறுவயதில் பெற்றோர் பிரிவால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமண அமைப்பின் […]

August 15, 2026 admin
இணையத்தைக் கலக்கும் பிரபாஸின் புதிய ‘ஃபௌஜி’ லுக்! Running News

இணையத்தைக் கலக்கும் பிரபாஸின் புதிய ‘ஃபௌஜி’ லுக்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், இந்திய அளவில் பிரம்மாண்ட நாயகனுமாக உலா வரும் நடிகர் பிரபாஸ், சமூக வலைதளங்களில் தனது அடையாளமாகத் திகழ்ந்த ‘பாகுபலி’ படத் தோற்றத்திலான சுயவிவரப் படத்தை (Insta DP) கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், தற்போது அந்தப் படத்தை மாற்றி, தனது புதிய திரைப்படமான ‘ஃபௌஜி’ (Fauzi) படத்தின் கெட்டப்பிற்கு மாறியுள்ளார். இந்த திடீர் மாற்றம் இணைய உலகிலும், அவரது கோடி கணக்கிலான ரசிகர்களிடையேயும் உடனடியாகப் பெரும் உற்சாக […]

August 14, 2026 admin
பிரபு – சுகன்யா ஜோடி: டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மேரிகோல்ட்’! Running News

பிரபு – சுகன்யா ஜோடி: டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மேரிகோல்ட்’!

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிரைடெண்ட் ஆர்ட்ஸ், தனது 21-வது பிரம்மாண்ட படைப்பாக ‘மேரிகோல்ட்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிப்பில், சுதர்சன் இணை தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தைப் பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். தென் தமிழகத்தின் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பின்னணியில், அங்கு வாழும் மனிதர்களின் அலாதியான வாழ்வியலையும் அவர்களுக்கு இடையேயான சுவாரஸ்யமான போட்டியையும் மையமாகக் கொண்டு, குடும்பங்கள் கொண்டாடும் உணர்வுப்பூர்வமான கதையாக இத்திரைப்படம் தயாராகிறது. 31 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் […]

August 13, 2026 admin
’மொத ராத்திரி’ பட டிரெய்லர் ரிலீஸ் ஈவண்ட் ஹைலைட்ஸ்! Running News

’மொத ராத்திரி’ பட டிரெய்லர் ரிலீஸ் ஈவண்ட் ஹைலைட்ஸ்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஒரு தனியார் திருமண மண்டபத்துல Proper ஆன கல்யாணம் எப்படி நடக்குமோ அதே மாதிரி ஏற்பாடு செய்து இருந்தனர் படக்குழு. ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விழாவில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் […]

August 13, 2026 admin
‘அன்பில் அவன்’: அசோக் செல்வனின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு! Running News

‘அன்பில் அவன்’: அசோக் செல்வனின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு!

‘போர் தொழில்’, ‘ப்ளூ ஸ்டார்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்பில் அவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. ‘போர் தொழில்’ திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதையமைக்க, ஆர். கார்த்திகேயன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா […]

August 13, 2026 admin
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்! Running News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் இளன் முதன்முறையாகக் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று திரைப்பலங்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாமனார் வீட்டில் மாப்பிள்ளை: வித்தியாசமான கதைக்களம் திருமணத்திற்குப் பிறகு தனது தாய் வீட்டை விட்டு வெளியேற விரும்பாத மனைவியின் முடிவால், கணவனும் வேறு வழியின்றி மாமனார் […]

August 12, 2026 admin
குடும்ப ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு அழைத்து வருமா சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’? Running News

குடும்ப ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு அழைத்து வருமா சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’?

சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், சூர்யாவை இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான குடும்பப் பின்னணியில் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களிடையேயும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா […]

August 11, 2026 admin
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் ரிலீஸ்: ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என மிரட்டும் புதிய சினிமா! Running News

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் ரிலீஸ்: ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என மிரட்டும் புதிய சினிமா!

திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பேரெதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் ஆழமான கதை என ஒட்டுமொத்தப் படைப்பையும் இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘Yash vs Yash’ – தந்தை, மகனாக வெடிக்கும் மிரட்டல் மோதல்! ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் முதன்மைப் பாத்திரத்தில் […]

August 10, 2026 admin
உடனடி செய்திகள்