உலக தத்துவ தினமின்று!
தத்துவத்தின் முக்கியத்துவத்தை, இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து, பல பிரச்னைகளுக்கு தீர்வு காண ஐ.நா சார்பில் நவம்பர் மூன்றாவது வியாழன் (நவ. 21) உலக தத்துவ தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனித நாகரிகத்தை வழிமொழிவதில் தத்துவஞானிகளின் பங்கு அளப்பரியது. நீதி, நேர்மை, அமைதி, சுதந்திரத்தை தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது. சாக்ரடீஸ் போன்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படித்துணர்ந்து நடக்க வேண்டும்.
இந்த தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு கூற முடியும்; நீதி, நேர்மை மற்றும் சுதந்திரத்தை தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த தத்துவங்களால் மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முடியும் என்றும், தத்துவங்களே உலகை ஆள்கின்றன என்றும் கருதப்படுகிறது.
இந்நாளில் நம் ஆந்தை ரிப்போர்ட்டர் வாசகர்களுக்காக சில தத்துவங்கள்
அன்பை பிச்சை எடுக்க கூடாது
அக்கறையை கேட்டு வாங்க கூடாது
காதலை கெஞ்சி பெறக் கூடாது
உணர்வுகளை புரிய வைக்க கூடாது📋
ஒவ்வொரு முறையும் அன்பை
நிருபித்துக் கொண்டே இருக்க
முயற்சி செய்யாதீர்கள் அது
தற்கொலையை விட கேவலமானது📋
அன்பானவர்களுக்காக
இறங்கி போவதும் தவறில்லை
நம் அன்பு புரியாதவர்களிடம்
விலகி போவதும் தவறில்லை📋
எதையும் மனம் விட்டு
பேசாத வரை எல்லாம்
மன அழுத்தமே📋
எதையும் மறக்க முயற்சித்து
நிம்மதியை இழக்காதீர்கள்
அதை அதை அப்படியே
விட்டு விடுங்கள்
காலம் மாற்றிவிடும்📋
ஒரு பிரச்சனையின் ஆயுள்
பெரும்பாலும் அதை
விடப் பெரும் பிரச்சனை
வரும் வரை தான்📋
அடுத்தவன் என்ன நினைப்பான்னு
வாழ ஆரம்பிச்சா அப்பவே உன்
நிம்மதி உன்ன விட்டு போயிடும்📋
தூக்கிவிட்ட வரை மறக்காதே
தூக்கி போட்ட வரை
கனவில் கூட நினைக்காதே📋
ஒரு பிரச்சனை என்றால்
சூழ்நிலை மட்டும் நினைக்காதீர்கள்
சில நாய் வேஷமிட்ட நரிகளின்
சூழ்ச்சியாக கூட இருக்கலாம்
என்பதை மறக்காதீர்கள்📋
நமக்கு வேண்டியது எதுவும்
நம்மள விட்டு போகாது
நம்மள விட்டு போய்ருச்சுனா
அது நமக்கானது இல்ல!
தமிழ் செல்வி