32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 146 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 146)
காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்! – மே -25 Running News

காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்! – மே -25

திருவிழாவில் குழந்தைகள் காணாமல் போகும் அனுபவம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஆனாலும் காணாமல் போன குழந்தைகளை பெற்றோர் தேடிக் கண்டு பிடித்துவிடுவார்கள். அல்லது குழந்தைகள் பெற்றோர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொள்வார்கள். திருவிழாவிலே குழந்தைகள் காணாமல் போகும் அந்தக் கணங்கள் குழந்தைகளுக்கம் தாய்மாருக்கும் கொடியதொரு பதைபதைப்பாகவே இருக்கும்.இந்நிலையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. பல குழந்தைகள் தாங்கள் […]

May 25, 2014 admin
சினிமாவும் நானும்….! – , பாலுமகேந்திரா Blogspot (பிறந்த நாள் ஸ்பெஷல் ரிமைண்டர்) Running News

சினிமாவும் நானும்….! – , பாலுமகேந்திரா Blogspot (பிறந்த நாள் ஸ்பெஷல் ரிமைண்டர்)

நண்பர்களே…என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும் மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும் சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை. இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லட்சுமி அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் செந்தாமரையும் சரஸ்வதி வீற்றிருப்பதாக சொல்லப்படும் வெண்தாமரையும் சேற்றில் தானே மலர்கின்றன.பாலுமகேந்திரா என்ற சேற்றில் இருந்து […]

May 20, 2014 admin
உலக செவிலியர் நாள் கொண்டாட காரணமான நைட்டிங்கேல்! மறக்க முடியுமா

உலக செவிலியர் நாள் கொண்டாட காரணமான நைட்டிங்கேல்!

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நர்சுகள் என்று பெரும்பாலானோரால் சொல்லப்படும் செவிலியர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. அதிலும் ஜனவரி 1974-இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளையொட்டியே இந்த உலக செவிலியர் தினம் கொண்டாடப் படுகிறது.1820-ல் இத்தாலியின் ஃப்ளாரன்ஸில் பிறந்த நைட்டிங்கேல், நவீன செவிலியியல் முறையை உருவாக்கியவர். 1853-ல் கிரைமிய போரின்போது, காயமடைந்த […]

May 12, 2014 admin
மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண கோலாகலம் + வரலாறு! Running News

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண கோலாகலம் + வரலாறு!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழாவின் சிகரம் வைத்தது போல மீனாட்சி சுந்தரேசுவரர் திருக் கல்யாணம் இன்று காலை 10.30 மணி முதல் 10.54 மணிக்குள் கோயில் மேல, வடக்காடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து அருள்மிகு சுப்பிரமணியர், தெய்வானையுடன் வெள்ளிக்கிழமை புறப்பாடாகி வந்தார்.திருக்கல்யாணம் முடிந்ததும் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்.இதையடுத்து இரவில் ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மன், […]

May 10, 2014 admin
எழுத்து மின்சாரம்  ஜெயகாந்தன்= பிறந்த தினம் By  பெ கருணாகரன் Running News

எழுத்து மின்சாரம் ஜெயகாந்தன்= பிறந்த தினம் By பெ கருணாகரன்

புதுமைப் பித்தனுக்குப் பிறகு, தமிழ்ச்சிறுகதை உலகில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்; எழுத்தாளர்கள் ஐம்பது வயதிலடையும், அனுபவங்களையும் புகழையும் தன் முப்பதாவது வயதிலேயே அடைந்தவர். சாகித்ய அகாடமி விருதும், இந்திய எழுத்தாளர்களின் உச்சக் கனவான ஞானபீட விருதையும் பெற்று தமிழ் இலக்கியத் தரத்தை உலகுக்குணர்த்தியவர். பேச்சாளர்; அரசியல்வாதி; இன்னும் நிறைய நிறைய எழுதலாம். ஆனால், அவற்றையெல்லாம் ஒரே வார்த்தையில் குறிப்பிட வேண்டுமென்றால் _ ‘ஜெயகாந்தன்!’. இயற்பெயர் முருகேசன். பழைய தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கடலூர் _ மஞ்சக்குப்பம்தான் ஜெயகாந்தன் […]

April 24, 2014 admin
சர்வதே தேச பூமி தினம்! – ஏப் = 22 Running News

சர்வதே தேச பூமி தினம்! – ஏப் = 22

சர்வதேச புவிதினம் (சர்வதேச பூமி தினம், உலக பூமி தினம்) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும் உலகளாவிய ரீதியில் புவியின் சூழல் மாசடைவதைக் கருத்திற் கொண்டு முதன் முதலாக ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும் செனட்டருமான கேலோர்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 […]

April 22, 2014 admin
ஜாலியன்வாலாபாக்: சில நினைவுகள்! Running News

ஜாலியன்வாலாபாக்: சில நினைவுகள்!

முதல் உலகமகா யுத்தம் இந்தியர்களுக்கு சொல்லொணா துயரத்தையும், பல புதிய அனுபவங்க ளையும் கொடுத்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த இது உதவியது. மகாத்மா  காந்தி, முகமது அலி ஜின்னா, அன்னிபெசன்ட் போன்றோர் யுத்தத்தை ஆதரித்தனர். நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டன் யுத்தத்தில் வெற்றி பெற உதவி செய்தால், ஒரே ஆண்டில் சுயாட்சி கிட்டும் என்று காந்தி நம்பினார். இந்திய ராணுவம் யுத்தத்தில் ஈடுபடவும், இளைஞர்கள் ராணுவத்தில் சேரவும் அவர் முயற்சி எடுத்தார். அப்போது மகாத்மா காந்தியின் […]

April 13, 2014 admin
மனோரமா ”ஆச்சி” யான ஆச்சரிய கதை! Running News

மனோரமா ”ஆச்சி” யான ஆச்சரிய கதை!

கோலிவுட்டில் சகல தரப்பினராலும் ‘ஆச்சி’ என்றழைக்கபடும் மனோரமா. மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே அவருக்கு மூட்டு வலி இருந்தது. பாத்ரூமிலும் தவறி விழுந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு குணமானார். ஆனாலும் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.இந்த நிலையில் ஆச்சிக்கு நேற்று மாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மூச்சு விட திணறினார். உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்ப்ல்லோ ஆஸ்பத்திரியில் […]

March 31, 2014 admin
உலக காடுகள் தினம்! – மார்ச் – 21 Running News

உலக காடுகள் தினம்! – மார்ச் – 21

பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது. மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் […]

March 21, 2014 admin
உலக சிட்டுக் குருவிகள் தினம்!! Exclusive

உலக சிட்டுக் குருவிகள் தினம்!!

அழிவின் விளிம்பில் இருந்து வரும் சிட்டுக்குருவிகன் இனத்தை பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் மார்ச் 20 ஆம் தேதி உலகெங்கும் சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. சிட்டு குருவி – இன்றைய இளம் தலைமுறையினருக்கு இவைகள் குறித்து எந்தளவு தெரியும் என்று தெரியவில்லை. நமது பழைய தமிழர் பண்பாட்டில் கூட்டு குடும்பங்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஒரே வீட்டில் […]

March 20, 2014 admin
உடனடி செய்திகள்