32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 141 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 141)
சந்திரபாபு பர்த் டே டுடே! மறக்க முடியுமா

சந்திரபாபு பர்த் டே டுடே!

தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரரான ஜோசப் ராட்சிக் என்பவரின் மகன் தான் சந்திரபாபு. அவர் பிறந்து சில நாட்களிலேயே விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். குழந்தை தப்புமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. தாயும் தகப்பனும், “ஏசுவே இந்தக் குழந்தை நீர் எமக்குக் கொடுத்த பிச்சை, குழந்தையை உயிர் பிழைக்கச் செய்தருளும், குழந்தைக்குப் பிச்சை எனப் பெயரிடுகிறோம்’ என்று முழந்தாளிட்டு இயேசுவிடம் மன்றாடினர். அந்த மன்றாட்டத்தினால் தப்பிப் பிழைத்த குழந்தைக்கு ஜோசப்பிச்சை எனப் பெயரிட்டனர். சந்திர பாபுவுக்கு முன்னால் ஜோசப் […]

August 5, 2016 admin
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி நினைவு நாள்! மறக்க முடியுமா

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி நினைவு நாள்!

திரைகானம் பாடிய நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, கும்பகோணத்தில் பிறந்தவர். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி, டி.கே.எஸ். நாடக குழு, கிருஷ்ண நாடகசபா (இவரது சொந்த சபா) ஆகிய நாடக சபாக்களில் நடித்து தம் நடிப்பை வளர்த்துக் கொண்ட இவர், நாடகத்தைக் கண்ணாகப் போற்றியவர். தனது தந்தை காலமான அன்றும் கூட, தந்தையின் இறுதிக் கடன்களை முடித்த கையோடு, அன்றிரவே நாடகத்தில் நடித்தார். இவர் சார்ந்திருந்த திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 1960 ஆம் ஆண்டிலேயே எம்.எல்.சி. […]

August 5, 2016 admin
பால கங்காதர திலகர் காலமான தினமின்று மறக்க முடியுமா

பால கங்காதர திலகர் காலமான தினமின்று

“சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்” என்று கூறி இந்திய மக்களிடம் சுதந்திர போராட்ட எண்ணத்தை விதைத்தவர் பால கங்காதர திலகர். முதன் முதலில் நாடுதழுவிய இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரிய இவர் இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர். திலகர் 1856 ஜுலை 23ல் மகாராஷ்ராவில் உள்ள இரத்தினகிரி என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கங்காதரர் ராமச் சந்திர திலக் மற்றும் பார்வதிபாய் ஆவார். திலகரின் […]

August 1, 2016 admin
ராஜீவ் காந்தி கொழும்பில் மரியாதை அணிவகுப்பில் இலங்கை ராணுவத்தினால் தாக்குதலுக்குள்ளான நாள் மறக்க முடியுமா

ராஜீவ் காந்தி கொழும்பில் மரியாதை அணிவகுப்பில் இலங்கை ராணுவத்தினால் தாக்குதலுக்குள்ளான நாள்

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண, அன்றைய தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் இணைந்து, சமரச முயற்சியில் ராஜீவ் ஈடுபட்டார். இதன் விளைவாக ஒரு சமரசத்திட்டம் உருவாயிற்று. இலங்கைத் தலைநகரான கொழும்பில் 29-7-1987-ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. இதில் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி அழைத்தார். ஆனால், எம்.ஜி.ஆர். இலங்கை செல்ல இயலாமல் இருந்ததால், தன் சார்பில் அமைச்சர் பண்ருட்டிராமச்சந்திரனை அனுப்பி வைத்தார். இந்த ஒப்பந்தத்தை இலங்கை […]

July 29, 2016 admin
இன்று சர்வ தேச புலிகள் ( ஜூலை 29) தினம்: மறக்க முடியுமா

இன்று சர்வ தேச புலிகள் ( ஜூலை 29) தினம்:

ஒரு காட்டில் புலி மிகுந்த நலத்தோடு இருந்தால், அங்கே வாழும் பிற ஜீவராசிகளும் நலத்தோடு, நிறைய எண்ணிக்கையில் வாழ முடியும் .அவ்வாறு வாழ்பவைகளில் மாமிச உண்ணிகள் , தாவர உண்ணிகளும் அடங்கும்.கானகம் செழித்து இருந்தால்தான் தாவர உண்ணிகள் ஜீவித்திருக்க முடியும். இது தவிர அவற்றை அண்டி வாழும் பிற சிறிய மிருகங்கள் ,பறவைகள் , என கோடானு கோடி உயிரினங்கள் வாழ்கின்றன என்று அர்த்தம். சுருக்கமாகக் கூறுவதென்றால் ஒரு கானகத்தின் வெற்றிக் குறியீடு புலியே”. ஒரு காலத்தில் இவ்வுலகில் […]

July 29, 2016 admin
கார்கில் நினைவு தினம்! மறக்க முடியுமா

கார்கில் நினைவு தினம்!

இமயமலையில் உள்ள கார்கில் பனிசிகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்தது. இதை கொஞ்சமும் தயங்காமல் நம் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலின் காரணமாக பாகிஸ்தான் படைகள் பின்வாங்கி சென்றன. அந்த போரில் நம் வீரர்கள் உயிரிழந்ததையும், இந்திய ராணுவம் வெற்றி பெற்றதன் நினைவாகவும் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 17-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி காஷ்மீரில் இருக்கும் கார்கில் போர் நினைவிடத்தில் பலரும் […]

July 26, 2016 admin
கருப்பு ஜூலை: – ஜூலை 25 குட்டிமணி,ஜெகன்,தங்கதுரை மரணித்த நாள் மறக்க முடியுமா

கருப்பு ஜூலை: – ஜூலை 25 குட்டிமணி,ஜெகன்,தங்கதுரை மரணித்த நாள்

கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும் இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை […]

July 25, 2016 admin
டாக்டர். பி.வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு! மறக்க முடியுமா

டாக்டர். பி.வரதராஜுலு நாயுடுவின் தியாக வரலாறு!

தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால வரலாற்றிலும் தனித்துவமான தடம் பதித்த தலைவர்களில் ஒருவர் சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு. அக்காலத்தில் சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி பெருமாள் நாயுடு-குப்பம்மாள் தம்பதியருக்கு பிறந்த வரதராஜுலு நாயுடுவின் முன்னோர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகர சேனைப்படையுடன் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பது சரித்திரம். வரதராஜுலு நாயுடு தமது பத்தொன்பதாம் வயதில் தீவிர அரசியல் வயப்பட்டார். மாணவப் பருவத்திலேயே விதேசிப்பொருள்களை வெறுத்து […]

July 23, 2016 admin
சுப்பிரமணிய சிவா காலமான தினமின்று! மறக்க முடியுமா

சுப்பிரமணிய சிவா காலமான தினமின்று!

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்ரிகையாளர். 1913-இல் ‘ஞானபாநு’ இதழை நடத்தியவர். விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர். ‘வீரமுரசு’ எனப் புகழ்பெற்றவர் இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884, அக்டோபர் 4-ம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் […]

July 23, 2016 admin
மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை (அல்லது) தாமிரபரணி படுகொலை ! மறக்க முடியுமா

மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை (அல்லது) தாமிரபரணி படுகொலை !

கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது, கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 தொழிலாளர்களை காவல்துறையினர் அடித்துக் கொன்ற தாமிரபரணி நினைவு தினம் ஜூலை 23. சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.1930-இல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் […]

July 23, 2016 admin
உடனடி செய்திகள்