32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 118 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 118)
செல்லுலாய்ட் மனிதர் ‘ பி.கே.நாயர்’! Running News

செல்லுலாய்ட் மனிதர் ‘ பி.கே.நாயர்’!

இலக்கியமோ, சினிமாவோ, இசையோ ,ஒவியமோ எதையும் முறையாக ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. புதுமைப்பித்தனின் கையெழுத்துப் பிரதிகள் அத்தனையும் நம்மிடம் இல்லை. பாரதியின் குரல் எப்படியிருக்கும் என அறிந்து கொள்ள ஒலிப்பதிவு எதுவுமில்லை. தி.ஜானகிராமனின் மோகமுள்ளின் கையெழுத்து பிரதியை ஒருவர் வாசிக்க விரும்பினால் வாய்ப்பே கிடையாது. இது தான் நமது சூழல். சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்கள் கூட முறையாகப் பாதுகாக்கபடவில்லை. அதிலும் குறிப்பாக மௌனப்படங்களில் பெருமளவு அழிந்து போய்விட்டன. இந்திய சினிமாவின் அரிய படங்களைக் காணுவதற்கு உள்ள ஒரே […]

March 4, 2020 admin
பன்முகத் தன்மையுடன் விளங்கிய நாகிரெட்டி! Running News

பன்முகத் தன்மையுடன் விளங்கிய நாகிரெட்டி!

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டூடியோவாக இருந்தது விஜயா வாகினி. இதன் உரிமையாளர் பி.நாகிரெட்டி. ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் பொட்டிபாடு என்ற கிராமத்தில் பிறந்தவர். ெமட்ராஸில் படிப்பை முடித்துவிட்டு, தந்தையின் வெங்காய வியாபாரத்திற்காக பர்மா, சிங்கப்பூர் என வெளி நாடுகள் சென்று அனுபவங்கள் கற்றார்.இவரின் மூத்த சகோதரர் பி.என்.ரெட்டி, ஆரம்ப கால சினிமாவில் முக்கிய பங்காற்றியவர். தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸை’ இயக்கிய ஹெச்.எம்.ரெட்டியிடம் உதவியாளராக இருந்தார். பின்னர் ஹெச்.எம்.ரெட்டியும் பி.என்.ரெட்டியும் இணைந்து ‘ரோகிணி பிக்சர்ஸ்’ […]

February 25, 2020 admin
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி கே.தவமணி தேவி! Running News

தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி கே.தவமணி தேவி!

ஆம்.. இன்றளவும் தமிழ் திரை உலகின் முதல் கவர்ச்சி கதாநாயகி என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரிவர்… இத்தனைக்கும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தந்தை கதிரேச சுப்பிரமணியன் கண்டியில் நீதியரசராக இருந்தவர்… தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்து சீனியர் பி.ஏ., பட்டம் பெற செய்தவர்… ஆனாலும் நடிப்பில் உள்ள மோகத்தால் தந்தையின் அனுமதியை போராடிப் பெற்று சினிமாவில் நடிக்க தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டவர். எல்லிஸ் ஆர்.டங்கன் தனது ‘சதி அகல்யா’(1937) படத்தில் கதாநாயகியாக தவமணிதேவியை அறிமுகம் செய்தார்… உடுத்தியிருக்கும் பாவாடை […]

February 10, 2020 admin
வீணை எஸ். பாலசந்தர்! Running News

வீணை எஸ். பாலசந்தர்!

இந்திய அளவில் புகழ்பெற்ற வீணை இசைக் கலைஞரும், தமிழ் திரையுலகின் சிறந்த இசை அமைப்பாளர், இயக்குநர், பாடகர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டவருமான எஸ்.பாலசந்தர் (S.Balachander). 1927-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் சுந்தரம் ஐயர்- செல்லம்மாள் தம்பதிக்கு 5 வது குழந்தையாக பிறந்தவர் . வழக்கறிஞரான சுந்தரத்திற்கு தொழில்மீதான நாட்டத்தை விட இசையின் மீதும், இசைக் கலைஞர் கள் மீதும் ஆர்வம் அதிகம். இத்தனைக்கும் இசையில் ஞானம் பெற்றவரல்ல அவர். மாலை நேரமானால் மயிலாப்பூர் வீட்டில் ஏதாவது ராக […]

January 18, 2020 admin
இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்! Running News

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்!

புகைப்படக்கலை இந்தியாவுக்கு அறிமுகமானது 1840இல். இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாக இருந்த மெக்கென்சி நில அளவை நடத்திய இடங்களையும் புராதன இந்தியக்கலைச் செல்வங்க¨ ளையும் பதிவு செய்வதற்கு ஓவியத்தையே நம்பியிருந்தார். அஜந்தா குகைச் சிற்பங்களையும் புடைப்போவியங்களையும் கிட்டத்தட்ட அதே அளவில்ஓவியங்களாகவே தீட்டச் செய்திருந்தார். 1850வரை இதுதான் நடைமுறை. மெட்ராஸ் மிலிட்டரி சர்வீசில் பணியாற்றிய கேப்டன் ராபர்ட் கில் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுநேர ஓவியராக பாலங்களையும் சாலைகளையும் புராதனச் சின்னங்களையும் தீட்டித் தள்ளிக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு […]

January 15, 2020 admin
கான காந்தவர்வக் குரலோன் . KJ யேசுதாஸ்! Running News

கான காந்தவர்வக் குரலோன் . KJ யேசுதாஸ்!

உலகில் மிக அதிகமாக பாடல்கள் பதிவு செய்யப்பட்ட பாடகர்களில் ஒருவர் யேசுதாஸாகும். கடந்த 48 வருடங்களில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அவரது பாடலகள் பதிவாகியுள்ளது. ஏழு முறை தேசிய விருதுகளையும், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். கேரளா வின் 16 மாநில அரசு விருதுகள் உட்பட மொத்தம் 34 மாநில அரசு விருதுகளைப் பெற்றிருக்கிறார். திரைப்பாடல்களிலும் பக்திப்பாடல்களிலும் ஒரு உச்ச்நட்சத்திரமாக மாரிய பின்னர் யேசுதாஸ் தன்னை ஒரு கர்நாடக சங்கீதப் பாடகராகவும் முன் நிறுத்தினார். பல்வேறு கர்நாடக […]

January 10, 2020 admin
முதல் இந்திய பெண் டாக்டர். கடம்பனி கங்குலி! Running News

முதல் இந்திய பெண் டாக்டர். கடம்பனி கங்குலி!

கடம்பினி கங்கூலி (அ) காதம்பனி கங்குலி. இவர்தான் முதல் மேலை மருத்துவப் பயிற்சிப் பட்டம் பெற்ற தெற்காசியப் பெண் உடலியல் மருத்துவர் ஆவார். கடம்பினி கங்கூலி 1861ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூரில் பிறந்தார். .இவரது அப்பா பிரஜ கிஷோர் பாசு, பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பிரம சீர்திருத்த வாதியான அவரது தந்தை அபய் சரண் மாலிக் என்பவருடன் சேர்ந்து பகல்பூர் மகில சமிதி என்ற பெண்கள் அமைப்பை 1863ல் ஏற்படுத்தினார். அதுதான் பிரிட்டிஷ் […]

October 3, 2019 admin
தமிழக முடிசூடா ராணியாக இருந்த ஜெயலலிதாவை சிறையில் தள்ளிய நாளிது! Running News

தமிழக முடிசூடா ராணியாக இருந்த ஜெயலலிதாவை சிறையில் தள்ளிய நாளிது!

🦉2014 இதே செப்டம்பர் 27ல் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப் பட்டது. அதன் விபரம் இதோ: தமிழகம், டெல்லி, கர்நாடகம் என்று 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது சொத்துக்குவிப்பு வழக்கு. அதில், தீர்ப்பு வழங்க, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா இந்த தேதியைத்தான் குறித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாள் நெருங்கியபோது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த […]

September 27, 2019 admin
சீனியர் ஜர்னலிஸ்ட் (அண்ணன்) சோலை! Running News

சீனியர் ஜர்னலிஸ்ட் (அண்ணன்) சோலை!

சோலை என்கிற சோம சுந்தரம். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் என்ற ஊரில் இதே 25.09(1932)ல் பிறந்தார். சுமார் 60 ஆண்டு கால தமிழக & இந்திய அரசியல் நடப்புகளின் நிஜ சாட்சியாக இருந்த சோலை முன்னதாக ஜனசக்தி,நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, மக்கள் குரல், அண்ணா ஆகிய பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராக இருந்தார். அடுத்த தலைமுறை வார இதழ்கள் ஜூ.வி., நந்தன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், ராஜமுத்திரை ஆகிய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வந்தார். சுருக்கமாக சொல்வதானால் […]

September 25, 2019 admin
காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் எழுதிய உடுமலை நாராயண கவிராயர்! மறக்க முடியுமா

காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் எழுதிய உடுமலை நாராயண கவிராயர்!

கோலிவுட் என்றழைக்கப்படும் நம்ம தமிழ்த் திரையுலகிலும், நாடக உலகிலும், இசையுலகிலும் மன்னராக விளங்கியவர் உடுமலை நாராயண கவிராயர். அந்நாளில் தமது பாடல்களால் தான் பிறந்த உடுமலைப்பேட்டைக்கே ஒரு தனி மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்தவர். இதே 25.9.1899 அன்று உடுமலைப்பேட்டை வட்டம், பூவினை வாடி (தற்போது பூளவாடி) கிராமத்தில் பிறந்தார். தந்தையார் கிருஷ்ணசாமி செட்டியார். தாயார் முத்தம்மாள். அற்புதமான சீர்திருத்தப் பாடல்களால் புகழ் பெற்ற இவர், ‘நாராயண கவி’ என்று பெயர் சூட்டிக் கொண்டு தான் கவிஞர் […]

September 25, 2019 admin
உடனடி செய்திகள்