32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1086 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1086)
பாரின் கிரிமினல்களின் புகலிடமாகிப் போன டெல்லி! Running News

பாரின் கிரிமினல்களின் புகலிடமாகிப் போன டெல்லி!

“டெல்லி தற்போது, உலகின் வேறு எந்த பகுதிகளை விடவும் கிரிமினல்களின் புகலிடமாக மாறி உள்ளது.இதற்கு காரணம், வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம்(எப்ஆர்ஆர்ஓ) தண்டனையின்றி தப்பிக்கும் வழிகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி இருப்பது தான். இதையொட்டி டெல்லியில் பல வெளிநாட்டினர் முறையான ஆவணங்கள் இன்றி பல வருடங்கள் தங்கி உள்ளனர்.” என்று டெல்லி கோர்ட் எச்சரித்து “இப்படி முறையான ஆவணங்கள் இன்றி தலைநகரில் தங்கியுள்ள வெளிநாட்டினரை உடனடியாக கைது செய்து வெளியேற்றும்படியும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

January 10, 2014 admin
“ச்சி சசீ .. கூகுள் கசக்கும்!” – எலெக்சன் கமிஷன் முடிவு Running News

“ச்சி சசீ .. கூகுள் கசக்கும்!” – எலெக்சன் கமிஷன் முடிவு

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட போடப் பட்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணைய சீனியர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.. அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கா ளர் சேவைகளை மேம்படுத்த கூகுளுடன் கைகோக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையத் தின் இணையதளத்தை 6 மாதங்களுக்கு நிர்வகிக்கும் பொறுப்பு கூகுளிடம் ஒப்படைக்கப்பட இருந்தது.இதுதொடர்பாக கூகுள் நிறுவனத்தின் […]

January 10, 2014 admin
‘ஜில்லா’ – திரை விமர்சனம் Running News

‘ஜில்லா’ – திரை விமர்சனம்

ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு […]

January 10, 2014 admin
‘போராட்டத்தின் அடுத்தக் கட்டம் அரசியலா?’- உதயகுமாரன் கடிதம் Running News

‘போராட்டத்தின் அடுத்தக் கட்டம் அரசியலா?’- உதயகுமாரன் கடிதம்

“தமிழகத்தின் “ஆபத்தான ஆறு” கட்சிகளும் எங்கள் மக்களையும், போராட்டத்தையும் புறக்கணித்த நிலையில், “ஆதரவான நூறு” இயக்கங்கள் கைகொடுத்து உதவின. ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளின், அவற்றின் தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அவர்களும் “ஆபத்தான ஆறு” பேரோடு கைகோர்த்துக் கொண்டு, எங்களை கைவிட்டுவிடும் நிலை காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிடாத சில கட்சிகள் எங்களைத் தொடர்ந்து ஆதரித்தாலும், எங்கள் நிலை பலவீனமாகவே இருக்கிறது” என்று சுப. உதயகுமாரன் ஒரு […]

January 10, 2014 admin
டி.என்.ஏ. மாயாஜாலங்களைக காட்டும் ‘உயிர் மொழி’ Running News

டி.என்.ஏ. மாயாஜாலங்களைக காட்டும் ‘உயிர் மொழி’

ஹார்மோன் மூவி மேக்கர்ஸ் வழங்க மானவ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் உயிர்மொழி. இதில் புதுமுகங்கள் ராஜீவ், சசி, சர்தாஜ் ஆகியோர் நாயகர்களாகவும், கீர்த்தி நாயகியாகவும் அறிமுகமாகின்றனர். பாபி ஆண்டனி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ராஜா இயக்குகிறார். இவர் விளம்பர படங்கள் எடுத்தவர். படம் பற்றி அவரிடம் கேட்ட போது,”. ஐந்து இளைஞர்கள் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். ஐவரும் வெவ்வேறு ரகம். இவர்களின் தனித்தனியான காதலில் அவள் யாரை விரும்புகிறாள் என்பது […]

January 10, 2014 admin
சசிகுமார் நடிக்கும் ‘பிரம்மன்’ ஸ்டில்ஸ் Running News

சசிகுமார் நடிக்கும் ‘பிரம்மன்’ ஸ்டில்ஸ்

‘சுந்தரபாண்டியன், குட்டிப்புலி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடரந்து சசிகுமார் தற்போது ‘பிரம்மன்’ என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாடர்ன் இளைஞராக நடித்து வருகிறார்.அவருடன் சந்தானம், சூரி வேறு கலக்குகிறார்களாம். சசிகுமார் ஜோடியாக புதுமுகம் லாவன்யா நடிக்கிறார். புது இயக்குனர் சாக்ரடீஸ் படத்தை இயக்க, தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

January 10, 2014 admin
சென்னை புத்தகக் கண்காட்சி: இன்று துவக்கம்! Running News

சென்னை புத்தகக் கண்காட்சி: இன்று துவக்கம்!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி இன்று துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், தினசரி மாலை கவியரங்கம், பட்டிமன்றம், சிறப்பு சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சி நடக்கும். இதில் லட்சக்கணக்கான வாசகர்கள் பங்கேற்று புத்தகங்களை வாங்கி குவிப்பர். இம்முறை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த […]

January 10, 2014 admin
அப்பாவி தமிழர்களை அழித்த இலங்கை ராணுவம்: அமெரிக்கா ஆதாரத்திற்கு இலங்கை மறுப்பு! Running News

அப்பாவி தமிழர்களை அழித்த இலங்கை ராணுவம்: அமெரிக்கா ஆதாரத்திற்கு இலங்கை மறுப்பு!

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது,தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களின் படங்களை அமெரிக்க தூதரகம் வெளியிட்டது.ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூர்யா மறுத்துள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஒளிந்த அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது என்பது ஆதாரமற்றது என்றும் இது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய மைதானம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப்போரின்போது அப்பாவி தமிழர்கள் 40 ஆயிரம் பேர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் […]

January 10, 2014 admin
சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் -கண்டுபிடித்த தமிழர்! Running News

சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் -கண்டுபிடித்த தமிழர்!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் சுட்டெரிக்கும் சூரியனின் ஒளியைத் தன் விருப்பத்திற்கு மாற்றி இளம் வயதிலேயே சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டுப்பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.இவர் கண்டுபிடித்த சோலார் பம்ப்செட் மாநில அளவில் முதலிடம் பிடித்து டெல்லியில் நடந்த ஜூனியர் ரெட் க்ராஸ் அறிவியல் கண்காட்சியிலும் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் “யங் சயின்டிஸ்ட் விருதை பெற்றுள்ள ராஜேஷின் சோலார் மோட்டார் பைக் மாநில அளவில் முதல் பரிசு பெற்றது மட்டுமில்லாமல் […]

January 9, 2014 admin
சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில்! Running News

சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில்!

தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை எடுத்ததற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் சோனியா காந்திக்கு கோயில் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க, சோனியா காந்தியை வழிபட நினைப்பது, தெலங்கானா மாநிலத்திற்காக உயிர்த்தியாகம் செய்த ஏராளமான இளைஞர்களை அவமதிப்பது போன்றது என்று தெரிவித்துள்ளது. விஜயவாடா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான சங்கர் ராவ் என்பவர், தமது நிலத்தில் இந்த கோயிலை கட்டி வருகிறார். இதற்காக தெலுங்குதாய் வடிவில் […]

January 9, 2014 admin
உடனடி செய்திகள்