32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 231 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 231)
பேரறிவாளன், சாந்தன், முருகன் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு! Running News

பேரறிவாளன், சாந்தன், முருகன் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு!

ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர், கருணை மனு மீதான முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், தங்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். இவர்கள் சார்பில், ராம்ஜெத்மாலினி வாதாடினார். இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு இன்று அளித்த.விளக்கத்தில், ‘கருணை மனு தாமதமானதை சுட்டிக்காட்டி தண்டனையை குறைக்க கூடாது. உள்துறை அமைச்சர்கள் மாறியதால் கருணை மனு மீதான முடிவு […]

February 4, 2014 admin
வளர்க்க வேண்டிய வேல மரங்களை  அடையாளம் காண்போம்! Running News

வளர்க்க வேண்டிய வேல மரங்களை அடையாளம் காண்போம்!

தமிழ்நாட்டின் வேளாண்மை மற்றும் சுற்றுச் சூழல் நல மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் வகையிலான தீர்ப்பு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் வழங்கியுள்ளது. வேளாண்மைக்கும், சுற்றுச் சூழல் நலனுக்கும், நமது மண் வளத்திற்கும் பெருங்கேடு விளைவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அடர்ந்து வளர்ந்து மண்டியிருக்கும் வேலிக்காத்தான் எனப்படும், முள்மரங்களை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பாகும்.இந்த நேரத்தில் சீமைக் கருவேல மரம் என்றழைக்கப்படுகிற வேலிக்காத்தான் முள் மரங்களைப் பற்றியும், […]

February 2, 2014 admin
பத்ம பூஷண் விருது வேண்டாம்’ – நீதிபதி வர்மா மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்! Running News

பத்ம பூஷண் விருது வேண்டாம்’ – நீதிபதி வர்மா மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்!

குடியரசு தினத்தை ஒட்டி உச்ச நீதிமன்றத்தின் மறைந்த முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க அவரது மனைவி புஷ்பா மறுத்துள்ளார். இதற்கான விளக்கத்தை கடிதம் மூலம் அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 29ஆம் தேதி அனுப்பியுள்ளார் என்ற செய்தி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, “இதுபோன்ற குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதற்காக, கடுமையான சட்டங்கள் […]

February 1, 2014 admin
உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்! Running News

உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!

சீன காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற உடல் ஊனமுற்ற 9 வயது சிறுவனின் கனவுக்கு, அந்நாட்டு போலீசார் நிறைவேற்றி கொடுத்து அச்சிறுவனை மட்டுமின்றி பலரையும் உணர்ச்சிபூர்வமாக நெகிழ வைத்தனர். இதையடுத்து ஒரு நாள் முழுவதும் காவல்துறையினருடன் சேர்ந்திருந்து தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்ட சோவ், தனக்கு இந்த வாய்ப்பு அளித்த காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துக் கொண்டான். சோவ் விடைபெற்றபோது அவனுடைய கண்கள் மட்டுமல்ல, காவல்துறையினரின் கண்களும் பனித்தன. சீனாவில் […]

January 29, 2014 admin
நாளிதழ்களின் விலையும்*** நாட்டு மக்களின் நிலையும் (6) *** By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும்*** நாட்டு மக்களின் நிலையும் (6) *** By கதிர்

பத்திரிகை அதிபர் தொடர்ந்தார்: பத்திரிகையின் உரிமையாளர் என்ற அடிப்படையில் அமைந்த செல்வாக்கு ஓர் எல்லையோடு நின்றுவிடும். ஆசிரியருக்கு அப்படியல்ல. அரசு எந்திரத்தின் அனைத்து தளங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், நட்புறவை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். யாரும் உள்நோக்கம் கற்பிக்க மாட்டார்கள். நாடறிந்த பிரபலங்களை ஆசிரியர் பொறுப்பில் நியமிக்கும்போது இந்த வாய்ப்புகள் பல மடங்கு அதிகமாகும். இன்று நம்முடன் மோதும் பத்திரிகை இந்த ஏற்பாட்டை எவ்வளவு சாதுரியமாக பயன்படுத்துகிறது என்று உங்களுக்கு தெரியுமா? காலையில் பிரதமரோடு வாக்கிங், […]

January 28, 2014 admin
“தான் பார்த்த மரணங்கள்!” – அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகம் Running News

“தான் பார்த்த மரணங்கள்!” – அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகம்

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ […]

January 26, 2014 admin
நாளிதழ்களின் விலையும் *** நாட்டு மக்களின் நிலையும்*** (5) By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும் *** நாட்டு மக்களின் நிலையும்*** (5) By கதிர்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் நிதி, நிர்வாகம், விற்பனை மேலாண்மை கற்றுத் தேர்ந்த நிர்வாகிகள் அவர்கள். பிரபல நிறுவனங்களில் அடிப்படை அனுபவம் பெற்றிருந்தவர்கள். இந்திய பத்திரிகை உலகை அடியோடு புரட்டிப்போடும் சிந்தனை எதார்த்த சூழ்நிலைக்கு அப்பாற்பட்டது என்று பத்திரிகை அதிபருக்கு தயக்கமின்றி சுட்டிக் காட்டினார்கள். பத்திரிகை தொழில் ஏனைய தொழில்களில் இருந்து வேறுபட்டது என்றும்; மாறுபட்ட தர்மங்களுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது என்றும் எடுத்துக் காட்டுகளுடன் விவரித்தார்கள். புது விஷயம் ஒன்றை முதல்முறையாக கேட்பவர் போல ஆர்வம் படர்ந்த முகத்துடன் […]

January 25, 2014 admin
இந்திய தேசிய வாக்காளர் தினம்!-ஓட்டுகளை விற்பது நாட்டை விற்பதற்கு சமம்.! Running News

இந்திய தேசிய வாக்காளர் தினம்!-ஓட்டுகளை விற்பது நாட்டை விற்பதற்கு சமம்.!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்குவது தேர்தல் ஆணையம். 1950 ஜனவரி 25ம்தேதி துவங்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் வைர விழா கடந்த 2011ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம்தேதி, தேர்தல் ஆணையத்தை கவுரவிக்கும் வகையில் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. கண்ணியமான முறையில் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, வன்முறையற்ற வாக்குப்பதிவு, வாக்களிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு என்று தேர்தல் ஆணையம், […]

January 25, 2014 admin
நாளிதழ்களின் விலையும் *** நாட்டு மக்கள் நிலையும் (4)*** By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும் *** நாட்டு மக்கள் நிலையும் (4)*** By கதிர்

இடைவேளை முடிந்து கூட்டம் மீண்டும் தொடங்கியது. பத்திரிகை அதிபர்: நாட்டின் நான்கு திசைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரே பத்திரிகை நம்முடையது. ஆனால், எந்த இடத்திலும் நாம் முதல் இடத்தில் இல்லை. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு பத்திரிகை குறுநில மன்னரை போல ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. நாம் பலவீனமாக இருப்பதால் நிறைய நிர்ப்பந்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பலசாலியாக இருப்பவன் எதையும் பொருட்படுத்த தேவையில்லை. நாமும் அவ்வாறு மாறுவோம். பலவீனங்களையே பலமாக மாற்றுவோம். மைனஸ் என்பது ஒரு கோடு. இன்னொரு கோடு […]

January 24, 2014 admin
நாளிதழ்களின் விலையும்*** நாட்டு மக்களின் நிலையும் (3) ***By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும்*** நாட்டு மக்களின் நிலையும் (3) ***By கதிர்

அது விசாலமான அறை. ஆசிரியர் குழு தினமும் அங்குதான் இருமுறை கூடும். எந்த செய்தி எந்த பக்கத்தில் எப்படி வர வேண்டும், எதெல்லாம் தேவையில்லை, எதை எப்படி பிரசுரித்தால் போதும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் கூட்டம் நடக்குமிடம்.அன்றைய கூட்டத்தில் ஆசிரியர் குழுவில் இருந்து எவரும் பங்கேற்கவில்லை. அதுவொரு அவசர கூட்டம். ஆசிரியர் அல்ல, நிர்வாகம் அழைப்பு விடுத்த கூட்டம். விளம்பரம், விற்பனை, நிதி, நிர்வாகம், அச்சகம் ஆகிய 5 துறைகளின் சார்பில் அதனதன் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். […]

January 23, 2014 admin
உடனடி செய்திகள்