இந்திய தேசிய அறிவியல் தினம் -பிப்ரவரி 28

இந்திய தேசிய அறிவியல் தினம் -பிப்ரவரி 28

தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் பிறந்து , உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபல் பரிசு பெற்றவர் சர்.சி.வி. ராமன். அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத் தான் 1987ம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.தமிழக மண்ணில் பிறந்த அறிவியல் மேதை சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 28ம் தேதி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க்து/அநேகமாக. தேசத் தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கொண்டாடுவது போலவே அறிவியல் மேதைகளையும் போற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்திய அரசு சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற தினமான பிப்ரவரி 28ம் தேதியை 1987ம் ஆண்டு தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது.

அரும்பெரும் விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகளால் உலகம் வேகமாக மாறி வருகிறது. இதையொட்டி அவர்கள் சந்தித்த சோதனைகளும், அடைந்த சாதனைகளும் வார்தைகளில் கண்டுபிடிப்புகளால் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகாராஜாக்கள், மகாராணிகள் கூட வாழாத சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இயற்கையில் இயல்பாய் தோன்றும் மாற்றங்கள் சில. மனிதனின் அறிவுக் கூர்மையினாலும், விடாமுயற்சியினாலும் உருவாக்கப்படும் மாற்றங்கள் பல. மனிதனின் அறிவுத்திறன் பெருகப் பெருக இயற்கையின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதிய கண்டுபிடிப்புகளும் அறிவியல் உண்மைகளும்மலர்ந்த்உ கொண்டே இருக்கின்றன. மனிதனின் முடிவில்லாத முயற்சியின் காரணமாக அன்று மண்ணை அளந்தவன் இன்று விண்ணை அளக்கிறான். ஞானம் முதிர்ந்தது. விஞ்ஞானம் கனிந்தது.

அப்படிய கனிய வைக்கவே 1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி மாங்குடி என்ற ஊரில் சந்திரசேகரய்யர், பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் சர்.சி.வி.ராமன். இயற்பெயர் வெங்கட்ராமன். இளம் பருவத்திலேயே கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் திறமையோடு விளங்கினார். இளங்கலையில் தங்கபதக்கம் பெற்றுத் தேர்வானார். அவருடைய 18 வயதில் அவரது முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது.

1917 முதல் 1933 வரை பேராசிரியர் பதவி வகித்தார் ராமன். அப்போது தான் அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு ‘சர்‘ பட்டம் வழங்கி கவுரவித்தது. 1933 முதல் 10 ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவன இயக்குனராகப் பணியாற்றினார்.

இதற்கிடையில் 1921ம் ஆண்டு, லண்டனில் உலகப் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய சபையில், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் சர்.சி.வி.ராமன் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது?வானத்தின் நிறமா? வானம் மேகமூட்டத்துடன் கறுப்பாக இருக்கும்போதும், தொடர்ந்து அலைகள் வரும்போதும் கடல் எப்படி நீலநிறமாக உள்ளது, என்று பலப்பல கேள்விகள் உருவானது. திடீரென்று சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் கடல் நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.

சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆராய்ந்தார். முப்பட்டகக் கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள் செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரிவதை 1928ல் கண்டுபிடித்தார்.ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் “ராமன் கோடுகள்” என்றும், அந்த விளைவு “ராமன் விளைவு” என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது.

ஒளிச்சிதறல் பற்றி அறிக்கை தயாரித்து, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் கழகத்துக்கு அனுப்பினார்.அந்த முறை நோபல் பரிசு தனக்குத்தான் கிடைக்கும் என்று தன் படைப்பின் மீது அதீத நம்பிக்கை கொண்ட அவர் நவம்பர் மாதம் நடைபெறும் விழாவிற்காக ஜுன் மாதமே டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு முதல் முதலாக நோபல் பரிசு அளிக்கப்பட்டதும் அப்போதுதான். நோபல் பரிசு பெற்ற அவரின் கண்டுபிடிப்பான ‘ராமன் நிறத்தோற்றம்‘

பின்னர் 1943ம் ஆண்டு தமது பெயரில் பெங்களூரில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 1948ல் அவர் தேசியப் பேராசிரியர் ஆனார். பலப்பல விருதுகளும் பதவிகளும் அவரைத்தேடி வந்தன. 1954 ல் நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத் ரத்னா‘ விருதும், 1957ல் ‘சர்வதேச லெனின் விருதும்‘ அவருக்கு வழங்கப்பட்டன. உலகம் போற்றும் மேதையாக விளங்கிய சர்.சி.வி.ராமன் 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமது 82வது வயதில் காலமானார்.அறிவியல் துறையின் அடிப்படை. தேசிய அறிவியல் தினத்தில் சர்.சி.வி.ராமனை நினைவு கொள்வதோடு மட்டுமின்றி அறிவியல் சிந்தனைகளை வளர்த்து, புதிய கண்டு பிடிப்புகளை வரவேற்று, வளர்ச்சிகளைப் பாராட்டி விஞ்ஞானிகளை ஆதரிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என்றால் அது மிகையாகாது..

Related Posts

error: Content is protected !!