32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 78 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 78)
சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம்! Exclusive

சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம்!

கட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக சதைப் போடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கின்றனர். அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. உடல் பருமனால் ஆண்டிற்கு 3 மில்லியன் மக்கள் உளகளவில் இறக்கின்றனர். உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது சராசரி உடலின் தின்ம அளவு (உயரத்துக்கு ஏற்ற எடை) 18.5 முதல் 22.9 வரை இருக்க வேண்டும். 25-லிருந்து […]

November 26, 2024 admin
இந்திய அரசியலமைப்பு நாள் எனப்படும் தேசிய சாசன தினம்! Exclusive

இந்திய அரசியலமைப்பு நாள் எனப்படும் தேசிய சாசன தினம்!

தேசிய சட்ட தினம் (சம்விதான் திவாஸ்) எனப்படும் அரசியல் சாசன நாள்/ இந்திய அரசியலமைப்பு நாள்  ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் என்பது இந்தியாவின் எல்லைகள், குடியுரிமை, மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுகளுக்கான அதிகாரங்கள், குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற அலுவலகங்கள், உச்சநீதிமன்ற உயர்நீதிமன்றங்களின் செயல்பாடுகள் நிதி பற்றிய விதிகள் தேர்தல் ஆணையம் செயல்படும் விதம் என ஒவ்வொரு செயல்பாடுகளையும், அங்குலம் அங்குலமாக மிகத் தெளிவாக வகுத்து வைத்துள்ள ஒரு கட்டளையாகும்.இவை […]

November 26, 2024 admin
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்! மறக்க முடியுமா

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்!

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு பன்னாட்டு நாளாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக கருதப்படும் “மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்” என்று அழைக்கப்பட்ட மிராபெல் சகோதரிகள் டொமினிக்கன் குடியரசில் […]

November 25, 2024 admin
உலக தத்துவ தினமின்று! மறக்க முடியுமா

உலக தத்துவ தினமின்று!

தத்துவத்தின் முக்கியத்துவத்தை, இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து, பல பிரச்னைகளுக்கு தீர்வு காண ஐ.நா சார்பில் நவம்பர் மூன்றாவது வியாழன் (நவ. 21) உலக தத்துவ தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனித நாகரிகத்தை வழிமொழிவதில் தத்துவஞானிகளின் பங்கு அளப்பரியது. நீதி, நேர்மை, அமைதி, சுதந்திரத்தை தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது. சாக்ரடீஸ் போன்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படித்துணர்ந்து நடக்க வேண்டும். இந்த தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் […]

November 21, 2024 admin
சர்வதேச மீனவர் நாள்! Exclusive

சர்வதேச மீனவர் நாள்!

நவ.21-ம் தேதியான இன்று உலக மீன்வள தினமாகும். இதையே மீனவர் தினமாகவும் கடைபிடிக்கின்றனர். ஊட்டச்சத்து மிக்க மீன்களை கிடைக்கச் செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால், இத்தொழிலில் பாதுகாப்பின்மை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உயிரைப் பணயம் வைத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோர், புயல், சூறைக்காற்று, கடல்சீற்றம் போன்றவற்றால் பாதி நாட்களுக்கு மேல் தொழிலுக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.கடலில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் ஆண்டுக்கு 35-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழக்கின்றனர். 250-க்கும் […]

November 21, 2024 admin
உலக தொலைக்காட்சி நாள்! Exclusive

உலக தொலைக்காட்சி நாள்!

மனித வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட சின்னத்திரை, அலைபேசி உள்ளிட்ட ஊடகங்கள், எதிர்மறை விளைவுகளை பல இடங்களில் ஏற்படுத்தினாலும், உலகில் நடக்கும் எந்தவொரு இடத்தில் நடக்கும் சம்பவங்கள், அறிவாற்றல் வளர்க்கும் பல்வேறு விஷயங்களை வீடுகளின் வரவேற்பறைக்குள் கொண்டு வரும், மகத்தான தொழில்நுட்ப புரட்சியை செய்து கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.இதை உணர்த்தும் வகையில் தான் ஆண்டுதோறும், நவ. 21ம் தேதியை, ‘உலக தொலைக்காட்சி தினம்’ என அறிவித்திருக்கிறது, ஐ.நா., சபை “கிறிஸ்டோபர் கொலம்பஸ் 12.10.1492-ல் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இச்செய்தியை […]

November 21, 2024 admin
உலகளாவிய குழந்தைகள் தினம்! Exclusive

உலகளாவிய குழந்தைகள் தினம்!

சர்வதேச அளவில் பல நாடுகள் குழந்தைகள் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன.இருந்தாலும் உலக குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.குழந்தைகள் நலனை நாம் கட்டாயம் பேணிக் காக்க வேண்டும். கூட்டு முயற்சி மூலம் இதை நிறைவேற்ற முடியும். எனவேதான், ஒவ்வொரு ஆண்டும் நவ.19ம் தேதியை பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினமாக அறிவித்த யூனிசெப் நிறுவனம், அடுத்த நாளான நவ.20ம் தேதியை குழந்தைகள் தினமாக அறிவித்தது. கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் […]

November 20, 2024 admin
சர்வதேச ஆண்கள் தினம்! Exclusive

சர்வதேச ஆண்கள் தினம்!

1999-ஆம் ஆண்டு மேற்கிந்திய வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் மறைந்த தனது தந்தையின் நினைவாக நவ.19 தினத்தை சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தேசத்தின் பிரசித்தி பெற்ற இருவேறு கால்பந்து அணிகள் இணைந்து ஃபிஃபா உலகக்கோப்பைக்கு தயாராகும் தினத்தை, ஆண்களின் தினத்தோடு கோர்த்து பிரபல்யப்படுத்தினார். அங்கே பற்றிக்கொண்ட ஆண்கள் தினம் விரைவில் சர்வதேச ஆண்கள் தினத்துக்கான அங்கீகாரத்தையும் பெற்றது.சர்வதேச ஆண்கள் தினத்தில், வளர்ந்த ஆண்கள் மற்றும் வளரும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுமாறு […]

November 19, 2024 admin
உலக கழிப்பறை தினம்: இந்திய முறையே ஆரோக்கியம்! Exclusive

உலக கழிப்பறை தினம்: இந்திய முறையே ஆரோக்கியம்!

உலக கழிப்பறை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அனுசரிக்கப்படுகிறது. மனிதனின் அடிப்படை தேவைகளில் முக்கியமானவை உணவு, உடை, உறைவிடம். அடுத்தபடியாக இருப்பது சுகாதாரம். அந்த அளவுக்கான முக்கியத்துவத்தை அன்றாடம் பயன்படுத்தும் கழிப்பறைகளுக்கு ஏனோ பலரும் அளிப்பதில்லை. சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கழிப்பறைகளின் தேவை, அவசியத்தை உணர்ந்து சிங்கப்பூரில் ஜாக் சிம் என்பவரால் கடந்த 2001-ம் ஆண்டு முதல்முறையாக நவ.19-ம் தேதி உலக கழிப்பறை கழகம் தொடங்கப்பட்டது. அதன்பின், […]

November 19, 2024 admin
உலக குறைப்பிரசவ தினமின்று! Exclusive

உலக குறைப்பிரசவ தினமின்று!

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் குறைமாத குழந்தை பிறப்பில் சுமார் 1 மில்லியன் குழந்தைகள் வரை இறக்கிறார்கள். உயிர்தப்பும் பிற குழந்தைகளும் கூட, வாழ்நாள் முழுவதும் குறைபாடுகளுடன் வாழ்வதற்கு வாய்ப்பு உண்டு என்று WHO தெரிவிக்கிறது.சமீபகாலத்தில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் பெரும்பாலானவர்களுக்கு குறைப்பிரசவம் என்றால் என்ன? அதை எப்படி கையாளுவது? இது நடக்காமல் தடுப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை. இதையெல்லாம் வலியுறுத்த, […]

November 17, 2024 admin
உடனடி செய்திகள்