32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 80 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 80)
ஜான் பாய்ட் டன்லப்! Exclusive

ஜான் பாய்ட் டன்லப்!

ஸ்காட்லாந்து ஏர்ஷயர் என்ற இடத்தில் 1840-ல் பிறந்தவர். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் கால் நடை மருத்துவம் பயின்றார். முதலில் எடின்பர்க்கிலும், பிறகு அயர்லாந்து பெல்ஃபாஸ்டிலும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். குதிரைகள் கரடு முரடான சாலைகளில், கெட்டியான ரப்பரால் தயாரிக்கப்பட்ட கழுத்துப் பட்டையுடன் மிகவும் கனமான சுமைகளை கஷ்டப்பட்டு இழுத்து வருவதைப் பார்த்தார். அவற்றின் கஷ்டத்தை குறைக்கக் காற்று அடைக்கப்பட்ட குஷன்களை அதற்கு பதிலாக பயன்படுத்த முடியுமா என்ற சோதனையில் ஈடுபட்டார். அந்தச் சமயத்தில் (1887) […]

October 23, 2024 admin
அதிமுக எனும் கட்சி உருவான நாளின்று! Exclusive

அதிமுக எனும் கட்சி உருவான நாளின்று!

தி.மு.க.வில் இருந்து எம். ஜி.ஆர். நீக்கப்பட்ட நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை நீக்கியதை எதிர்த்து, கோர்ட்டில் எம். ஜி.ஆர். வழக்குத் தொடருவாரா? அல்லது, “நான்தான் உண்மையான தி.மு.க” என்று அறிவிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். அப்படி எல்லாம் செய்யவில்லை. அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர் அ.தி.மு.க. என்ற பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்திருந்தார். அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு எம்ஜிஆர் அதிமுகவிற்கு தலைமை தாங்கினார். கட்சிப் பதிவை விட்டுக் கொடுத்ததற்காக […]

October 17, 2024 admin
உலக வறுமை ஒழிப்பு நாள்! Exclusive

உலக வறுமை ஒழிப்பு நாள்!

வறுமை என்பது உணவு, உடை ,உறைவிடம் ,பாதுகாப்பான குடிநீர், மருத்துவம், சுகாதாரம், கல்வி கற்கும் வாய்ப்பு , பிற குடிமக்களிடம் வாழ்க்கை தரத்தை இழந்த நிலை போன்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள். பட்டினியும், வன்முறையும் வறுமைக்கு வழிவகுக்கிறது. எய்ட்ஸ், மலேரியா, டிபி போன்ற கொடிய நோய்களை விட வறுமையினால் மரணமடைந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். உலகில் 87 கோடி மக்கள் உணவின்றி வறுமையினால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் “வறுமையே உனக்கு […]

October 17, 2024 admin
சர்வதேச கை கழுவுதல் தினம் Exclusive

சர்வதேச கை கழுவுதல் தினம்

இன்னமும் நினைவில் இருந்து அகலாத கொரோனா காலத்துக்கு முன்னர் கைகளை கழுவுவதன் மூலம் உயிரை காப்பாற்றி கொள்ளலாம் என்று எவரேனும் சொல்லியிருப்பின், பலரும் வாய்விட்டு சிரித்திருப்பார்கள். ஆனால் கொரோனா தந்த பாடங்களில் ஒன்றாக கை கழுவுதலும் சேர்ந்திருக்கிறது. அக்டோபர் 15 அன்று சர்வதேசளவில் அனுசரிக்கப்படும், கை கழுவுதல் தினம் அதனை நாம் மறவாதிருக்க வலியுறுத்துகிறது. அதென்ன கைகழுவும் தினம்…’ என்று கேள்வி கேட்டவுடன் `சந்தையில் புதிது புதிதாக வரும் சோப்புகளை மார்க்கெட் பண்றதுக்கான ட்ரிக் தான், இந்தக் […]

October 15, 2024 admin
ஆர்த்ரைடிஸ் எனப்படும்  மூட்டு அழற்சி தினம்! Exclusive

ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு அழற்சி தினம்!

சர்வதேச மூட்டு அழற்சி (மூட்டு வலி) எனப்படும் ஆர்த்ரைடிஸ் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 12-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மனிதனின் செயல் பாட்டுக்கு எலும்பு மூட்டுகள் வலுவாகவும், வலி இல்லாமலும் இருக்க வேண்டும். அப்போதுதான் சோர்வு இன்றி உழைக்க முடியும். முன்னர் முதியோர்களை மட்டுமே தாக்கி வந்த மூட்டு வலியானது பல்வேறு காரணங்களால் இன்று இளைய தலைமுறையினரையும் அதிகம் பாதித்து வருகிறது. மூட்டுகள் பலமாக இருக்க நம் உடலை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் நாளிது. இத்தினம் […]

October 12, 2024 admin
தமிழ்நாட்டின் முதல் பத்திரிகையான மதராசு கூரியர் என்ற வார இதழ் மலர்ந்த நாளின்று! Exclusive

தமிழ்நாட்டின் முதல் பத்திரிகையான மதராசு கூரியர் என்ற வார இதழ் மலர்ந்த நாளின்று!

இப்ப சென்னையாகிப் போன அந்த கால மெட்ராஸில் முதன்முதலாக செய்தித் தாளைத் தொடங்கியவர் ஆங்கில அரசாங்கத்தில் வேலைபார்த்த ரிச்சர்டு ஜான்ஸன் என்பவர்தான். ‘மெட்ராஸ் கூரியர்’ என்ற பெயரில் 1785 இதே அக்டோபர் 12 ம் தேதி யில் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை, நான்கு பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அரசின் ஆதரவோடு நடந்த அந்தப் பத்திரிகைக்கு அரசு விளம்பரங்கள் குவிந்ததால் விரைவில் பக்கங்கள் ஆறாக அதிகரித்தன. மெட்ராஸ் கூரியருக்கு ஆசிரியராக இருந்த ஹக் பாயிட், பின்னர் சொந்தமாக […]

October 12, 2024 admin
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்! Exclusive

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்!

பெண் குழந்தைகளை கவுரவிப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபையால் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11 ஆம் தேதி பன்னாட்டு பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண் சிசுக் கொலைகளை தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான சமத்துவம், உரிமையை நிலைநாட்டவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த நாளில், பெண் குழந்தைகள் குறித்து சமூகத்தில் இருக்கும் பிற்போக்கு எண்ணங்களை போக்கி, ஆரோக்கியமான […]

October 11, 2024 admin
இந்திய விமானப்படை நாளின்று! Exclusive

இந்திய விமானப்படை நாளின்று!

ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.இந்தியப் பாதுகாப்புப் படை அணியின் ஒரு முக்கிய அங்கமாக இந்திய விமானப் படை உள்ளது. இந்த படையானது 1932-இல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று, இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் இருந்த சமயத்தில் உருவாக்கப்பட்டது.இந்திய விமானப்படைச் சட்டம் 1932- ன் படி இங்கிலாந்து ராயல் விமானப் படையின் ஒரு பகுதியாகவே இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. முதலில் வெறும் 25 வீரர்களைக் கொண்டு இந்திய விமானப் […]

October 8, 2024 admin
உலக பருத்தித் தினம்! Exclusive

உலக பருத்தித் தினம்!

வருடா வருடம் அக்டோபர் 7 அன்று சர்வதேச பருத்தி நாள் அனுசரிக்கப்படுகிறது, இது பருத்தியின் உலகளாவிய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும், பருத்தி மதிப்பு சங்கிலியில் விவசாயிகள், செயலிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வணிகங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் முயற்சியாகும்.விவசாயிகளுக்கு வருமானம், மக்களுக்கு ஆடை, உலகளவில் வர்த்தகம் என பல வழிகளிலும் பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் ஜவுளித்தேவையில் 27 சதவீதத்தை பருத்தி பூர்த்தி செய்கிறது. பருத்தி, துணி உலகில் 80 நாடுகளில் 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக […]

October 7, 2024 admin
ம. பொ. சிவஞானம்! Exclusive

ம. பொ. சிவஞானம்!

தாய்மொழியாம் தமிழுக்குத் தொண்டு, தமிழகத்துக்குச் சேவை, எல்லோரிடத்தும் அன்பு, எப்போதும் நேர்மை என்று வாழ்வது கடினம். ஆனால் அப்படி வாழ்ந்து காட்டியவரை மறந்துவிடுவது வெகு சுலபம் போலும்! ம.பொ.சி என்கிற ம.பொ.சிவஞானம் அப்படிப்பட்ட மாமனிதர். ஆனால் அவரை ஏனோ மறந்துவிட்டார்கள்அதாவது சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழருக்கென்று ஓர் அரசு அமைந்தாக வேண்டும். தமிழ் மொழி வளர, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளைத் தமிழர்களே நிர்ணயிக்க, தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்னும் […]

October 3, 2024 admin
உடனடி செய்திகள்