32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 49 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 49)
விஸ்கி வரிக்கு எதிரான கிளர்ச்சி கிளம்பிய தினம்! Exclusive

விஸ்கி வரிக்கு எதிரான கிளர்ச்சி கிளம்பிய தினம்!

அமெரிக்க வரலாற்றில் ஆகஸ்ட் 7 ஒரு முக்கியமான நாள். 1794ஆம் ஆண்டு இதே நாளில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன், ‘விஸ்கி வரி’க்கு எதிராகப் போராடியவர்களின் மீது 1792ஆம் ஆண்டின் குடிப்படைகள் சட்டத்தை ‘ஆழ்ந்த வருத்தத்துடன்’ பயன்படுத்தப்போவதாக அறிவித்தார். இங்கிலாந்திடமிருந்து விடுதலை அடைந்த பிறகு, அமெரிக்கா தன் உள்நாட்டுப் பொருட்கள் மீது விதித்த முதல் வரி இது. விஸ்கி வரி உருவானதன் பின்னணி: 1775 முதல் 1783 வரை நடைபெற்ற விடுதலைப் போரினால் அமெரிக்கா பெரும் கடனில் […]

August 7, 2025 admin
தேசிய கைத்தறி நாள்! Exclusive

தேசிய கைத்தறி நாள்!

இந்தியா முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவில் தேசிய கைத்தறி தினம்  National Handloom Day    அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், உள்நாட்டு கைத்தறித் தொழிலை மேம்படுத்துவதையும், நெசவாளர்களுக்கு ஆதரவு அளிப்பதையும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது சகல மாடல்களிலும் ஃபேன்சி ஆடைகள் வந்தாலும், கைத்தறியின் க்ளாஸிக்' தோற்றத்துக்கு இணை வேறெதுவும் இல்லை. இன்றும்கூட, தான் உடுத்திய திருமணப் புடவையை மகள் அவளின் […]

August 7, 2025 admin
15-வது இந்திய உறுப்பு தான தினம்: உயிர்களைக் காக்கும் உயர்ந்த செயல்! Exclusive

15-வது இந்திய உறுப்பு தான தினம்: உயிர்களைக் காக்கும் உயர்ந்த செயல்!

இன்று (ஆகஸ்ட் 3) இந்தியாவின் 15-வது உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்படுகிறது. உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உறுப்பு தானம் செய்தவர்களை கௌரவிக்கவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) இந்த தினத்தை நடத்துகிறது. உறுப்பு தானத்தின் அவசியம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உறுப்பு செயலிழப்பு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உறுப்பு […]

August 3, 2025 admin
‘தீம் பார்க்குகளின் முன்னோடி சாண்ட்டா க்ளாஸ் லேண்ட் உருவான நாளின்று’! Exclusive

‘தீம் பார்க்குகளின் முன்னோடி சாண்ட்டா க்ளாஸ் லேண்ட் உருவான நாளின்று’!

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காக்களின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. 1133-இல் லண்டனில் தொடங்கிய ‘பார்த்தலேமு ஃபேர்’ போன்ற பொருட்காட்சிகளும், 1583-இல் லண்டனில் உருவான ‘பேக்கன்’ போன்ற மனமகிழ் தோட்டங்களும் தற்கால கேளிக்கைப் பூங்காக்களுக்கான அடிப்படைகளை உருவாக்கின. 1800களின் பிற்பகுதியில், தொழிற்துறை வளர்ச்சி மற்றும் நீராவியால் இயங்கும் இயந்திர ராட்டினங்களின் கண்டுபிடிப்புகளால் இந்தப் பொழுதுபோக்கு மையங்கள் மேலும் வளர்ச்சி பெற்றன. 1860களுக்குப் பிறகு, அமெரிக்கத் தொழிலாளர்களின் பணிநேரம் குறைந்து, அவர்களுக்கு செலவழிக்கப் போதுமான ஊதியமும் கிடைத்ததால், பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்லத் […]

August 3, 2025 admin
உலக நுரையீரல் புற்றுநோய் தினமின்று! Exclusive

உலக நுரையீரல் புற்றுநோய் தினமின்று!

இன்று, ஆகஸ்ட் 1, உலக நுரையீரல் புற்றுநோய் தினமாக (World Lung Cancer day) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள், நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கும் ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் தற்போது புதிய சவால்களை எதிர்கொள்கிறது. பாரம்பரியமாக புகைப்பழக்கத்துடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட இந்த நோய், இப்போது புகைப்பிடிக்காதவர்களையும், குறிப்பாக பெண்களையும் அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் புதிய […]

August 1, 2025 admin
உலக சாரணர்  ஸ்கார்ஃப் தினம்! Exclusive

உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்!

உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம், (Scout Scarf Day ) ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள், உலகெங்கிலும் உள்ள சாரணர்கள், சாரணர் இயக்கத்தின் நிறுவனரான இராபர்ட் பேடன்-பவல் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கத்தின் கொள்கைகளையும், சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய சேவைகளையும் நினைவில் கொள்ளும் ஒரு தினமாகும். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், இளைஞர்களை உடல், மனம், ஆன்மா என அனைத்து வகையிலும் ஆரோக்கியமானவர்களாகவும், சமூக பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்குவது. “ஒருமுறை சாரணரானால், எப்போதும் சாரணரே” […]

August 1, 2025 admin
இந்தியாவில் செல்போன் சேவையின் துவக்க தினமின்று! Exclusive

இந்தியாவில் செல்போன் சேவையின் துவக்க தினமின்று!

இன்றைய தினம் (ஜூலை 31) இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் ஒரு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். சரியாக 1995 ஆம் ஆண்டு இதே நாளில் தான், இந்தியாவில் முதன்முதலில் வணிக ரீதியிலான செல்போன் சேவை தொடங்கப்பட்டது. அன்றைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராம் டெல்லியில் இருந்தபடி, மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதி பாசுவுடன் கொல்கத்தாவில் பேசினார். இதுவே இந்திய மண்ணில் பதிவான முதல் அதிகாரப்பூர்வ செல்போன் அழைப்பு.   ஆனாலும் அதற்கு அடுத்த ஆண்டு 1996 […]

July 31, 2025 admin
சர்வதேச நட்பு தினமின்று! Exclusive

சர்வதேச நட்பு தினமின்று!

மகிழ்ச்சி, இன்பம், துன்பம் என அனைத்து சூழல்களிலும் துணையாக இருப்பவர்களே உண்மையான நண்பர்கள். அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு ‘நண்பர்கள்’. மற்ற உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வுசெய்யக்கூடியது. அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல வேறுபாடுகளை கடந்தது நட்பு மட்டுமே. சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம். நண்பர்கள் தினம் பல நாடுகளில், வெவ்வேறு தேதியில் கடைபிடிக்கப்படுகிறது. அதே சமயம் ஆண்டுதோறும் ஜூலை 30 ஆம் தேதி […]

July 30, 2025 admin
ORS தினமின்று – உயிர்காக்கும் எளிமை மற்றும் உலகளாவிய வெற்றி! Exclusive

ORS தினமின்று – உயிர்காக்கும் எளிமை மற்றும் உலகளாவிய வெற்றி!

பெரும்பாலானோருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும். சிலருக்கு ஏற்படாமல் போயிருக்கலாம். ஆனால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால்  ஒரு போதும்  அதை அலட்சியம் செய்யக் கூடாது. உயிரையே பறித்துவிடும் அளவுக்கு மோசமானது இது. வயிற்றுப்போக்கால், ஒரு நாளைக்கு 1,600 வீதம், வருடத்துக்கு 6 லட்சம் குழந்தைகள் உலகம் முழுக்க மரணமடைகிறார்கள். இவர்களில், பெரும்பாலும் உயிரிழப்பது இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளே. எனவே, பெற்றோர் விழிப்புஉணர்வுடன் செயல்படவேண்டியது அவசியம். வயிற்றுப்போக்கால் இரு முக்கிய பிரச்னைகள் ஏற்படும். ஒன்று நீர்ச்சத்துக் குறைபாடு, மற்றொன்று ஊட்டச்சத்துகளை இழப்பது. […]

July 29, 2025 admin
பன்னாட்டு புலிகள் தினம்! Exclusive

பன்னாட்டு புலிகள் தினம்!

நாம் பிறக்கும் முன்னரே இருந்த வனாந்திரம் எனப்படும் இயற்கையை விரும்புபவர்களுக்குப் புலிகள் பிடிக்கும். புலிகளைத் தவிர்த்துவிட்டுக் காடுகளைப் பாதுகாக்க முடியாது. புலிகளைப் பாதுகாப்பது என்பது மனிதர்களைக் காப்பது என்பதே பொருள். புலிகள் சுதந்திரமாகப் பாதுகாக்கப்பட்டால் காடுகளையும், காட்டில் வாழும் மற்ற விலங்குகளையும், உயிரினங்களின் உணவுச் சங்கிலியையும் காப்பாற்றிவிட்டோம் என்றே அர்த்தம். அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த 2010ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது […]

July 29, 2025 admin
உடனடி செய்திகள்