32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 105 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 105)
பார்கின்சன் எனப்படும் உலக நடுக்குவாத தினம்! Exclusive

பார்கின்சன் எனப்படும் உலக நடுக்குவாத தினம்!

நடுக்குவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே உலக பார்கின்சன் நோய் தினம் உலகம் முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinsons disease) அல்லது பீ.டி என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய். மூளையில் Dopamine என்கிற ரசாயன குறைபாட்டால் இது ஏற்படுகிறது. பொதுவாக 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் இந்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஜேம்ஸ் பார்கின்சன் என்பவர்தான் […]

April 11, 2023 admin
தத்துவ ஞானி ஜிட்டு ஜே.கிருஷ்ணமூர்த்தி! Exclusive

தத்துவ ஞானி ஜிட்டு ஜே.கிருஷ்ணமூர்த்தி!

அறியாமை இருள் மனிதகுலத்தைச் சூழும்போதெல்லாம் உலக ஆசான் ஒருவர் தோன்றி உலகை வழிநடத்துவார் என்பது அநேகமாக இறைநம்பிக்கை உடைய அனைவருக்கும் பொதுவான நம்பிக்கை. அதுபோன்ற ஒரு உலக குரு ஒருவரைத்தான் தியாசபிக்கல் சொசைட்டி என்ற ப்ரம்மஞானசபையினரும் தேடிக்கொண்டு இருந்தார்கள். அவ்வாறு அவர்களால் கண்டறியப்பட்ட உலக குருதான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.  ஆம்..ஆன்மிக குருமார்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் பஞ்சமில்லாத நாடு இந்தியா. இந்த மண்ணில் பிறந்த மரபார்ந்த தத்துவ ஞானிகளில் ஒருவரல்ல, ஜே.கே. என்று அறியப்படும் ஜித்து கிருஷ்ணமூர்த்தி. இந்திய […]

February 17, 2023 admin
மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று…! Exclusive

மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று…!

1963ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழும்பூர் தொடர்வண்டி நிலையம். காவல் துறை புடை சூழ வருகிறார் முதல்வர் பக்தவச்சலம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த ஒரு இளைஞன் பக்தவச்சலத்தின் காலில் விழுந்து கதறினான். “ஐயா, தமிழைக் காப்பாற்றுங்கள். இந்தியை நுழைய விடாதீர்கள். நீங்களும் தமிழர்தானே” பக்தவச்சலம் காவல்துறைக்கு உத்தரவு போட்டார்.“இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்”. ஒரு மாத காலத்திற்குப் பின்-25.1.1964ஆம் நாள் அந்த இளைஞன், திருச்சி தொடர்வண்டி நிலையத்தின் வாசலில் விடியற்காலை 4.30 மணிக்குப் பெட்ரோல் ஊற்றித் தீ […]

January 25, 2023 admin
தேசிய பெண் குழந்தைகள் தினமின்று! Exclusive

தேசிய பெண் குழந்தைகள் தினமின்று!

பெண் குழந்தைகளுக்கான தினமாக இந்த ஜனவரி 24ம் தேதியை கடந்த 2008-ம் ஆண்டு முதல் அமல் படுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளுக்கு நேரும் பிரச்னைகளைத் தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்யவும், சமூகத்தில் அவர்களுக்கான சம உரிமையை அளிக்கவுமே இந்த நாள் கொண்டு வரப்பட்டது. பெண் குழந்தைகள்தான் குடும்பத்தின் அச்சாணியாக விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தின் […]

January 24, 2023 admin
சுருக்’ எழுத்தின் தந்தை: ஐசக் பிட்மன் நினைவு நாளின்று! Exclusive

சுருக்’ எழுத்தின் தந்தை: ஐசக் பிட்மன் நினைவு நாளின்று!

‘‘வளவளன்னு பேசுறவங்களை சுருக்கமா, தெளிவா பேசுப்பா… ஏன் இப்படி லொடலொடன்னு பேசிக்கிட்டு இருக்கே’’ என்பார்கள். ஆனால், ஒரு நல்ல பேச்சாளரை நாம் இப்படி கடிந்து கொள்ள முடியாது. அவரது பேச்சில் பல நல்ல விஷயங்கள் இருக்கும். அனைத்தையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல… சில கல்வி நிலையங்களில் வேகமாக சொல்லப்படும் ேநாட்ஸ்களை, விரைவாக நம்மால் குறிப்பெடுக்க முடியாது. சில தலைவர்களின் பேச்சு, பேட்டி உள்ளிட்ட விஷயங்களை கூட இப்படித்தான். இதற்காக உருவானதே Shorthand […]

January 22, 2023 admin
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ஏன்? எப்படி? Exclusive

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ஏன்? எப்படி?

இறைமகன் பிறக்கப்போகிறார் என்பதன் அடையாளமாக டிசம்பர் முதல் தேதியே வீடுகளில் நட்சத்திரம் தொங்கவிட்டு இது கிறிஸ்துமஸ் மாதம் என்று அறிவித்து கிறிச்து பிறந்து விட்ட நாளை இன்று கொண்டாடுகிறோம்.  இந்நிகழ்வையொட்டி வீட்டை ஒட்டடை அடித்து, கழுவிச் சுத்தம் செய்வதைப்போலவே நம் மனதையும் ஒட்டடை அடித்து, கழுவிக் காயப்போட வேண்டிய தருணம் இது. இந்த ஆண்டு முழுவதும் சிறிது சிறிதாக நம் மனதில் சிந்தனையில் ஒட்டடை படிந்திருக்கலாம். நம் மனமே கடவுள் வாழும் ஆலயம். மனமே இறைமகன் பிறக்க […]

December 25, 2022 admin
ஒருவர் வாழ்ந்த நாட்கள்….இறந்த நாட்களிலிருந்து  எண்ணப்படும்! Exclusive

ஒருவர் வாழ்ந்த நாட்கள்….இறந்த நாட்களிலிருந்து எண்ணப்படும்!

1987 _ டிசம்பர் 23 , புதன் கிழமை ….. மாலையிலிருந்தே புரட்சித் தலைவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பரபரப்பான செய்தி பரவிக் கொண்டிருந்தது. உலகின் பல்வேறு பகுதியிலிருந்தும் பல்வேறு மொழிகளில் அனைத்துத் தரப்பிலிருந்தும் போயஸ்கார்டனில் இருந்த என்னிடம் தொலைபேசி மூலம் தலைவரது உடல் நிலைக் குறித்து விசாரித்துக் கொண்டேயிருந்தனர்.இது பற்றி நான் புரட்சித் தலைவியிடம் தெரிவித்தேன். “சி.எம்.க்கு உடல் நிலை சரியில்லை . போனில் யார் தொடர்பு கொண்டாலும் இது பற்றிய செய்தி எதுவும் கூற […]

December 24, 2022 admin
உலகளாவிய அடிமை வர்த்தக ஒழிப்பு தினம்! Exclusive

உலகளாவிய அடிமை வர்த்தக ஒழிப்பு தினம்!

சர்வதேச அடிமை வர்த்தக ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 23ம் தேதி நினைவு கூறப்படுகிறது. நாம் அனைவரும் மிகவும் பெருமிதத்தோடு நாகரீக வளர்ச்சியை கொண்டாடும் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருகிறோம். இந்த நூற்றாண்டு தொழில்நுட்ப ரீதியிலும், தத்துவார்த்த ரீதியிலும் பல வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டுள்ளது. அனைவரும் இன்று ஒரளவுக்கு இந்த உலகில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு அனைத்து மக்களின் சம உரிமைக்காகவும் போராடிய நம் முன்னோர்கள் தான் ! காரணம். 17 மற்றும் […]

December 2, 2022 admin
பொது சேவை ஒலிபரப்பு தினமின்று! Exclusive

பொது சேவை ஒலிபரப்பு தினமின்று!

தேசப்பிதா மகாத்மா காந்தி 1947-ஆம் ஆண்டு இதே நாளில் புதுதில்லி வானொலி நிலையத்தை பார்வையிட்டதை குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பிரிவினை காரணமாக ஹரியானாவின் குருஷேத்ராவில் தற்காலிகமாக தங்க வைக்கப் பட்டிருந்தவர் களிடையே மகாத்மா காந்தி உரையாற்றினார். இந்நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அகில இந்திய வானொலி ஏற்பாடு செய்துள்ளது. கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் காந்தியின் உரைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், 1947-ம் ஆண்டின் தீபாவளி நாளான நவம்பர் […]

November 12, 2022 admin
சர்வதேச கை கழுவும் தினமின்று! Exclusive

சர்வதேச கை கழுவும் தினமின்று!

உலக மக்கள் நாள்தோறும் தங்களது கைகளை நீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கத்தோடு இந்த உலக கை கழுவும் தினம் பன்னாட்டளவில் அனுசரிக்கப்படுகிறது. இது 2008 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாள்  கடைபிடிக்கப்படுகிறது. கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பது நோய்த்தடுப்புக்கு ஒரு முக்கிய வழியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். உண்மையில் கைகழுவுவது என்பது இந்தியர்களின் பாரம்பரிய பழக்கம். குறிப்பாக […]

October 15, 2022 admin
உடனடி செய்திகள்