32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 79 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 79)
உலக சகிப்புத் தன்மை நாள்! Exclusive

உலக சகிப்புத் தன்மை நாள்!

மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதற்காகவே உலக சகிப்புத்தன்மை தினம் உருவாக்கப்பட்டது. காந்தியடிகளின் 125-வது பிறந்தநாளை ஒட்டி உலக சகிப்புதன்மை தினத்தை அனுசரிப்பது என ஐநா சபை முடிவெடுத்தது. பிறகு 1996-லிருந்து அமைதி மற்றும் சகிப்புத் தன்மைக்கான விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் 16 அன்று வழங்கப்படுவது என தீர்மானிக்கப்பட்டது. மக்களுக்கு அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்து வதில் சிறப்பாக செயல்படும் நபர்கள், […]

November 16, 2024 admin
சிறையில் அடைக்கப்பட்ட எழுத்தாளர்களின் சர்வதேச தினம்! Exclusive

சிறையில் அடைக்கப்பட்ட எழுத்தாளர்களின் சர்வதேச தினம்!

உலகளவில் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தணிக்கை, துன்புறுத்தல் மற்றும் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிறையில் அடைக்கப்பட்ட எழுத்தாளர் தினம் (International Day of the Imprisoned Writer) ஆண்டுதோறும் நவம்பர் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. தணிக்கை என்பது இன்று வளர்ந்து வரும் பிரச்சனையாக உள்ளது. பல அரசு நிறுவனங்கள் தங்கள் குடிமக்களை, குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிரான அரசாங்க விமர்சகர்கள், விசில்ப்ளோயர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களை உளவு பார்க்கின்றன. சில நாடுகளில், பத்திரிகை சுதந்திரம் […]

November 15, 2024 admin
பழங்குடியினரின் விடுதலை நாயகன் பிர்சா முண்டே! Exclusive

பழங்குடியினரின் விடுதலை நாயகன் பிர்சா முண்டே!

நவ.15-ம் தேதி பழங்குடி விடுதலை போராளிகளை நினைவுகூரும் நாளாக, அனுசரிக்கப்பட்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்நாளில்தான் ’பகவான்’ என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் பழங்குடியின புரட்சியாளர் பிர்சா முண்டா பிறந்தார். நவ.15 முதல் 22 வரை பிர்சா முண்டாவையும் பழங்குடியினரின் விடுதலை வேட்கையையும் போற்றும் விதமாகப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். பழங்குடியின சமூகத்தினர் முன்னெடுத்த போராட்டங்களும் புரட்சிகரமான இயக்கங்களும் வீரமும் ஒப்பற்ற தியாகமும் நிறைந்தவை. அவர்கள் கிளர்ந்தெழுந்து, நாடெங்கும் போராட்டத்தில் இறங்கி இந்திய விடுதலையில் கணிசமான பங்களிப்பை ஆற்றியுள்ளனர். […]

November 15, 2024 admin
பூதான இயக்க பிதாமகர் வினோபா பாவே நினைவு நாள்! Exclusive

பூதான இயக்க பிதாமகர் வினோபா பாவே நினைவு நாள்!

வினோபாஜி என இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்ட வினோபா பாவே, இந்திய பூமிதான இயக்கத்தின் தந்தை, இந்தியாவின் தேசிய ஆசிரியர், எழுத்தாளர், சிந்தனையாளர், அறப்போராளி மற்றும் மனித உரிமை ஆர்வலர். இந்தியாவின் மற்றொரு மகாத்மாவாக உலகத்தவரால் போற்றப்பட்டவர். மகாத்மா காந்தியின் ஆன்மீக வாரிசாகவும் கருதப்படுபவர். காந்தியம் என்பது சாத்தியமான நடைமுறையே என்பதை நிரூபித்துக் காட்டியவர்களில் முதன்மையானவர் ‘பூதான இயக்க’த்தின் தந்தை ஆசார்ய வினோபா பாவே. “காந்தியத்தை என்னைவிட நன்கு புரிந்துகொண்டவர்” என்று காந்தியாலேயே பாராட்டப்பட்டவர் வினோபாஜி. விநாயக் […]

November 15, 2024 admin
உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் Exclusive

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம்

ஆண்டு தோறும் நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படும், இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி “உலக நீரிழிவு நோய்” தினமாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய் என்பது உடலின் ஏதோ ஒரு பகுதியை மட்டும் பாதிப்பது கிடையாது. பல்வேறு வகையான நோய்களுக்கான வாசலாக அது இருக்கிறது. மேலும், ஒருவர் […]

November 14, 2024 admin
உலக கருணை நாள்! Exclusive

உலக கருணை நாள்!

உலக கருணை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது 1998-ம் ஆண்டு கருணை இயக்கம் சார்பில் தொடங்கப்பட்டது. அதன்பின் பல நாடுகள் கருணை தினத்தை கடைபிடிக்கின்றன. இந்த அமைப்பு 1997-ம் ஆண்டு டோக்கியோவில் அமைக்கப்பட்டது. இந்த இயக்கமானது மதம், அரசியல் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு விளங்குகிறது. கருணை என்பது அனைவரிடமும் அன்பு செலுத்துவது, எவ்வித பேதமுமின்றி சமரசமாக இருப்பதே கருணையின் வெளிப்பாடு. ஒவ்வொருவரும் சக மனிதனை சமமாகவும் கருணையோடும் அணுகவேண்டும் என்பதே இந்த […]

November 13, 2024 admin
சர்வதேச நகர திட்டமிடல் நாள்/உலக நகரமய நாள்! Exclusive

சர்வதேச நகர திட்டமிடல் நாள்/உலக நகரமய நாள்!

உலகளவில் குறிப்பாக இந்தியாவில் பசுமை நகரங்களை உருவாக்குவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டம், அடல் மிஷன் ஃபார் ரெஜுவெனேஷன் அண்ட் அர்பன் டிரான்ஸ்ஃபார்மேஷன் (AMRUT) மற்றும் தேசிய நகர்ப்புற புத்துணர்வுத் திட்டம் (NURM) போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த திட்டங்கள், நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், நிலையான வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன.பசுமை நகரங்களை உருவாக்குவது, நமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நிலையான மற்றும் வாழக்கூடிய உலகை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது, நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது […]

November 8, 2024 admin
உலக சுனாமி விழிப்புணர்வு நாள்! Exclusive

உலக சுனாமி விழிப்புணர்வு நாள்!

உலக அளவில் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களால் 2004 டிசம்பர் 26ஆம் தேதியை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? சுனாமி தாக்குதல் நடந்து ஆண்டுகள் 20 கடந்து விட்டாலும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அதன் ஆங்காரமான சப்தம் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அப்போது 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை கொன்ற கொடிய இயற்கை பேரழிவைான ஆழிப் பேரலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும், நவம்பர் 5 ஆம் தேதி உலக […]

November 5, 2024 admin
வேர்ல்ட் பேமஸ் சயன்ஸ் மேகசின் நேச்சர்! Exclusive

வேர்ல்ட் பேமஸ் சயன்ஸ் மேகசின் நேச்சர்!

நேச்சர் (Nature) என்பது 1869 ஆம் ஆண்டு இதே நவம்பர் 4 ஆம் நாள் தொடங்கி இன்றும் தொடர்ந்து ஆங்கில மொழியில் வெளி வந்து கொண்டிருக்கும் உண்மையான உயர்தரமான ஓர் அறிவியல் ஆய்விதழ். நேச்சர் பத்திரிகையில் கட்டுரைகளை வெளி வருவது இன்றளவும் மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது. 3,00,000க்கும் அதிகமான மூத்த விஞ்ஞானிகள் மற்றும் செயற்குழுவினர்கள் நேச்சர் பத்திரிகையைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணி வருகின்றனர், மேலும் அப்பத்திரிகை 6,00,000க்கும் அதிகமான மொத்த வாசகர்களைக் கொண்டுள்ளது. இதில் வெளியாகும் ஒவ்வொரு […]

November 4, 2024 admin
கல்லறைத் திருநாள் @ அனைத்து ஆன்மாக்கள் தினம்! Exclusive

கல்லறைத் திருநாள் @ அனைத்து ஆன்மாக்கள் தினம்!

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவ.2-ம் தேதியை இறந்தவர்களின் நினைவு நாளாகக் கடைபிடிக்கிறார்கள். இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்களின் குடும்பங்களில் மரித்த மூதாதையர்கள், பெற்றோர்கள், உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது கல்லறைகளையும் முன்னதாகவே சுத்தம் செய்து, வண்ணங்கள பூசி கல்லறைத் திருநாளன்று குடும்பத்துடன் சென்று அவற்றை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி இறைவேண்டல் செய்வார்கள். மேலும், அந்தந்த கல்லறைத் தோட்டங்களுக்கு உட்பட்ட ஆலயப் பாதிரியார்களால், இறந்தோரின் ஆன்ம இளைப்பாற சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கல்லறைகள் மீது புனித […]

November 2, 2024 admin
உடனடி செய்திகள்