பன்னாட்டு புலிகள் தினம்!
நாம் பிறக்கும் முன்னரே இருந்த வனாந்திரம் எனப்படும் இயற்கையை விரும்புபவர்களுக்குப் புலிகள் பிடிக்கும். புலிகளைத் தவிர்த்துவிட்டுக் காடுகளைப் பாதுகாக்க முடியாது. புலிகளைப் பாதுகாப்பது என்பது மனிதர்களைக் காப்பது என்பதே பொருள். புலிகள் சுதந்திரமாகப் பாதுகாக்கப்பட்டால் காடுகளையும், காட்டில் வாழும் மற்ற விலங்குகளையும், உயிரினங்களின் உணவுச் சங்கிலியையும் காப்பாற்றிவிட்டோம் என்றே அர்த்தம். அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த 2010ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கில், புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

புலிகளின் சோகமான வரலாறு: ஒரு வீழ்ச்சி மற்றும் எழுச்சி
புலிகளின் வரலாறு உண்மையில் வலி நிறைந்தது. 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புலிகள் இருந்தன. இதில் சுமார் 80 சதவிகிதம் புலிகள் இந்தியாவில் வசித்தன. ஆனால், 18-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் புலிகளுக்கான அழிவு காலம் பெரிய அளவில் தொடங்கியது.
புலி வேட்டையை இந்திய மன்னர்கள் வீரத்தின் அடையாளமாகக் கருதினார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் இது வீர விளையாட்டாக ஊக்குவிக்கப்பட்டது. அதிக புலிகளை வேட்டையாடிக் கொல்பவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதனால் வேட்டைச் சங்கங்களும் பெருகின. ஜெய்ப்பூர் மகாராஜாவின் வேட்டைச் சங்கத்திற்கு கிரேக்க மன்னர் ஜார்ஜ் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து மன்னர்கள், இளவரசர்கள் விருந்தினர்களாக வந்து தங்கி, புலிகளை வேட்டையாடியுள்ளனர்.
1950 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் 18,000 புலிகள் இருந்த நிலையில், 1960 ஆம் ஆண்டுகளில் இவை 15,000 ஆகக் குறைந்தது. மத்திய அரசு முதன்முதலில் 1972 ஆம் ஆண்டில் புலிகளுக்கான கணக்கெடுப்பை நடத்தியது. இதில் இந்தியாவில் வெறும் 1,827 புலிகள் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இந்தக் கணக்கு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இதனைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு “புராஜெக்ட் டைகர்” திட்டம் துவங்கப்பட்டது. புலிகள் காக்கப்பட வேண்டிய விலங்கினப் பட்டியலில் சேர்த்து, அதற்கான காப்பகங்கள் அமைக்கப்பட்டுப் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போதைய நிலை: ஒரு நம்பிக்கை ஒளி
இந்த முயற்சிகளின் விளைவாக, புலிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், புலிகளின் எண்ணிக்கை 3,167 முதல் 3,925 வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டது, இது உலகளவில் உள்ள காட்டுப் புலிகளில் 75% ஆகும். சமீபத்திய பதிவுகளில், உலகளவில் 5,500 காட்டுப் புலிகளில் 3,000 இந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 3,000 முதல் 3,682 புலிகள் உள்ளன. இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை கடந்த முப்பதே ஆண்டுகளில் வேட்டையாடுதல், விஷம் வைத்துக் கொல்லுதல் போன்ற காரணங்களினால் ஏறத்தாழ பதினேழு மடங்கு குறைந்திருந்தது என்ற கசப்பான உண்மையிலிருந்து, இப்போது ஒரு மீட்சியைக் கண்டுள்ளோம்.
புலிகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்
பூனை குடும்பத்தைச் சேர்ந்த புலிகள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விலங்குகள். அவற்றைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே:
- தனிமையான வேட்டைக்காரர்கள்: புலிகள் பெரும்பாலும் காட்டு விலங்குகளின் தனிமையை விரும்புபவர்களாகக் கருதப்படுகின்றன. அவை தனியாக வேட்டையாடுகின்றன, முக்கியமாக மான்களை வேட்டையாடுகின்றன. ஒருமுறை 18 கிலோகிராம் இறைச்சியை உண்ணக்கூடியவை.
- தனித்துவமான கோடுகள்: மனிதர்களின் கைரேகைகளைப் போலவே, ஒவ்வொரு புலியின் உடலிலும் உள்ள கோடுகளும் அந்தப் புலிக்கு தனித்துவமானவை.
- சக்திவாய்ந்த வேட்டைக்காரர்கள்: மனிதர்களை விட ஆறு மடங்கு கூர்மையான புலன்கள் கொண்ட புலிகள் வலிமைமிக்க வேட்டைக்காரர்கள். அவை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியவை மற்றும் 10 மீட்டர் உயரம் வரை தாண்டக்கூடியவை.
- பிரதேச விலங்குகள்: ஒரு புலி பொதுவாக சுமார் 30 சதுர மைல் பரப்பளவைத் தன் எல்லையாகக் கொண்டுள்ளது. இந்த பகுதிக்குள் மற்றொரு புலி நுழைந்தால், சண்டை கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது.
- நீண்ட ஆயுள் மற்றும் இனப்பெருக்கம்: புலிகள் பொதுவாக 15 முதல் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. அவற்றின் கர்ப்ப காலம் வெறும் 105 நாட்கள்தான், அதன் பிறகு ஒரு புலி 2 முதல் 6 குட்டிகள் வரை ஈனும்.
- காட்டின் ராஜா? முழுமையாக இல்லை: சிங்கங்கள் பெரும்பாலும் “காட்டின் ராஜா” என்று அழைக்கப்பட்டாலும், ஒரு புலி தனியாக மோதும்போது சிங்கத்தை வெல்லக்கூடிய வலிமையையும் சுறுசுறுப்பையும் கொண்டுள்ளது.

புலிகளின் வாழ்க்கையும் முக்கியத்துவமும்
முன்னரே சொன்னது போல் ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அக்காடு அனைத்து வகையிலும் வளமான காடாகக் கருதப்படும். பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலிகளின் உடலில் உள்ள கோடுகள் ஒவ்வொரு புலிக்கும் தனித்துவமானவை. 15 முதல் 25 வருடங்கள் வரை வாழும் இவை உண்மையில் ஒரு தனிமை விரும்பி. மான்களை விரும்பி உண்ணும் புலிகள் 2 முதல் 6 குட்டிகள் போடும். இதன் கர்ப்ப காலம் 105 நாட்கள்தான்.
புலிக் குட்டிகளின் வளர்ப்பு முறை மிகவும் சுவாரஸ்யமானது:
-
16 வார கர்ப்ப காலத்துக்குப் பின்னர், 3 முதல் 4 குட்டிகளை தாய்ப் புலி பெற்றெடுக்கும்.
யாருமற்ற குகை, அடர்ந்த புல்வெளிப் பகுதி போன்ற மறைவிடத்தில்தான் குட்டிகளை தாய்ப் புலி பெற்றெடுக்கும். புலிக்குட்டி பிறந்தவுடன் அதற்கு உடனடியாக கண் தெரியாது. அது முழுமையாக தாயைச் சார்ந்துதான் இருக்கும். 6 முதல் 12 நாட்களுக்கு பிறகுதான் புலிக்குட்டிக்கு கண் தெரியும். பிறந்த புலிக்குட்டிகளில் பல்வேறு காரணங்களால் சில குட்டிகள் இடையிலேயே இறந்துவிடும்.
. முதல் இரண்டு மாதங்கள், தன் குட்டிகளை விட்டு தாய்ப் புலி எங்கும் செல்லாது. தேவைப்படும் பட்சத்தில் தன் குட்டிகளின் கழுத்துப்பகுதியில் பல்லால் மென்மையாக கடித்து தூக்கிக்கொண்டு செல்லும். எட்டு வாரங்கள் கழித்து தன் குட்டிகளுக்கு வேட்டையாடுவது எப்படி என தாய்ப் புலி சொல்லிக்கொடுக்கும். இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் குட்டிப்புலிகள், தாய்ப் புலியை விட்டு தனியாகச் செல்லும்.
- நான்காம் மாதத்திலிருந்து எட்டாம் மாதம் வரை குட்டிகள் தாயுடன் நீண்ட தூரம் பயணித்து, மோப்பம் பிடிப்பது, முன்னங்கால்களால் சண்டையிடுவது, தனது பலத்திற்கேற்ற இறை விலங்கினைத் தேர்வு செய்வது, அவற்றை வேட்டையாடி வீழ்த்துவது, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, காட்டெருது போன்ற ஆபத்தான விலங்குகளிடம் காயம்படாமல் நேர்த்தியாக வேட்டையாடுவது போன்றவை தாய்ப்புலியால் குட்டிகளுக்குக் கற்றுத் தரப்படும்.
- இதன் பின்னர் தாய்ப்புலி தனது குட்டிகளைத் தனித்துச் செயல்பட அனுமதிக்கும்.
தனியாகவே வேட்டையாடும் இவை 18 கிலோ எடை இறைச்சியை உண்ணும். தனியாக மோதினால் சிங்கத்தை வெல்லக்கூடிய ஆற்றல் படைத்தது புலி. மனிதனை விட 6 மடங்கு கூர்மையான ஆற்றல் கொண்ட புலிக்கு 30 மைல் சுற்றளவை தனது எல்லையாகக் கொண்டு வாழும். அதில் வேறொரு புலி வந்தால் சண்டைதான். 60 கி.மீ. வேகத்தில் ஓடும். 10 மீட்டர் வரை உயரம் தாண்டும். புலிகளின் எல்லையை ஏற்படுத்த மரத்தில் நகங்களை வைத்து கீறி வெளிப்படுத்தும் அல்லது சிறுநீர் மூலம் அதன் எல்லையை மற்ற புலிகளுக்கு தெரியப்படுத்தும். அவ்வாறு அதனையும் மீறி ஒரு புலி உள்ளே வருகிறது என்றால் இரண்டு புலிகளுக்கும் எல்லை சண்டையானது நடக்கும். அதில் யார் வெற்றி பெறுகிறோர்களோ அது அந்த இடத்தில் இருக்கும். இதுதான் புலிகளின் குணாதிசியம். புலிகளுக்கு கண்பார்வை மிகவும் துல்லியமானது. ஆனால் நுகர்திறன் யானைகள் மற்ற மிருகங்களை விட சற்று குறைவு தான்.
வனத்தில் மனிதர்களால் நடத்தப்படும் அத்துமீறல்களால் புலிகளின் வாழ்விடம் சுருங்கி வருவதால், அவை காப்பகங்களை விட்டு காப்புக் காடுகளிலும் வாழத் தொடங்கிவிட்டன. புலிகள் நமது சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. அவற்றின் பாதுகாப்பு, நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய ஒரு பணி. நமது வருங்கால சந்ததியினருக்காக இந்தப் பெருமைமிக்க விலங்குகளைப் பாதுகாப்போம்.
நிலவளம் ரெங்கராஜன்



