2026-யாருக்கு முதல்வர் வாய்ப்பு? – இப்போதைய கணிப்பு!

2026-யாருக்கு முதல்வர் வாய்ப்பு? – இப்போதைய கணிப்பு!

2026 இல் திமுக மறுபடியும் ஜெயிக்க வேண்டும் என்றால் ஓரே வழி அதிமுக-பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஏற்பட வேண்டும் . அப்படி இணைந்தால் மட்டுமே மறுபடியும் தமிழகத்தில் இருக்கும் பா.ஜ.க எதிர்ப்பை வைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறது திமுகவும் அதற்கு ஆதரவாக (மட்டுமே) இருக்கும் இங்குள்ள பத்திரிக்கை ஊடகங்களும் .

முதலில் திமுக கூட்டணி கட்சிகள் அப்படியே 2026 தேர்தலில் தொடர்ந்தால் மீண்டும் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டது. திமுக. ஆனால் அவர்கள் கணக்கை மீறி திமுக ஆட்சி மீது மக்களுக்கான வெறுப்பு அதிகமாகி கொண்டே போகிறது. இதில் சோகம் என்னவென்றால் மக்களின் உண்மையான மனநிலையை அறிய திமுக மேல்மட்டம் கொஞ்சம் கூட அக்கறைக் காட்டவில்லை என்பதுதான். இச்சூழலில் திமுக அதே கூட்டணி தொடர்ந்தாலும் கூட அந்த கூட்டணி கட்சிகளும் மக்கள் பிரச்சனையில் ஆளும் திமுக கட்சிக்கு ஜால்ரா மட்டுமே போட்டுக் கொண்டு செயலற்று நிற்பதால் திமுக கட்சி மீதான வெறுப்பு இன்று திமுக கூட்டணி கட்சிகள் மீதும் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது‌.அதனால் திமுக கூட்டணி கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் கூட அதன் வாக்குகளை எதிர்கட்சியான அதிமுக,புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இடம் இந்த கூட்டணி கட்சிகள் கண்டிப்பாக இழக்கும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி , and CPM ஆதரவாளர்கள் மனநிலை மெல்ல மெல்ல இந்த திமுக‌ ஆட்சி மீதான அதிருப்தியால் மாற்று கட்சிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்‌. காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தல் என்றால் மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் சட்டப்பேரவை தேர்தலில் அந்த கட்சி தேய்ந்து கொண்டே தான் உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2026 திமுகவுடன் மீண்டும் கூட்டணி போட்டால் அந்தக் கட்சி அந்த தேர்தலோடு ஆயுள் முடிந்து விடும்.

ஆக வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அத்தனை கட்சிகள் அப்படியே இருந்தாலும் கூட 2026 சட்டப்பேரவை தேர்தலில் 32 to 35 % வாக்குகளை தாண்டுவதே சிரமம்‌.

ஆனால் அதிமுக கட்சி உறுதியாக குறைந்தபட்சம் தனிக்கட்சியாக 25 to 28% வாக்குகளும் அதிகபட்சம் 32 to 33% வாங்கும்.இதில் தேதிமுக கண்டிப்பாக 2 சதவீதம் வாங்கும்‌. பா.ம.க உறுதியாக திமுக அல்லது அதிமுக கட்சியுடன் தான் செல்லும்‌.பா.ம.க எந்த கூட்டணிக்கு செல்கிறதோ அதன் எதிர் கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்லும்.

அதிமுக-பா.ஜ.க கூட்டணி வைத்தால் அதிமுகவிற்கு 5% வாக்குகள் அதிகமாக கிடைக்கலாம் ஆனால் திமுக கூட்டணிக்கு 12% வாக்குகள் கூடுதலாக செல்லும்.இதனால் அதிமுக கட்சிக்கு 8%-10% வாக்குகள் இழக்கும். (ஆந்தை ரிப்போர்ட்டர்)

Option 1:-
**
திமுக கட்சி-25%-28%(2021-37%)
திமுக அதே 2021 கூட்டணி கட்சிகள் நிலைத்து இருந்தால்-6%-7%(2021-8.5%)
திமுக கூட்டணி 35% வாக்குகளை பெறும்.

அதிமுக-30%-33%(2021-33.5%)
தேதிமுக-2.5%
ஒரு வேளை பா.ம.க வந்தால் 4%-5%
மொத்தம் 40% அதிமுக+பா.ம.க+தேதிமுக பெறும்.

OPTION:-2
**

அதிமுக+பா.ம.க+தேதிமுக+த.வெ.க கூட்டணி அமைந்தால் இக்கூட்டணி 50%-55% வாக்குகளை பெறும்.

தமிழக வெற்றிக் கழகம் விஜய் கட்சி தனியாக நின்றால் – 07%-10% வாக்குகளை பெறும். சிலர் சொல்வது போல் த.வெ.க தனித்து 20% சதவீதம் என்பதெல்லாம் வெறும் கற்பனை‌. பனையூர் முதல்வர் விஜய்க்கு ஆலோசனை சொல்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அதுவும் உடனடியாக பூத் வாரியாக நேரடி கவன் செலுத்தி விஜய் ஜோசப்பும் களத்திற்கு சுற்றுப்பயணம் செய்து சுறுசுறுப்பாக செயல்பட்டால் மட்டுமே 07% to 1% பெற வாய்ப்புண்டு.

அதே சமயம் தமிழக வெற்றிக் கழகம் வருகையால் திமுக+ கூட்டணி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 7%-19% வாக்குகளை இழக்க நேரிடும் . அதிமுக கட்சி 6%-9% வாக்குகளை இழக்க நேரிடும். நாம் தமிழர் கட்சி 3 சதவீத வாக்குகளை இழக்க நேரிடும்.

திமுக +கூட்டணி கட்சிகள் சேர்ந்து 30-33% வாக்குகளை மட்டுமே பெறும்.

நாம் தமிழர் கட்சி-5%-7% வாக்குகளை பெறும்.

இதை மக்களிடம் மடைமாற்ற தான் தமிழ்நாட்டில் ஊடகங்களை விலைக்கு வாங்கி குழப்பி , தெளியவைத்து மறுபடியும் குழப்ப வைக்க திமுக+பா.ஜ.க மறைமுக கூட்டணி தொடர்ந்து முயல்கிறது.

ஆனா இவர்களை நம்ப இனி மக்கள் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.!

ஆந்தை ரிப்போர்ட்டர் டீம்

Related Posts