பாரின் கிரிமினல்களின் புகலிடமாகிப் போன டெல்லி!
“டெல்லி தற்போது, உலகின் வேறு எந்த பகுதிகளை விடவும் கிரிமினல்களின் புகலிடமாக மாறி உள்ளது.இதற்கு காரணம், வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம்(எப்ஆர்ஆர்ஓ) தண்டனையின்றி தப்பிக்கும் வழிகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி இருப்பது தான். இதையொட்டி டெல்லியில் பல வெளிநாட்டினர் முறையான ஆவணங்கள் இன்றி பல வருடங்கள் தங்கி உள்ளனர்.” என்று டெல்லி கோர்ட் எச்சரித்து “இப்படி முறையான ஆவணங்கள் இன்றி தலைநகரில் தங்கியுள்ள வெளிநாட்டினரை உடனடியாக கைது செய்து வெளியேற்றும்படியும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் தங்கியுள்ள உஸ்பெஸ்கிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், “தெற்கு டெல்லி ஜி.கே-1 பகுதியில் தங்கியுள்ள தனது உறவினர் நசோகாட் என்பவர், எனக்கு இந்தியாவில் வேலை வாங்கித்தருவதாக தெரிவித்து இந்தியாவிற்கு வரவழைத்தார். அதன்பின் அவர் என்னை அங்கு தங்கவைத்து வங்கதேசத்தை சேர்ந்த சில இளைஞர்களின் விருப்பத்திற்கு இணங்குமாறு கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றார். இதற்கு மறுத்த என்னை அடித்து துன்புறுத்தினார் என கூறி கடந்த 2013ம் ஆண்டு மேமாதம் போலீசில் புகார் அளித்தேன் அதனை தொடர்ந்து போலீசார், நசோகாட்டை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே நசோகாட் ஜாமீன் கேட்டு நிதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி அளித்த தீர்ப்பின் போது,” இந்த வழக்கை பொறுத்தவரை குற்றத்தின் தன்மையை பொறுத்து அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. டெல்லி தற்போது, உலகின் வேறு எந்த பகுதிகளை விடவும் கிரிமினல்களின் பாதுகாப்பான இடமாக மாறி உள்ளது. இதற்கு காரணம், வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம்(எப்ஆர்ஆர்ஓ) தண்டனையின்றி தப்பிக்கும் வழிகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி இருப்பது தான். பல வெளிநாட்டினர் முறையான ஆவணங்கள் இன்றி பல வருடங்கள் தங்கி உள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 வங்காளதேசத்தை சேர்ந்தவர்களுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, தலைநகரில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள வெளிநாட்டினரை கைது செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
அதோடு, இது பற்றி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் எவ்வளவு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது பற்றிய அறிக்கையை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. முறைகேடாக தங்கியுள்ள வெளிநாட்டினரால் நாட்டுக்கு ஆபத்து உள்ளது என உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே அவர்களை கண்டுபிடித்து அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப டெல்லி அரசு மற்றும் எப்ஆர்ஆர்ஓ கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றிய அறிக்கையை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவு பற்றிய நோட்டீஸ் டெல்லி போலீஸ் கமிஷனர் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்துள்ளார்.
Foreign criminals taking refuge here, be deported back: Court
**************************************************************
Delhi has become a safe refuge for “criminals from entire world”, a court here said and directed the city Police Commissioner to nab those foreigners, who are living in the capital without any valid documents, and deport them back to their countries.


