32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 147 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 147)
ஐன்ஸ்டீன் – விஞ்ஞான உலகத்தையே வியக்க வைத்தவர்! Running News

ஐன்ஸ்டீன் – விஞ்ஞான உலகத்தையே வியக்க வைத்தவர்!

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு […]

March 14, 2014 admin
“எனக்கு சான்ஸ் இல்லை.நான் ஒழிஞ்சு போறேன்,செத்துப்போறேன்’’ – சந்திரபாபு பிளாஷ்பேக் Running News

“எனக்கு சான்ஸ் இல்லை.நான் ஒழிஞ்சு போறேன்,செத்துப்போறேன்’’ – சந்திரபாபு பிளாஷ்பேக்

சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஜெமினி ஸ்டுடியோவில் விஷம் குடித்து சுருண்டு கிடந்தார் சந்திரபாபு. அப்போது இரவு 1.30 மணி. ஜெமினி கணேசன் உள்ளிட்ட படக்கம்பெனி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். முதலுதவி முடிந்ததும், தற்கொலைக் குற்றவாளி என்ற வகையில் இன்ஸ்பெக்டர் ரங்காச்சாரி கேள்வி கேட்கிறார். “உன் பெயர் என்ன?’’ “சந்திரபாபு’’ “தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தாயா?’’ “ஆமாம்’’ “ஏன்’’ “சினிமாவில் நடிக்க வந்தேன், சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதிருக்கட்டும், எனக்கு இப்போ […]

March 8, 2014 admin
இந்திய தேசிய அறிவியல் தினம் -பிப்ரவரி 28 Running News

இந்திய தேசிய அறிவியல் தினம் -பிப்ரவரி 28

தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் பிறந்து , உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபல் பரிசு பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத் தான் 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.தமிழக மண்ணில் பிறந்த அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு […]

February 27, 2014 admin
ஜெ. சினிமா நடிகையான கதை! Running News

ஜெ. சினிமா நடிகையான கதை!

இன்றைய தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா புரட்சித் தலைவி, அம்மா என்று எத்தனையோ பட்டங்களால் அழைக்கப்பட்டாலும் திரைப்படத் துறையில் புகழ் பெற்ற நடிகையாக இருந்தபோது அவர் கலைச் செல்வி ஜெயலலிதா என்றுதான் அழைக்கப்பட்டார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை திரைத் துறைக்கு அழைத்து வந்தது விதி. 1964ம் ஆண்டு குமுதம் இதழில் ஜெயலலிதாவின் தாயார் நடிகை சந்தியா எப்படி தன் மகள் ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புக்கள் வந்தது என்பதையும், அவர் நடிகையான பின்ணணியையும் […]

February 24, 2014 admin
எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம் Running News

எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்

தமிழ் இலக்கிய உலகில் ‘ஜே.கே’ என்று அழைக்கப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றலில் பாதிப்பால் அவதியுற்று வந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதால் சென்னை – வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிராத்தனை செய்கிறோம். தமிழ்ச்சிறுகதை உலகில் இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் உலகின் தரத்துக்கு உகந்த கதைகளை எழுதித் தமிழையும் தங்களையும் உயர்த்திக் கொண்ட ஒரு […]

February 23, 2014 admin
உலகத் தாய் மொழி தினம் – பிப் = 21 மறக்க முடியுமா

உலகத் தாய் மொழி தினம் – பிப் = 21

ஆரம்பத்தில் சைகையும் அதையடுத்து குரல் மூலமும் பின்னாளில் ஒருவருக்கொருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பல்வேறு இனத்தின் அடையாளமாக மாறி விட்டது என்றுதான் சொல்ல வெண்டும். இன்றளவும் உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. சர்வதேச அளவில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. அதே போல் உலகத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்னாடி கிட்டத்தட்ட 6,200 ஆக இருந்த மொழிகள் இன்னிக்கு, 3,000க்கும் குறைவாக […]

February 21, 2014 admin
எனது காலத்திலேயே அழிந்து போன எனது படங்கள் By  பாலு மகேந்திரா! Running News

எனது காலத்திலேயே அழிந்து போன எனது படங்கள் By பாலு மகேந்திரா!

அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற – வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” படம் இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான சர்வதேச திரைப்படவிழா ஒன்றில் காண்பிக்கப்படுவதாக இருந்தது.அந்தத் திரைப்படவிழாவுக்கென்று எனது படத்தின் புதிய பிரதியொன்றை எடுத்துக் கொடுக்க எண்ணிய நான், அந்தத் படத்தின் நெகட்டீவை வெளியே எடுத்தபோதுதான் தெரிந்தது – “வீடு” படத்தின் நெகட்டீவ் முழுவதுமாக கெட்டுப்போய்,மேற்கொண்டு ஒரு பிரதிகூட எடுக்க […]

February 14, 2014 admin
உலக வானொலி தினம் – பிப்=13 மறக்க முடியுமா

உலக வானொலி தினம் – பிப்=13

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.இந்நிலையில்தான் ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை […]

February 13, 2014 admin
பிரமிக்க வைக்கும் பில்கேட்ஸ்! Running News

பிரமிக்க வைக்கும் பில்கேட்ஸ்!

உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது. வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ […]

February 11, 2014 admin
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்?-கண்ணதாசன் சொன்ன உண்மைகள்! Running News

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்?-கண்ணதாசன் சொன்ன உண்மைகள்!

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் இப்போதும் சுவாரஸ்யத்தை தருகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று […]

February 7, 2014 admin
உடனடி செய்திகள்