32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 226 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 226)
மறுபடியும் முளைக்கும் மரபணு மாற்றம்! Running News

மறுபடியும் முளைக்கும் மரபணு மாற்றம்!

பன்னாட்டு விதை நிறுவனங்களான மான்செண்டோ, பேயர்ஸ், பாஸ்ஃப் ஆகியோரின் இந்திய ஏஜெண்டுகளான அத்வந்தா, மகைக்கோ, ஜே.கே.சீட்ஸ் ஆகியவை வனத்துறை மற்றும் சுற்றச்சூழல் அமைச்சர் வீரப்ப மொய்லியைச் சந்தித்து மரபணு மாற்ற விதை சோதனைகளைப் புதுப்பிக்கச் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.மரபணு மாற்ற விதைப் பரிசோதனை வயல்களை அமைக்கக் கூடாது என்று குரல் கொடுத்த பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரைத் தொடர்ந்து கேரள விவசாய அமைச்சர் கே.பி. மோகனன், ம.பி. விவசாய அமைச்சர் குஷ்மாரியா, இமாசலப் […]

April 15, 2014 admin
இந்த தேர்தலிலாவது நல்லவர்களை தேர்ந்தெடுப்போம்! Running News

இந்த தேர்தலிலாவது நல்லவர்களை தேர்ந்தெடுப்போம்!

லோக்சபாவுக்கு தேர்தல் நடக்கும் இந்த சமயத்தில், சமீபத்தில் லோக்சபாவில் நடந்த சம்பவங்கள், நம் கவனத்தில் கண்டிப்பாக வந்தே தீரும். தெலுங்கானா தனி மாநிலப் பிரச்னையின்போது, அவையில் நடந்த கலாட்டாக்களும், கூத்துகளும் யாராலும் மறக்க முடியாது. ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்ததும், கையில் இருந்தது கத்தி அல்ல – ‘மைக்’ தான் என்று ஒரு எம்.பி., சொன்னதும், இன்னொரு எம்.பி.,யோ ‘மிளகு ஸ்பிரே’யை மற்ற உறுப்பினர்கள் மீது அடித்து தன்னை தற்காத்து (!) கொண்டதும் நினைவுக்கு வருகிறது இனிமேல் […]

April 14, 2014 admin
மோடி அலையின் வேகம் போயே போச்சு! Running News

மோடி அலையின் வேகம் போயே போச்சு!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையையும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையையும் ஒன்றாக வைத்துக்கொண்டு, அவர்கள் அளித்திருக்கும் வாக்குறுதிகளை ஒப்பிட்டால், இருவரும் ஒன்றுபோலவே, வெவ்வேறு வார்த்தைகளில் தங்கள் வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளார்கள் என்பது தெரியவரும்.வேலைவாய்ப்பு; அனைவருக்கும் வீடு; கருப்பு பணத்தை கொண்டு வருவோம்; வருமானவரியை முறைப்படுத்துவோம்; எல்லாருக்கும் ஏற்புடைய, தரமான, குறைந்த செலவிலான மருத்துவ வசதி; தொழில் வளம் என எல்லாமும் ஒன்றுதான். ஆனால், இரண்டே இரண்டு அம்சங்களில் மட்டுமே பா.ஜ.க. அறிக்கை வேறுபட்டுள்ளது. முதலாவதாக, அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு ராமர் கோயிலைக் […]

April 11, 2014 admin
மோடியும் 300  எம்.பி.-களும் By கதிர் Running News

மோடியும் 300 எம்.பி.-களும் By கதிர்

‘முன்னூறு எம்.பி.க்கள் என் பின்னால் அணிவகுக்க வேண்டும்’ என்று நரேந்திர மோடி பேசியிருக்கிறார். பிஜேபி கூட்டணியில் உள்ள கட்சிகள் அதைக் கேட்டு ஆடிப் போயிருக்கின்றன. பிஜேபியில் உள்ள தலைவர்களோ அசந்து போயிருக்கிறார்கள்.எதற்கு குறி வைக்கிறார் மோடி? ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தவர்கள் அரசியலில் உண்டு. ஒரே கல்லில் ஒரு மரத்தையே வீழ்த்தியவர்களும் இருந்திருக்கிறார்கள். ஒற்றைக் கல்லை வீசியெறிந்து ஒரு தோட்டத்தையே கைவசப் படுத்த விரும்பும் அரசியல்வாதியை இந்த நாடு இப்போதுதான் சந்திக்கிறது. ‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

April 9, 2014 admin
சவுக்கு.நெட்டை மூடிவிட்டோம். இப்போது புதிய தளத்திற்குச் செல்கிறோம்.! Running News

சவுக்கு.நெட்டை மூடிவிட்டோம். இப்போது புதிய தளத்திற்குச் செல்கிறோம்.!

”பிரச்னை சவுக்கு.நெட்டு தானே? அதை மூடிவிட்டோம். இப்போது புதிய தளத்திற்குச் செல்கிறோம். இதன் மூலம் எம் வீச்சு இன்னமும் கூடுதலாகும். நன்றி நீதியரசர் அவர்களே.இதுவரை சவுக்கு தளம் தமிழில் மட்டும் உள்ளது. ஆங்கிலத்தில் இல்லையே என்ற வருத்தம் பலரால் பகிரப்பட்டுள்ளது. இனி ஆங்கிலம் மற்றும் தமிழில் பகிரப்படும்” என்று சவுக்கு ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து புதிய சவுக்கு தளத்தில்,”.சவுக்கு தளத்தோடு தொடர்ந்து பயணித்து வந்த அன்பு உறவுகளே…….சவுக்கு தளம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டதும் […]

April 8, 2014 admin
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?’ Running News

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?’

வரும் மக்களவைத் தேர்தலில் மொத்தம் ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்று நிதி மேலாண்மை சேவைகள் நிறுவனமான சி.எம்.எஸ். மேற்கொண்ட ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு கணக்கில் வராத கருப்புப் பணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.1996ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ரூ.2,500 கோடி செலவிடப்பட்டது. பின்னர் 2009 மக்களவைத் தேர்தலில் ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. இப்போது அது ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இது ஏறக்குறைய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இணையான […]

April 7, 2014 admin
கருத்துக் கணிப்பு புருடாக்கள்! Running News

கருத்துக் கணிப்பு புருடாக்கள்!

ஒவ்வொரு தேர்தலின்போதும் கருத்துக்கணிப்புகள் என்று எல்லா தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் பீற்றிக் கொள்ளும். வேலை கெட்ட நாமும் அவற்றைப் பிடித்துக்கொண்டு இவந்தான் ஜெயிப்பான் அவந்தான் ஜெயிப்பான் என்று மோதிக்கொண்டிருப்போம். கட்சி ரசிகர்கள் தவிர, பிரணாய் ராய் ரசிகர்கள், ராஜ்தீப் ரசிகர்கள் என்றும் மோதிக் கொண்டிருப்போம். இதற்கிடையில் ஊடகங்கள் நன்றாகக் கல்லா கட்டும். இதுகுறித்து விவரமாக எழுத நிறையவே தரவுகள் சேர்த்திருக்கிறேன். ஆனால் எழுத நேரம் இருக்குமா என்று தெரியாது. அதனால், சுருக்கமாக கடந்த தேர்தலின் கருத்துக் கணிப்புகள் குறித்த […]

April 6, 2014 admin
வை கோ வெல்ல வேண்டும்! – ஏன்? Running News

வை கோ வெல்ல வேண்டும்! – ஏன்?

பாஜக கூட்டணியில் வைகோ இணைந்த பிறகு சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு இவரை விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் திமுகவினராக இருப்பார்கள் அல்லது பாஜக வை வெறுப்பவர்களாக இருப்பார்கள். இதே வைகோவை முன்பு திட்டிக்கொண்டு இருந்த பாஜக ஆதரவாளர்கள் தற்போது வைகோவை பாராட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வைகோ தூய்மையானவர் நல்லவர் வல்லவர் என்றெல்லாம் கூறவில்லை, அப்படி கூறவும் முடியாது. தினகரன் அலுவலகம் எரிப்பு சம்பவத்திற்கு அழகிரியை திட்டி விட்டு அதே அழகிரியை அன்பு சகோதரர் என்று கூற வேண்டிய நிலை. […]

April 5, 2014 admin
நாட்டைக் கெடுக்கும் சொக்கட்டான் விளையாட்டில் கம்யூனிஸ்ட்டுகள்! Running News

நாட்டைக் கெடுக்கும் சொக்கட்டான் விளையாட்டில் கம்யூனிஸ்ட்டுகள்!

அரசியலில், இன்று புரையோடிப் போயிருக்கும் வாரிசு அரசியல், லஞ்சம், ஊழல், சந்தர்ப்பவாதம், தேச விரோதம், மக்கள் விரோதப் போக்கு ஆகியவை, இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தருணத்தில் மக்கள்,16வது பாராளுமன்றத்திற்கு, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க, விரைவில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர்.ஒத்த கொள்கைகள் கொண்டிராத, தொலை நோக்குப் பார்வையில்லாத, மாநில உணர்வும், மொழி, இனப்பாகுபாடும் மிக்க, சந்தர்ப்பவாத அரசியலில் மாநிலக் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அந்த கட்சிகளை ஒருங்கிணைத்து, தேர்தலுக்குப் பின், மூன்றாவது அணி அமைத்து, மத்தியில் ஆட்சியை பிடிக்கும் சொக்கட்டான் […]

April 4, 2014 admin
தனியார் பள்ளி மோகம் தறிகெட்டு  அதிகரிக்கும்  ஆபத்து! Running News

தனியார் பள்ளி மோகம் தறிகெட்டு அதிகரிக்கும் ஆபத்து!

ஒரு மனிதனுக்கு என்னதான் செல்வம் இருந்தாலும், கல்விச்செல்வம் இல்லையெனில், மற்ற செல்வங்கள் இருந்தும், பயனில்லை. இதைத்தான் அய்யன் வள்ளுவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமறையாம் திருக்குறளில், ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை’ என்று எழுதியிருக்கிறார். அதாவது, ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். மற்ற செல்வங்கள் சிறப்புடைய செல்வம் அல்ல என்பதுதான் அதன் பொருள். அந்த அறிவு செல்வத்தை வழங்குவதற்குத்தான் மத்திய–மாநில அரசுகள் ஆண்டுதோறும் பட்ஜெட்டுகளில் முன்னுரிமை கொடுத்து தாராளமாக […]

April 3, 2014 admin
உடனடி செய்திகள்