32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 81 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 81)
கவிதைகளின் ஊற்று ரூமி! Exclusive

கவிதைகளின் ஊற்று ரூமி!

அமெரிக்காவில் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் ரூமி. ஆனால் அவர் பிறந்ததோ, இந்த நவீன அமெரிக்கா உருவாவதற்குப் பல வருடங்களுக்கு முன்பு.கி.பி 1207-ம் ஆண்டு இதே செப்டம்பர் 30-ம் தேதி `பால்க்’ என்ற மத்திய ஆசியப் பகுதியில் (தற்போது ஆப்கானிஸ்தான்) ரூமி பிறந்தார். பால்க் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் பெர்சிய கலாசாரமாக விளங்கியதால் என்னவோ, அரேபிய வம்சத்தில் பிறந்தாலும் பெர்சிய மொழியில் மிகவும் ஆர்வம் உடையவராக இருந்தார். இவரின் இயற்பெயர் `முஹம்மத்’. ஆனால், அனைவரும் `ஜலாலுதீன்’ என்றே […]

September 30, 2024 admin
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்! Exclusive

பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்!

இந்த பரந்த பூமியில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அனைவராலும் அனைத்து மொழிகளிலும் தொடர்புகொள்ள முடியாது. அதாவது அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தான் மொழிபெயர்ப்பு அவசியம். இதை கவனத்தில் கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலக மொழி பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.. வடகிழக்கு இத்தாலியைச் சேர்ந்த செயின்ட் ஜெரோம், புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இருந்து பைபிளின் பெரும்பகுதியை லத்தீன் மொழியில் 5-ம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு […]

September 30, 2024 admin
உலக இதய தினம்! Exclusive

உலக இதய தினம்!

சர்வதேச அளவில் பரவலான மக்களுக்கு இதய பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியமானது. இதனை வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்.29 ஆம் தேதி ‘உலக இதய தினம்‘ அனுசரிக்கப்படுகிறது. அதாவது அம்மாவின் வயிற்றில் கரு உருவாகி, நான்கு வாரத்தில் தொடங்குகிறது முதல் இதயத் துடிப்பு. அன்று முதல் மனிதன் இறக்கும் வரை நிற்காமல் சதா சர்வ காலமும் துடித்துக்கொண்டிருக்கிறது இதயம். இதன் நான்கு அறைகள், வால்வுகள் மற்றும் ரத்த நாளங்களின் […]

September 29, 2024 admin
பூமித்தாயின் மீது பசுமைப்போர்வைப் போர்த்திய  மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்! Exclusive

பூமித்தாயின் மீது பசுமைப்போர்வைப் போர்த்திய மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்!

நம்மைச் சூழும் துயரங்களை காலம்தான் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, பிறந்த மண்ணுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி தன் வாழ்வை முழுவதுமாக மக்களுக்காக அர்பணித்தார் ஆப்பிரிக்காவின் வாங்கரி மாத்தாய். .சுற்றுச்சூழல் , வளர்ச்சி , மக்களாட்சி ஆகிய மூன்றும் தனித்தனியானவை அல்ல , மேற்கண்ட மூன்றும் ஒன்றோடொன்று சார்ந்தே இயங்குபவை என்பதை வலியுறுத்தி , அதற்காக பல முன்னெடுப்புகளை தனது ” பசுமைப் பட்டை இயக்கம் ” மூலம் செய்து […]

September 25, 2024 admin
உலக ஆறுகள் தினம்! Exclusive

உலக ஆறுகள் தினம்!

ஆண்டுதோறும் செப்டம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமை உலக ஆறுகள் தினம் கொண்டாடப்படுகிறது, இது ஆறுகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மைக்காக வாதிடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய நிகழ்வாகும். நமது சுற்றுச்சூழல் அமைப்புகள், பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களில் நதிகள் வகிக்கும் முக்கிய பங்கை இந்த நாள் வலியுறுத்துகிறது, மேலும் இந்த முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். உணவு இல்லாமல் கூட […]

September 22, 2024 admin
உலக மூங்கில் தினம் Exclusive

உலக மூங்கில் தினம்

பச்சைத் தங்கம் என்றும் ஆக்சிஜன் உருளை என்றுமழைக்கப்படும் மூங்கில் மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஏன் மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது? மூங்கில் மரத்தின் சிறப்பு என்ன, அதனை ஏன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்டாடுகின்றனர் என்பது குறித்து உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படும் சூழலில் தெரிந்து கொள்வோமா? மூங்கிலின் பயனைச் சொல்லிக்கொண்டே போகலாம். கிட்டத்தட்ட 1500 வகையான பயன்களை மூங்கில் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். இந்தியாவில் […]

September 18, 2024 admin
திமுக உருவான முழுக் கதை இதோ! Exclusive

திமுக உருவான முழுக் கதை இதோ!

திராவிட முன்னேற்றக் கழகம்  எனப்படும் திமுக 1949, செப்.17-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டது. கழகத்தின் சித்தாந்தத்தை அண்ணாவின் உடன்பிறப்புகளான கலைஞர் உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் மக்களிடையே கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு கலைஞர் தலைமையிலான நவீன திமுக உருவானது. ஆண்டுதோறும் திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் கழக உடன்பிறப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் முப்பெரும் விழாவோடு இந்த விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு கழகத்தின் 75-வது ஆண்டான பவள விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்த […]

September 16, 2024 admin
🦉ஓ.ஹென்றி…-உலகம் கொண்டாடிய கதாசிரியர் பிறந்த நாள்!🐾 Exclusive

🦉ஓ.ஹென்றி…-உலகம் கொண்டாடிய கதாசிரியர் பிறந்த நாள்!🐾

🎩சிறுகதை உலகின் தன்னிகரற்ற எழுத்தாளர். ஓ.ஹென்றி கதைகள் அதிரடி க்ளைமாக்ஸுக்காகவே புகழ்பெற்றது. கொஞ்ச சுருக் -மா சொல்வதானால் அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான `தி நியூயார்க் டைம்ஸ்’ 1909-ம் ஆண்டு தனது நிருபர் ஒருவரை அழைத்து, எழுத்தாளர் வில்லியம் சிட்னி பார்ட்டர் என்பவரை நேர்காணல் செய்யும் பணியை ஒப்படைத்தது. அந்த நிருபருக்கு ஆறு வாரம் கெடு வழங்கப்பட்டது. ஐந்து வாரம் கடந்தும் அந்த எழுத்தாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசி வாரத்தின் திங்கட்கிழமை அன்று, வில்லியம் சிட்னி பார்ட்டரின் […]

September 11, 2024 admin
அமுல் பிராண்டின் அப்பா குரியன் நினைவுகள்! Exclusive

அமுல் பிராண்டின் அப்பா குரியன் நினைவுகள்!

இன்றைக்கும் பெரும்பாலான குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒரு நிறுவனம் என்றால் அது அமுல்தான். நம்மைச் சுற்றி கொழு கொழு என்றிருப்பவர்களை அமுல் பேபி என்று அழைக்கும் அளவுக்கு இந்நிறுவனத்தின் கார்ட்டூனும் மிகப்பிரபலம். இந்த அமுல் பிராண்டின் நிறுவனர் வர்கீஸ் குரியனுக்கு பாலை அருந்த பிடிக்காது ;ஆனால் இத்தனை பேரின் தூத்வாலா (பால்காரன் )என என்னை அழைத்து கொள்வதிலேயே நிறைவு கொள்கிறேன் !என தன் வாழ்க்கை வரலாற்றில் குறிக்கிற அவருக்கு உலக உணவு பரிசு, பத்ம […]

September 9, 2024 admin
சர்வதேச எழுத்தறிவு நாள்! Exclusive

சர்வதேச எழுத்தறிவு நாள்!

ஒரு மொழியில் எளிதான வார்த்தைகளை எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பது எழுத்தறிவு என கருதப்படுகிறது. இதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8-ம் தேதி சர்வதேச எழுத்தறிவுதினம் கொண்டாடப்பட்டு வருகிறது.ஐநாவின் ஓர் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு1966-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி நடத்திய 14-வது கூட்டத்தில்தான் செப்டம்பர் 8-ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவித்தது.அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்துபொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் சர்வதேச எழுத்தறிவு தினத்தின் தலையாய நோக்கங்கள். […]

September 8, 2024 admin
உடனடி செய்திகள்