32°C
விளம்பரம்
Advertisement

பிரபு – சுகன்யா ஜோடி: டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மேரிகோல்ட்’!

admin Published: August 13, 2026 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


மிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிரைடெண்ட் ஆர்ட்ஸ், தனது 21-வது பிரம்மாண்ட படைப்பாக ‘மேரிகோல்ட்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிப்பில், சுதர்சன் இணை தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தைப் பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார்.

தென் தமிழகத்தின் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பின்னணியில், அங்கு வாழும் மனிதர்களின் அலாதியான வாழ்வியலையும் அவர்களுக்கு இடையேயான சுவாரஸ்யமான போட்டியையும் மையமாகக் கொண்டு, குடும்பங்கள் கொண்டாடும் உணர்வுப்பூர்வமான கதையாக இத்திரைப்படம் தயாராகிறது.

31 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் ஹிட் ஜோடி

இத்திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, 90-களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வெற்றி ஜோடியான பிரபு மற்றும் சுகன்யா சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். ‘செந்தமிழ்ப் பாட்டு’, ‘சின்ன மாப்ளே’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’ போன்ற மறக்க முடியாத வெற்றிப் படங்களைத் தந்த இந்த ஜோடியின் மறுஇணைவு திரை உலகிலும் ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுடன் விஜய் டிவி மூலம் புகழ்பெற்ற ரக்ஷன் மற்றும் நம்ரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் முருகன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் களம் இறங்குகிறது.

பலம் சேர்க்கும் தொழில்நுட்பக் குழு

இத்திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்க, மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர். நிர்மல் கவனிக்க, கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் மேற்கொள்கிறார். கிரியேட்டிவ் புரொடியூசராக சஞ்ஜெய் விஜய் ராகவண் பணியாற்றுகிறார்.

தென் மாவட்டங்களின் அழகையும் மனித உறவுகளின் மேன்மையையும் பேசவிருக்கும் ‘மேரிகோல்ட்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளும் டிரெய்லர் குறித்த தகவல்களும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உடனடி செய்திகள்