Exclusive
AI மொழிபெயர்ப்பின் ஆபத்து: தொலைந்துபோகும் மனித உணர்வு!
மொழியாக்கம் என்பது இரு வேறு மொழிகளுக்கிடையேயான வெறும் சொற்களின் பரிமாற்றம் மட்டுமல்ல. அது மனித நாகரிகத்தின் காலம், பண்பாடு மற்றும் உணர்வுகளுடன் பின்னப்பட்ட ஒரு வரலாற்றுப் பயணமாகும். காலத்துடனான இந்த நுட்பமான உறவைச் செயற்கை நுண்ணறிவால் (AI) ஒருபோதும் புரிந்துகொள்ளவோ அல்லது தொட்டு உணரவோ முடியாது. செயற்கை நுண்ணறிவு ஒரு சொல்லை நொடிப்பொழுதில் மொழிபெயர்த்துத் தரக்கூடும்; ஆனால், அந்த மொழியாக்கச் செயல்பாட்டின் பின்னாலிருக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் அது உங்களிடமிருந்து பறித்து விடுகிறது. அதுவே அதன் பலம் அல்ல, […]