32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 71 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 71)
டிஜிட்டல் இந்தியாவின் எதிர்காலம் கும்மிருட்டு! Exclusive

டிஜிட்டல் இந்தியாவின் எதிர்காலம் கும்மிருட்டு!

நான் சமீப காலமாக டிஜியாத்ரா app உபயோகிக்கிறேன். அதில் போர்டிங் பாஸ் ஏற்றிவிட்டால் ஏர்போர்ட்டில் முகம் காட்டினால் போதும். நம்மை உள்ளே விடும். காத்திருக்கும் நேரம் குறைவு. அதற்கு வெப் செக் இன் அவசியம் .நேற்று காலையில் இருந்து முயற்சித்தேன் .முடியவில்லை..டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் சனி அன்று இரவு பதினொரு மணிக்கு..!சரி செக் இன் ஆகவில்லை என ஏழு மணிக்கே ஏர்போர்ட் போகலாம் என முடிவெடுத்தேன்.மீட்டிங் என்பதால் உலக செய்திகள் காதுக்கு எட்டவில்லை..டாக்சி பிடித்து ஏர்போர்ட் […]

July 20, 2024 admin
டிஜிட்டல் யுகத்தால் மட்டமாகும் நிருபர்களின் மரியாதை! Exclusive

டிஜிட்டல் யுகத்தால் மட்டமாகும் நிருபர்களின் மரியாதை!

ஊடகக்காரர்களுடனான சந்திப்பின்போது, ஊடகக்காரர்களை ‘வாடா, போடா’ என்றும் ‘உனக்கெல்லாம் என்னடா மரியாதை?’ என்றும் ‘நீ நல்ல மருத்துவரைப் பாருடா டேய்’ என்றும் சகட்டுமேனிக்குப் பேசுகிறார் கண்ணியத்திற்குரிய சீமான். அநேகமாக அவர்கள் அனைவருமே டிஜிடல் ஊடகக்காரர்கள் என்றே கருதுகிறேன். டிஜிடல் ஊடகங்களே இல்லாமல், அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த அந்தக் காலத்தில், இப்படி ஒருவர் பேசியிருக்க முடியுமா அல்லது இப்படியெல்லாம் பேசுகிற அளவில் யாரேனும் இருந்தார்களா என்று யோசித்துப் பார்க்கிறேன். அந்தக் காலத்தில் எல்லா பத்திரிகைகளுக்கும் மரியாதை இருந்தது. […]

July 20, 2024 admin
கன்னடியர்களுக்கு இட ஒதுக்கீடு: காங்கிரஸின் சோக முடிவு! Exclusive

கன்னடியர்களுக்கு இட ஒதுக்கீடு: காங்கிரஸின் சோக முடிவு!

தனியார் நிறுவனங்களில் கன்னடியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டம் இரண்டு நாட்கள் முன்பு கர்நாடகா அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றிருந்தது. மேனேஜர்களுக்கான இடங்களில் 50% மற்றும் இதர இடங்களில் 70% கன்னடியர்களுக்கு என்று மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது. கன்னடியர் என்றால் அவர் கர்நாடகாவில் பிறந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 15 வருடங்கள் கர்நாடகாவில் வாழ்ந்திருக்க வேண்டும். கன்னடம் எழுதப் படிக்கப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். தனியார் வேலைகளுக்காக என்று பிரத்தியேகமாக உருவாக்கப்படும் கன்னடத் […]

July 19, 2024 admin
உயர்கல்விகளை கேலியாக்கும் HCL Techbeeயை அரசே ஆதரிக்கலா? Exclusive

உயர்கல்விகளை கேலியாக்கும் HCL Techbeeயை அரசே ஆதரிக்கலா?

ஏதாவது வேலை செய்வதற்குப் படிப்புத் தேவையில்லை. வேலை செய்வதற்கான எண்ணமும் அறிவும் போதும் என்ற மிகவும் ஆபத்தான கருத்துருவாக்கத்தை செயல்படுத்துவது தான் Zoho Schools மற்றும் HCL TECHBEE நிறுவனங்களின் நோக்கமாகும். ஏற்கனவே பொறியியல் பட்டப்படிப்பு படிப்பது பயன் தராது போன்ற கருத்துருவாக்கத்தை பொதுமக்கள் எண்ணத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பதிய வைத்தனர். இப்பொழுது இது போன்றத் திட்டங்களை செயல் வடிவில் கொண்டு வந்திருக்கிறார்கள். தனி நிறுவனங்களாய் அவர்கள் செயல்படுவதே ஆபத்தென்றால் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் […]

July 16, 2024 admin
அம்பானி கல்யாண செலவைக் கண்டு பொங்கும் அன்பு உள்ளங்களே! Exclusive

அம்பானி கல்யாண செலவைக் கண்டு பொங்கும் அன்பு உள்ளங்களே!

அம்பானி வீட்டுத் திருமண செலவு இங்கே விவாதப் பொருளாகி இருக்கிறது. எவ்வளவு ஆடம்பரம், எவ்வளவு வீண் போன்ற அங்கலாய்ப்புகள் எழுகின்றன. இந்தத் திருமணத்துக்காக முகேஷ் அம்பானி சுமார் 4,500 கோடி செலவழித்திருக்கிறார் என்று தெரிகிறது. அமெரிக்க டாலரில் அரை பில்லியன் வருகிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 123.3 பில்லியன் டாலர்கள். எனவே, தனது சொந்த மகனின் திருமணத்துக்காக அம்பானி செலவழித்தது தனது மொத்த சொத்தில் சுமார் 0.4% தான். இதைப் புரிந்து கொள்ள ஒரு […]

July 15, 2024 admin
அது சரி.. யார் இந்த சண்டாளர்கள்? Exclusive

அது சரி.. யார் இந்த சண்டாளர்கள்?

நமது அன்றாட வாழ்வில்… அர்த்தமோ, அதன் ஆழமோ தெரியாமல் உமிழும் பிரயோகங்களகவே இந்த சண்டாளப் பாவிகளும், படவா ராஸ்கல்ஸ்ஸும் புழக்கத்தில் உள்ளன. இதன் அர்த்தம் தெரிந்திருந்தால் சீமான் துவங்கி யாருமே இதனை உச்சரிக்க துணிந்திருக்க மாட்டார்கள் என்றே நம்புவோம்! முன்னொரு சமயம் வடிவேலுகூட நகைச்சுவை என்ற பெயரில் இதனைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருந்தார். இந்த கன்றாவியில் “படவா…..தொடவா…” என்று எதுகை மோனையோடு ஒரு சினிமா பாட்டு வேறு! அது சரி.. யார் இந்த சண்டாளர்கள்? வேதகாலத்திற்கு முந்தையது […]

July 13, 2024 admin
இஸ்ரேலின் அநீதிகளுக்கு உடந்தையாக இருந்து விட்டு இப்பொழுது ரஷ்யாவிற்கு கண்டனமா? Exclusive

இஸ்ரேலின் அநீதிகளுக்கு உடந்தையாக இருந்து விட்டு இப்பொழுது ரஷ்யாவிற்கு கண்டனமா?

உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவமனையின் மீது ரஷ்ய ராணுவம் அண்மையில் நடத்திய ஏவுகனை தாக்குதலில் 32 ற்கும் அதிகமான பொதுமக்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் பல மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனை மீது ஏவுகனை வீசி குழந்தைகளையும் பொதுமக்களையும் படுகொலை செய்த ரஷ்யாவிற்கு வன்மையான கண்டனங்கள். இந்த தாக்குதலுக்கு மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மன் […]

July 12, 2024 admin
ஈரான்:-ஜனாதிபதி ஒரு மிதவாதம் போற்றும் தலைவர்தான்! Exclusive

ஈரான்:-ஜனாதிபதி ஒரு மிதவாதம் போற்றும் தலைவர்தான்!

ஈரானின் ஜனாதிபதிக்கான மறு தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர். ஈரான் ஈராக் போரில் ராணுவ டாக்டராக பங்களித்தவர். 1999ல் மொஹம்மது கடாமி தலைமையில் அமைந்த முதல் மிதவாத அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியவர். இவரே ஒரு மிதவாதம் போற்றும் தலைவர்தான். மேற்கு நாடுகளுடன் நட்புணர்வைப் பேணி ஈரான் மீதான பொருளாதாரத்தடைகளை நீக்க வேண்டும் என்பது இவரது கொள்கைகளில் ஒன்று. இதற்காக ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தையும் […]

July 7, 2024 admin
நீதியின் பெயரில் நடக்கும் வன்முறை! Exclusive

நீதியின் பெயரில் நடக்கும் வன்முறை!

மத்தியப் பிரதேசத்தில் அனுப்பூர் மாவட்டத்தில் பாலுமுடா என்ற பகுதியைச் சார்ந்த சரிகா சென் என்ற 23 வயது இந்துப் பெண், சபிகான் என்ற முஸ்லிம் இளைஞரைக் காதலித்து வந்தார். இருவரும் மதங்கள் கடந்து சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். சிறப்புத் திருமணச் சட்டத்தில் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு முன் அறிவிப்பு கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டும். இந்த முன் அறிவிப்பால் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கத் தேடுகின்றனர். […]

July 6, 2024 admin
சென்னைப் போலீசைப் புரட்டிப் போடுங்க ஸ்டாலின் சார்! Exclusive

சென்னைப் போலீசைப் புரட்டிப் போடுங்க ஸ்டாலின் சார்!

எது எதெற்காகவோ போலீஸ் டிப்பார்ட்மெண்டை பந்தாடும் ஸ்டாலின் அரசு சென்னை போலீஸை சீரமைத்தே ஆக வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது. ஆம்.. நமது தமிழ்நாட்டின் தலைநகரமெங்கும் குற்றங்களை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் சிசிடிவி கேமராவின் அவசியத்தை பறைசாற்ற, நடிகர் விவேக் நடித்த மூன்றாம் கண் என்ற குறும்படத்தை நம்மில் எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறோம்? முன்னொரு காலத்தில் ஈ மெயில் அல்லது சிசிடிவி என்ற சொல்லடலையே சென்னை போலீஸ் அறியாத காலக் கட்டத்தில் அப்போதைய டிஜிபி ஸ்ரீபால் மற்றும் […]

July 5, 2024 admin
உடனடி செய்திகள்