32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1037 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1037)
நாயைக் கல்யாணம் செய்துக் கொண்ட லண்டன் பெண்! Running News

நாயைக் கல்யாணம் செய்துக் கொண்ட லண்டன் பெண்!

நம்மூர் நடிகை திரிஷா ‘நான் மிருகங்களை அதிகம் நேசிப்பவள். என்னுடைய வீட்டில் ஏராளமாக நாய்கள் இருக்கின்றன. இவற்றினை அன்பாக கவனிக்கக்கூடிய ஒருத்தர்தான் எனக்கு கணவராக அமையவேண்டும் என காத்திருக்கிறேன்…’ என கூறியிருந்தது நினைவிருக்கும்.இந்நிலையில் லண்டனை சேர்ந்த பெண் தான் வளர்த்த நாயை திருமணம் செய்து கொண்டுள்ளார்.”இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் தற்போது மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். மேலும் என்னுடைய வாழ்க்கைத்துணையிடம் இருந்து வேறு எதையும் நான் எதிர்பார்த்து இந்த […]

March 11, 2014 admin
பெண்களால் பெண்களுக்காக  ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்திரீ’ வெப் டிவி Running News

பெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்திரீ’ வெப் டிவி

உலகிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க பெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வெப் டிவியான ஸ்திரீ.டிவி (shtree.tv) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில் முழுக்க முழுக்க பெண்களுக்கான, அதுவும் பெண்களே பங்கு பெற்று தொகுத்து வழங்கும் விதத்தில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இதன் நிகழ்ச்சிகள் பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு பெறவும் வழி வகுக்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வெப்டிவியில் அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், சட்டம், பெண்கள் விழிப்புணர்வு, சுய முன்னேற்றம், சமையல் என பல்வேறு துறைகளில் உள்ள […]

March 10, 2014 admin
ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் அசத்தும் இந்திய வம்சாவளி மாணவன்! Running News

ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் அசத்தும் இந்திய வம்சாவளி மாணவன்!

அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் நடந்த, ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி உச்சரிக்கும் (ஸ்பெல்லிங்) போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் குஷ் ஷர்மா (13) வெற்றி பெற்றான். நடந்த அனைத்து சுற்றிலும் குஷ் சர்மா தடுமாற்றம் அடையாமல் கடுமையான வார்த்தைகளுக்கான ஸ்பெல்லிங்கை சொல்லி சாதனை படைத்துள்ளான்.ஸ்பெல்லிங் மட்டுமல்லாது அந்த வார்த்தை தோன்றிய விதம் வார்த்தைக்கான பொருள் என அனைத்தையும் கூறி நடுவர்களை ஆச்சரியப்படுத்தினான் மிசௌரி மாநிலத்தின் ஜாக்ஸன் கவுன்டி ஸ்பெல்லிங் போட்டி கான்சாஸ் நகர மத்திய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. […]

March 10, 2014 admin
கண் பார்வையை பறித்து விடும் ‘க்ளாக்கோமா’  நோய் குறித்து கவனம் தேவை! Running News

கண் பார்வையை பறித்து விடும் ‘க்ளாக்கோமா’ நோய் குறித்து கவனம் தேவை!

நம்மில் பலரு‌க்கு‌ம் தலைவ‌லி‌ப் ‌பிர‌ச்‌சினை வந்து இரு‌க்கு‌ம். ஆனா‌ல் பெரும்பாலானோர் மெடிக்கல் ஷாப் அல்லது அண்ணாச்சிக் கடைக்கு போய் வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரை ஒ‌ன்றை வா‌ங்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌லும் உலக‌த்‌தி‌ல் பலரு‌க்கு‌ம் தலைவ‌லி எ‌ன்ற ஒரு ‌வியா‌தி ‌நி‌ச்சய‌ம் வ‌ந்‌திரு‌க்கு‌ம். ஒ‌வ்வொரு தலைவ‌லி‌க்கு‌ம் ப‌ல்வேறு காரண‌ங்க‌ள் இரு‌க்கலா‌ம். மாணவ‌ர்களு‌க்கு ‌வரும் தலைவ‌லிக்கு அவ‌ர்களது கண் கோளாறு காரணமாக இரு‌க்கு‌ம்.க‌ண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம். அதே சமயம் […]

March 10, 2014 admin
திமுக வேட்பாளர்கள் பட்டியல் – கருணாநிதி அறிவிப்பு Running News

திமுக வேட்பாளர்கள் பட்டியல் – கருணாநிதி அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார்.அப்போது இந்த பட்டியல் முற்றிலும் முழுமையானது என்று சொல்ல முடியாது இதில் ஒரு சில மாற்றங்கள் வரக்கூடும் என்றும் கூறி உள்ளார்.மேலும் உடனிருந்த முக ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கை நாளை (செவ்வாய் கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்தார். * மத்திய சென்னை – தயாநிதிமாறன் * […]

March 10, 2014 admin
எம்.பி./ எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை தினமும் விசாரித்து ஓராண்டில்  முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு Running News

எம்.பி./ எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை தினமும் விசாரித்து ஓராண்டில் முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையை தினமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அதிலும் ஓர் ஆண்டு காலத்திற்குள் கீழ்நிலை நீதிமன்றங்கள் முடிக்க வேண்டும் என்றும் அதே சமயம் அவ்வாறு ஒராண்டுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட நீதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் […]

March 10, 2014 admin
நிமிர்ந்து நில் விமர்சனம் Running News

நிமிர்ந்து நில் விமர்சனம்

நேர்மையாக வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கையின் நிஜம் புரிய மறுக்கிறது. இயல்பான இந்தியா லஞ்சத்தில் மட்டுமே இயங்குகிறது என்பதை ஏற்க மறுக்கும் அவன் படும் பாடும் அதற்கு அவன் கண்டறியும் தீர்வுமே நிமிர்ந்து நில்.ஆனால் படத்தின் பிற்பாதி சலிப்பையும் ஒரு அயற்சியையும் தருகிறது. இந்தியன், சாமுராய், சிட்டிசன் போன்ற படங்களின் பாதிப்புதானிது. லஞ்சம் வாங்குபவனை விட லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைக்கும் மக்கள் தான் குற்றவாளிகள் என்பதை சொல்ல நினைக்கும் படம் […]

March 10, 2014 admin
வெற்று வாக்குறுதி மக்களுக்கு தேவையில்லை! Running News

வெற்று வாக்குறுதி மக்களுக்கு தேவையில்லை!

மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் வாக்குறுதி அளித்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் அது போன்றதொரு வாக்குறுதியை அளித்திருக்கிறது. கடந்த தேர்தலின்போதும், அதற்கு முந்தைய தேர்தல்களின் போதும் 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றே காங்கிரஸூம், பாரதிய ஜனதாவும் வாக்குறுதி அளித்திருந்தன.அரசுகள் மாறின, வாக்குறுதியின் வார்த்தைகள் மாறினவே தவிர, சாராம்சம் மாறவேயில்லை. […]

March 10, 2014 admin
பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சி., வீட்டு வசதி நிறுவன பணிகள் Running News

பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சி., வீட்டு வசதி நிறுவன பணிகள்

ஆயுள் காப்பீட்டுத் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., ஆப் இந்தியாவின் கிளை நிறுவனமான எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி.,எச்.எப்.எல்., என்ற பெயரால் பலராலும் அறியப்படுகிறது. வீட்டு வசதிக் கடன் தருவதில் இத்துறை சார்ந்த நிறுவனங்களில் இதுவும் மிக முக்கியமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பல்வேறு மண்டலங்களில் உள்ள உதவியாளர் பிரிவைச் சார்ந்த 100ஐ நிரப்புவதற்காக விண்ணப்பங்கள வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரங்கள்: எல்.ஐ.சி., எச்.எப்.எல்., நிறுவனத்தின் தென் மண்டலத்தில் 15 காலியிடங்களும், தென் மத்திய […]

March 10, 2014 admin
விண்வெளி பயணத்துக்கு வெறும் 3999 ரூபாய்கள் மட்டுமே! Running News

விண்வெளி பயணத்துக்கு வெறும் 3999 ரூபாய்கள் மட்டுமே!

கொஞ்ச நாளா­கவே ’டீ குடிக்­கலாம் வாங்க…’ என்­ற ரேஞ்சில் சில நிறு­வ­னங்­கள் ”விண்­வெ­ளிக்குப் போகலாம் வாங்க…” என மக்­க­ளுக்கு அழைப்பு விடுக்க ஆரம்­பித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏற்கெ­னவே மார்ஸ் ஒன் எனும் இலாப நோக்­கற்ற (?) டச்சு நிறு­வனம் ஒன்று உல­க­ளவில் செவ்­வாயில் ப்ர்மனென்ட்டாக குடி­யேற ஆட்­களை குலுக்கலில் ஆட்களை செல்க்ட் பண்ணிக் ­கொண்­டி­ருக்­கி­றது. அதே­ போல அமெ­ரிக்க தனியார் நிறு­வ­ன­மொன்றும் நில­வுக்கு சுற்­றுலா செல்ல ஆயத்­த­மாகி வரு­கி­றது.மேலும் சில நிறு­வ­னங்­களும் 2020ஆம் ஆண்­டினைக் குறி­ வைத்து செவ்வாய், […]

March 10, 2014 admin
உடனடி செய்திகள்