32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 106 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 106)
உலக மன நல நாளின்று! Exclusive

உலக மன நல நாளின்று!

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழவும், நம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தவும், பணியாற்றும் இடங்களிலும் சமூகத்திலும் செயலூக்கத்துடன் பங்கேற்கவும் உடல் நலம், மன நலம், சமூக சூழமைவு ஆகிய மூன்றும் சரியாக இருக்க வேண்டும். ஆனால், உலகில் ஏறக்குறைய 100 கோடி மக்கள் மனநலச் சிக்கலால் அவதியுறுகிறார்கள். குறைவான வருமானம் உள்ள நாடுகளில் மனநலச் சிக்கலோடு வாழும் 75 சதவீதத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெறுவதேயில்லை. ஒவ்வோர் ஆண்டும், போதை / மதுவினால் 30 லட்சம் பேர் […]

October 10, 2022 admin
உலக தபால் தினமின்று! Exclusive

உலக தபால் தினமின்று!

சர்வதேச அளவில் உலக தபால் தினம் இந்த அக்டோபர் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1874ம் ஆண்டு, இதே நாளில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ‘சர்வதேச தபால் ஒன்றியம்’ தொடங்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில்தான் இந்த உலக தபால் தினம் அனுசரிக்கப்படுகிறது. தபால் எனப்படும் அஞ்சல் சேவை என்பது முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டாக இது கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை சங்க இலக்கிய காலங்களிலேயே மயில் விடு தூது, கிளிவிடு தூது, புறா விடுதூது என்றெல்லாம் புகழப்பட்டவை […]

October 9, 2022 admin
ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் கொடுத்த பூலித் தேவன்! Exclusive

ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் கொடுத்த பூலித் தேவன்!

நெல்லை பகுதியில் நெற்கட்டான்செவலை தலைமை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர். இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கம் செய்தவர். ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் தென்னகத்து நெல்லைச் சீமையில் இருந்து இவர் மூலமே எழுந்தது! அந்த வகையில் முதல் விடுதலைப்போர் எனப்படும் 1857 போருக்கும் முன்னோடி இவரே! பெயர் பூலித்தேவன் (1715 – 1767). “வரிக்குப் பதிலாக நெல்லாவது கொடு” என்று ஆங்கிலேயர்கள் கேட்ட […]

September 1, 2022 admin
எம்.ஜி.இராமச்சந்திரன் ஆகிய நான் -என்று உறுதி எடுத்த நாளின்று! Exclusive

எம்.ஜி.இராமச்சந்திரன் ஆகிய நான் -என்று உறுதி எடுத்த நாளின்று!

தமிழக அரசியல் வரலாற்றில் ஜூன் 30-ம் தேதி மறக்கவியலாத தினம். ஆம்.. 1977-ம் ஆண்டு இதே தினத்தில்தான் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக முதன்முறை பொறுப்பேற்றார். சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்ற பாரம்பர்யத்தோடு இந்தியா முழுக்க மக்களிடையே பெரும் வரவேற்போடு தன் ஆளுகையைப் பரப்பியிருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 1967-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப்பிடித்தவர் அண்ணாதுரை. காங்கிரஸ் கட்சி என்ற ஆலமரத்தை ஒரே ஒரு மாநிலத்தில் விரவியிருந்த திராவிடக்கட்சி ஒன்று வீழ்த்திக்கிடத்தியது இந்திய வரலாற்றில் பெரும் சாதனை. திராவிட […]

June 30, 2022 admin
உலக இசை தினமின்று! Exclusive

உலக இசை தினமின்று!

இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இதை வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை. இசை ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. இசை, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் […]

June 21, 2022 admin
குமரி விடுதலைப் போராட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் மார்ஷல் ஏ நேசமணி! Exclusive

குமரி விடுதலைப் போராட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் மார்ஷல் ஏ நேசமணி!

குமரி விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க திரு மார்சல் ஏ. நேசமணி தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கும் . இப்போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1, 1956 ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. இப்போராட்டத்தை தலைமை தாங்கி வழி நடத்தி வெற்றி பெற்றதனால் குமரி மக்கள் மார்சல் நேசமணியை குமரித் தந்தை என்று அழைக்கின்றனர். உண்மையில், […]

June 12, 2022 admin
கூகுள் டூடுல் பெருமைப்படுத்தி இருக்கும் காமா பயில்வான்! Exclusive

கூகுள் டூடுல் பெருமைப்படுத்தி இருக்கும் காமா பயில்வான்!

மல்யுத்தத்தில் பெரும் புகழ் பெற்றவர். ‘தி கிரேட் காமா’ என்று அழைக்கப்பட்டவர். இன்று அவரது பிறந்தநாள் என்பதால், இன்றைய தினம் டூடுல் வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது கூகுள். 1878 மே 22-ல் அமிர்தரஸில் பிறந்த காமா பயில்வானின் இயற்பெயர் குலாம் முகமது பக்‌ஷ் பட். மல்யுத்த வீரர்கள் அடங்கிய குடும்பத்தைச் சேர்ந்த காமா பயில்வான், அவர்கள் வழியில் சிறந்த மல்யுத்த வீரராகத் திகழ்ந்தவர், 1910-ல் உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் வென்றவர். 10 வயதிலேயே […]

May 22, 2022 admin
உலக தேனீக்கள் தினமின்று! Exclusive

உலக தேனீக்கள் தினமின்று!

தேனீக்களின் சுறுசுறுப்புக்கு மனிதனாலும் ஈடு கொடுக்க முடியாது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் உங்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டே அமெரிக்காவில் ஒவ்வொரு ஆகஸ்டு மாத மூன்றாவது வார சனிக்கிழமையை தேனீக்களின் தினமாக அறிவித்தனர். அந்தவகையில் 17-ம் தேதியான இன்று தேனீக்கள் தினத்தை உலகம் முழுவதும் அனுசரிக்கின்றனர். நவீன தேனீ வளர்ப்பின் […]

May 20, 2022 admin
விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா டைரக்ட் செஞ்ச ‘குஷி’ ரிலீஸான தினமின்று! Exclusive

விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா டைரக்ட் செஞ்ச ‘குஷி’ ரிலீஸான தினமின்று!

நம்ம தமிழ் சினிமாவில் நூத்துக்கணக்கான காதல் படங்கள் வந்துருக்குது. அவற்றில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிச்சவை மினிமம் நூறாவது இருக்கும். அந்த நூறு திரைப்படங்களில் மூன்று திரைப்படங்கள் 2000-ம் வருசத்தின் கோடைக்காலத்தில் வெளியாச்சு. மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’, ராஜீவ் மேனன் இயக்கிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘குஷி’- இவைதான் அந்த மூன்று படங்கள். இவற்றில் ‘குஷி’, மே 19 அன்று வெளியானது. இன்றோடு அந்தப் படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்த ’குஷி’ பல வகைகளில் […]

May 19, 2022 admin
புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய மரியா மாண்ட்டிசோரி! Exclusive

புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய மரியா மாண்ட்டிசோரி!

குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு ஏன் எக்கச்சக்கமாக பயப்படுகிறார்கள் என்று நாம் யோசித்து இருக்கிறோமா ? பள்ளிகள் குழந்தைகளை பயமுறுத்துகிற விஷயமாகவே பெரும்பாலும் இருக்கிறது. ஆனால்,கல்விக்கூடங்கள் குழந்தைகள் ஆனந்தமாக வந்து சேர்ந்து கற்றுத்தேர்கிற இடமாக மாற்ற முடியும் என்று நிரூபித்தவர் மரியா மாண்டிசோரி. மருத்துவப்படிப்பு படிக்கப்போனார் அவர். அங்கே அவரைப் பெண் என்பதால் இழிவாக நடத்தினார்கள். பாடங்களை சொல்லித்  தரக் கூட ஆசிரியர்கள் மறுத்தார்கள். விலங்குகளை அறுக்கிற பொழுது தனியாக ஒரு அறையில் விட்டு அறுக்க வைத்தார்கள். மனம் […]

May 6, 2022 admin
உடனடி செய்திகள்