32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 230 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 230)
மோடியின் 10 கட்டளைகள்:::அடி பணிந்தது அமெரிக்கா! By கதிர் Running News

மோடியின் 10 கட்டளைகள்:::அடி பணிந்தது அமெரிக்கா! By கதிர்

மாநில முதல்வரை அமெரிக்க தூதர் சந்திப்பது சகஜம். தொழில் முதலீடு பற்றி பேசுவார்கள். மனித உரிமை, மத சுதந்திரம் பற்றியும் பேசலாம். மோடியை நான்சி பவல் நாளை சந்திக்கும்போது இதெல்லாம் பேசப்போவதில்லை. மாட்டேன், முடியாது என மோடி கூறிவிட்டார். குஜராத் கலவரத்தை ஒடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்பது மோடி மீதான ஒரு குற்றச்சாட்டு. அதன் பேரில் அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டது. அங்கு நிறைய குஜராத்திகள் இருந்தும் மோடியால் போக முடியாத நிலை. இது […]

February 13, 2014 admin
இந்தியனுக்கு பதவி கிடைத்தால்  கம்ப்யூட்டர் விலை குறையுமா?!இழு தள்ளு (4) by கதிர் Running News

இந்தியனுக்கு பதவி கிடைத்தால் கம்ப்யூட்டர் விலை குறையுமா?!இழு தள்ளு (4) by கதிர்

சத்யா நாதெள்ள என்ற இந்தியர், உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு இருப்பதை இந்தியாவே கொண்டாடுகிறது.சத்யா ஆந்திராவில் பிறந்தவர். ஹைதராபாத் பள்ளியில் படித்தார். அப்புறம் டெல்லி. அதோடு இந்திய தொடர்பு முடிகிறது. மேல்படிப்பு அமெரிக்காவில். அந்த நாட்டின் குடிமகனாகி, மைக்ரோசாஃப்ட் கம்பெனியில் 22 ஆண்டுகளாக வேலை செய்கிறார். இதில் இந்தியர்கள் கொண்டாட என்ன இருக்கிறது?இட்லி விற்று பிழைக்கும் அபலைத்தாயின் மகனாக இருட்டுக் குடிசையில் வளர்ந்து, உதவித்தொகை மூலம் ஐஐடி வரை […]

February 12, 2014 admin
பிரமிக்க வைக்கும் பில்கேட்ஸ்! Running News

பிரமிக்க வைக்கும் பில்கேட்ஸ்!

உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது. வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ […]

February 11, 2014 admin
நிர்வாணப் படம் என்பதாலேயே அது ஆபாசமாகி விடாது: சுப்ரீம் கோர்ட் Running News

நிர்வாணப் படம் என்பதாலேயே அது ஆபாசமாகி விடாது: சுப்ரீம் கோர்ட்

ஆபாச எண்ணத்தை தூண்டுவதாக உள்ள பாலியல் வக்கிர படங்களை ஆபாசமாக கருதலாம். தீய எண்ணத்தை காட்டுவதா கவும் பாலியல் வெறியை தூண்டுவதாகவும் இருக்கும் படங்களை ஆபாச படங்களாக கருதலாம்.மற்றபடி, நிர்வாணப்படம் என்பதால் மட்டுமே அது ஆபாசமாகிவிடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஜெர்மனி டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பார்பரா பெல்டஸ் என்ற பெண் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்றை பத்திரிகை ஒன்று 1993ல் வெளியிட்டிருந்தது. இந்த படம் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டென் […]

February 10, 2014 admin
பத்திரிகையாளர்கள் ஊதியம் இனியாவது உயருமா? By கதிர் Running News

பத்திரிகையாளர்கள் ஊதியம் இனியாவது உயருமா? By கதிர்

மஜிதியா ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு பத்திரிகைகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘செய்தியாளர்கள் மற்றும் செய்தித்துறை சாராத அனைத்து ஊழியர்களுக்கும் இவ்வளவு அதிகமான சம்பளம் வழங்கினால், பெரும் நஷ்டம் ஏற்பட்டு பத்திரிகையை மூடும் நிலைதான் வரும்’ என்று பத்திரிகை அதிபர்கள் தரப்பில் வாதிடப்பட்டதை கோர்ட் ஏற்கவில்லை. பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை ஊழியர்களுக்கு மஜிதியா குழி நிர்ணயம் செய்துள்ள சம்பளம் மற்றும் சலுகைகள், இப்போடு அவர்கள் அனுபவிப்பதைவிட இரண்டு மடங்காக உள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா […]

February 9, 2014 admin
மூன்றாவது அணியின் ஆறாவது அவதாரம்!இழு தள்ளு (3) by கதிர் Running News

மூன்றாவது அணியின் ஆறாவது அவதாரம்!இழு தள்ளு (3) by கதிர்

வைகுண்ட ஏகாதசி இரவில் பக்தர்கள் கண் விழித்து விரதம் இருப்பார்கள். அவர்களுக்கு வசதியாக டீவி சேனல்களில் பக்திப்படங்கள் ஒளிபரப்பாகும். அந்த மாதிரி தேர்தல் வரும்போது தூசி தட்டி திரையிடப்படும் படத்தின் பெயர் மூன்றாவது அணி. எந்த புண்ணியவான் சூட்டிய பெயரோ, தெரியவில்லை. இப்போது அதை உச்சரிக்கவே கூச்சப்படுகிறார்கள், சம்பந்தப்பட்டவர்கள். இடதுசாரி தோழர்கள் ‘மாற்று அணி’ என்று அழுத்திச் சொல்கிறார்கள். ‘காங்கிரஸ் ஊழல் கட்சி. பிஜேபி மதவாத கட்சி. ஆகவே இரண்டு கட்சிகளோடும் உறவு வேண்டாம் என்று ஒதுங்குகிறோம்’ […]

February 8, 2014 admin
அதற்கு இவர் சரிப்பட மாட்டார்! இழு தள்ளு (2) by கதிர் Running News

அதற்கு இவர் சரிப்பட மாட்டார்! இழு தள்ளு (2) by கதிர்

’ஆமாம், 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது என் தந்தை ராஜிவ் காந்தி தலைமை வகித்த காங்கிரஸ் அரசுதான்...‘ஆமாம், இந்த தேர்தலில் பிஜேபிதான் அதிக இடங்களில் ஜெயித்து ஆட்சி அமைக்கப் போகிறது. காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார மனதை தயார்படுத்திக் கொண்டுவிட்டது...‘இல்லை, காங்கிரஸ் ஒருவேளை ஜெயித்தாலும்கூட நான் பிரதராக மாட்டேன். எங்கள் கட்சியில் என்னைவிட அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவர்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது வருவார்கள்…’—இப்படியெல்லாம் ராகுல் காந்தி பதில் சொல்லி இருந்தால், எதிர்க்கட்சியினரும் […]

February 7, 2014 admin
குடியரசு தலைவருக்கு –ஏன் இந்த கவலை? (இழு தள்ளு 1- by கதிர் ) Running News

குடியரசு தலைவருக்கு –ஏன் இந்த கவலை? (இழு தள்ளு 1- by கதிர் )

தேர்தல் நடந்து புது உறுப்பினர்கள் பதவி ஏற்றதும் கூடுகின்ற முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தை ஜனாதிபதி தொடங்கி வைத்து உரை நிகழ்த்துவார். வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற கூட்டமும் அதே போல தொடங்கும். இது மரபு. உரையை தயார் செய்வது மத்திய அரசு. வாசிப்பது மட்டுமே ஜனாதிபதி வேலை. குடியரசு தினத்துக்கு முந்தைய மாலையில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார். இது நாட்டின் முதல் குடிமகன் நாட்டின் குடிமக்களுக்கு சொல்லும் செய்தி. இதை ஜனாதிபதியே எழுதிக் கொள்ளலாம். அரசின் ஒலி, ஒளி […]

February 6, 2014 admin
நடப்பு நாடாளுமன்றம் பற்றிய மினி ரிப்போர்ட்! Running News

நடப்பு நாடாளுமன்றம் பற்றிய மினி ரிப்போர்ட்!

15வது நாடாளுமன்றம் மிக மோசமாகச் செயல்பட்டிருக்கிறது. அது கூடிய நாட்களை விடவும் ஒத்திவைக்கப்பட்ட நாட்களே அதிகம். மிகக் குறைவான சட்டமுன்வரைவுகளே இந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிர் இட ஒதுக்கீடு, ஊழல் தடுப்பு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல முக்கியமான சட்ட முன்வரைவுகள் முடக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, உழைப்பாளிகளின் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை சூதாட்டப் பணமாக மாற்றுதல் உள்ளிட்ட கார்ப்பரேட் நலன் காக்கும் சட்டமுன்வரைவுகள் அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு ஆளும் […]

February 5, 2014 admin
’காதலர்கள் நல ஆணையம்’ அமைக்க கெஜ்ரிவாலிடம் கோரிக்கை! Running News

’காதலர்கள் நல ஆணையம்’ அமைக்க கெஜ்ரிவாலிடம் கோரிக்கை!

காதலர்கள் பூங்காக்களில் சுதந்திரமாக சுற்றி திரியவும், ஓட்டல்களில் அறை எடுத்து தங்கவும் அனுமதிக்க வேண்டும். டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் காதல் சம்பந்தப்பட்ட துறை அறிமுகப்படுத்த வேண்டும். அங்கு, உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுகளையும் கட்டுப்படுத்துவது பற்றி கற்று தர வேண்டும்.குறிப்பாக காதலர்கள் குறை தீர்க்க ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கோரிக்கைகளை கெஜ்ரிவால் கனிவுடன் கேட்பார். ஏனெனில் அவரும் காதல் திருமணம் செய்தவர்தான். எனவே, காதலர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் […]

February 4, 2014 admin
உடனடி செய்திகள்