பெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்திரீ’ வெப் டிவி

பெண்களால் பெண்களுக்காக  ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்திரீ’ வெப் டிவி

உலகிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க பெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வெப் டிவியான ஸ்திரீ.டிவி (shtree.tv) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில் முழுக்க முழுக்க பெண்களுக்கான, அதுவும் பெண்களே பங்கு பெற்று தொகுத்து வழங்கும் விதத்தில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இதன் நிகழ்ச்சிகள் பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு பெறவும் வழி வகுக்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Women-Web-Tv-Sthree-Tv
இவ்வெப்டிவியில் அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், சட்டம், பெண்கள் விழிப்புணர்வு, சுய முன்னேற்றம், சமையல் என பல்வேறு துறைகளில் உள்ள பெண் சாதனையாளர்களும் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் 10 நிமிடம் என்ற அளவில் ஒரு நாளைக்கு மொத்தம் 24 பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் இந்த ஸ்திரீ டிவியில் ஒளிபரப்பாகின்றன. ஆரம்பத்தில் தமிழில் மட்டுமே நிகழ்ச்சிகளை தர உள்ள இந்த ஸ்த்ரீ டிவி வெகு விரைவில் பல மொழிகளிலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை தர உள்ளது.

அத்துடன் இந்த ஸ்த்ரீ டிவி இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒளிபரப்பாகும். அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்த்ரீ டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்தவித இணைய வேக தடங்களும் இல்லாமல் ஒரே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.தொடர்ந்து பெண்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லவும், சமுதாயத்தில் பெண்களுக்கென்று ஒரு தனித்தன்மையை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஸ்த்ரீ டிவி தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என்று அறிவித்துள்ளார்கள்.