Exclusive
ரொம்ப நல்ல முதலமைச்சர் என்று பேரெடுத்த ஓமந்தூரார் நினைவு நாளின்று!
இந்திய சுதந்திரத்துக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அன்றைய சென்னை மாகாணத்து முதலமைச்சரான பிரகாசம், பல தவறுகளுக்கு அடித்தளம் இடுபவராக இருந்தார். அவரை மாற்றுவதற்கு ராஜாஜியும் காமராஜரும் திட்டமிட்டார்கள். அடுத்ததாக யாரைக் கொண்டு வரலாம் என்று யோசித்தார்கள். அவர்கள் மனதில் உதித்தார் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் சத்தியமூர்த்தியை வென்றவர் அவர். இவருக்கே அனைத்துத் தகுதிகளும் இருப்பதாக ராஜாஜியும் காமராஜரும் நினைத்தார்கள். ஓமந்தூராரிடம் இவர்கள் கேட்டார்கள். இருவருமே […]