32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 178 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 178)
தமிழக மக்கள் எப்போதுமே உரத்துப் பேசுகிற ஒரு தலைவர் கருணாநிதி! Running News

தமிழக மக்கள் எப்போதுமே உரத்துப் பேசுகிற ஒரு தலைவர் கருணாநிதி!

எதிர்ப்பு அரசியலில் புடம் போடப்பட்ட போர்க்குணமிக்க ஒரு தலைவன் காலப்போக்கில் மிதமான அணுகுமுறைக்கு மாறும் போது கிடைக்கும் தோற்றம்தான் தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதியின் சித்திரம். எதற்காக வெல்லாம் அவர் ஆவேசப்பட்டு போராட்டத்தில் குதித்தாரோ, அதற்கெல்லாம் இப்போது அமைதி காக்கிறார்.  தன் கூடவே பிறந்த போர்க்குணத்தை நிகழ்கால அரசியல் யதார்த்தங்கள் மென்று விழுங்குவதைக் கண்டு புழுங்குகிறார் என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள். அவரது அரசியல் வரலாற்றில் அவர் பெற்றதைவிட இழந்தது அதிகம். விடாப்பிடியாக மத்திய அரசால் […]

May 24, 2017 admin
உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது! Running News

உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது!

இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவலைப்படும் விஷயமாகி போன உடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இதனிடையே உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதால் உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வு மூலம் அறிவித்துள்ளனர். அதாவது உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இதனால் […]

May 24, 2017 admin
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் காடுகளை அழிக்கும் போக்கு அதிகரிப்பு!- இஸ்ரோ எச்சரிக்கை! Running News

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் காடுகளை அழிக்கும் போக்கு அதிகரிப்பு!- இஸ்ரோ எச்சரிக்கை!

நவீன தொழில்நுட்ப வாழ்க்கை வாழ மனிதன் தொடங்கியது முதல் மக்கள் தொகைப் பெருக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. அதாவது, நவீன தொழில்நுட்ப வளர்ச்சி தொடங்கிய 19ம் நூற்றாண்டில்தான் மக்கள் தொகை அதிகரித்தது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகையில் அளவு சுமார் 600 கோடி. அதாவது ஒவ்வொரு ஆண்டும் 98 மில்லியன் மக்கள் கூடுதலாக சேருகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மக்கள் தொகையில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில்தான் பாதி அளவு உள்ளனர். […]

May 23, 2017 admin
ஆரம்பிச்சு ரெண்டு வாரத்துலே டி ஆர் பி- யிலே டாப் – அர்னாப் -பின் ரிபப்ளிக் டி வி சாதனை Running News

ஆரம்பிச்சு ரெண்டு வாரத்துலே டி ஆர் பி- யிலே டாப் – அர்னாப் -பின் ரிபப்ளிக் டி வி சாதனை

அர்னாப் கோஸ்வாமி. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு கொல்கத்தாவில் உள்ள டெலிகிராஃப் நாளிதழில் பத்திரிகையாளர் பணிவாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். என்.டி.டி.வி., டைம்ஸ் நவ் என அதனை அடுத்து முன்னேறினார். தொடர்ந்து மேற்கத்திய கலாசாரத்தை சாடுவது, இந்திய தேசியவாதம் என்கிற பேரில் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடுவது என ஒருதலை பட்சமாகக் கருத்துகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியே பிரபலம் அடைந்தார். டைம்ஸ் நவ் செய்தி சானல் மூலமாகச் சர்ச்சைக்குரிய செய்தியாளர் என்கிற அந்தஸ்தையும் பெற்றவரின் ‘ரிபப்ளிக் டிவி’ ஆங்கில செய்தி சேனல் ‘டிஆர்பி […]

May 20, 2017 admin
இளைஞர் தேசமான இந்தியா முதியோரின் கூடாரமாகிறது!? எடிட்டர் ஏரியா

இளைஞர் தேசமான இந்தியா முதியோரின் கூடாரமாகிறது!?

தற்போதைய உலகின் பொதுவான போக்கைக் கவனித்தால் மனிதர்களின் ஆயுட்காலம் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதைக் கவனித்திருக்கலாம். ஆம். இன்றைய உலகில் பத்தில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர். 2050-ல் இதுவே ஐந்தில் ஒருவராக மாறும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். அப்படி என்றால் சுமார் 210 கோடிப் பேர்! ஆனாலும் நம் இந்திய மக்களில் இளைஞர்கள் அதிகம் என்பதென்னவோ உண்மைதான். அதே சமயம், உலகில் உள்ள வயதானோர் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், உலகில் அதிகமான வயதானோர் வாழும் இரண்டாவது நாடாகவும் இந்தியா […]

May 16, 2017 admin
ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட் ஆய்வு முடிவுகள்

ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட்

தங்கள் வருமானம், பொருளாதார சூழ்நிலை, பணிச் சுமை, தனிக்குடித்தனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இப்போதெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்வதையே தள்ளிப்போடுவது ஒரு புறம் நடந்து வருகிறது. மேலும் பல குடும்பங்களில் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்வதுதான் நடக்கிறது. மிகச் சிலர் மட்டுமே தங்களின் குழந்தைகளுக்கு சகோதர உறவு வேண்டும் என்ற ஆசையில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வார்கள். இந்நிலையில் இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களில் 35 சதவிகிதத்தினர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதாக ஆய்வு […]

May 14, 2017 admin
தமிழகமெங்கும் புறாக் கூண்டுகள் போல செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ! எடிட்டர் ஏரியா

தமிழகமெங்கும் புறாக் கூண்டுகள் போல செயற்கை கருத்தரிப்பு மையங்கள் !

மேரி கிஷோர் தம்பதியினருக்கு ஒரு தீராத கவலை. அந்தக் கவலை அந்தத் தம்பதியினருக்கு மட்டும் கிடையாது. உலகை அச்சுறுத்தும் கவலை அது. உலக மக்கள் தொகையில் பதினைந்து சதவீதம் பேருக்கு அந்தக் கவலை இருக்கிறது. இந்தியளவில் பார்த்தாலும் இதே அளவிற்குத்தான் கவலை கொள்கிற கூட்டம் இருக்கலாம். ஆனாலும் இந்தியளவில் இப்போதுதான் அந்தக் கவலை மெல்ல எல்லா திக்குகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது. குழந்தையின்மை என்கிற கவலைதான் அது. குழந்தையின்மை என்பது வெறும் குறைபாடு மட்டும்தான் என்கிற புரிதல் இப்போதுதான் […]

May 13, 2017 admin
பருவமழை இப்பவும் குறைவாதான் பெய்யும்! – பீ கேர்ஃபுல் – மாநிலங்களுக்கு வார்னிங் லட்டர்! எடிட்டர் ஏரியா

பருவமழை இப்பவும் குறைவாதான் பெய்யும்! – பீ கேர்ஃபுல் – மாநிலங்களுக்கு வார்னிங் லட்டர்!

காரணம்  பலவாக இருந்தாலும் நம் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து நாட்டில் போதுமான மழை பெய்யாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றி வருகிறது என்பது என்னவோ உண்மை.. குறிப்பாக போன இரண்டு வருஷங்களாக இயல்பான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையிலும் பல்வேறு மாநிலங்களில் போதுமான மழை கிடையாது, இயல்பைக் காட்டிலும் குறைவாகவே மழை பெய்து கடும் வறட்சி நிலை இன்றளவும் இருக்கிறது. இத்தனிக்கும் கடந்த ஆண்டில் தென் மேற்கு பருவ மழையும் […]

May 10, 2017 admin
கேன்சர் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பதிலாக சினிமா! ஆய்வு முடிவுகள்

கேன்சர் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சையின் போது மயக்க மருந்துக்கு பதிலாக சினிமா!

பொதுவாக குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்கள் : ரத்தப் புற்றுநோய், மூளைக்கட்டி, சிறுநீரகம், தசை, எலும்பு புற்றுநோய், நிணநீர், நரம்பு பகுதிகளைத்தான் அதிகமாகத் தாக்குகின்றன. இந்த வகையான புற்றுநோய்களை குணப்படுத்த மருந்துகள், அறுவை சிகிச்சை, ரேடியோ கதிர் வீச்சு ஆகியவை தனித்தனியாக அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றின் உதவுயுடனோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையின் போது அவர்கள் விரும்பிய சினிமா படத்தை பார்ப்பது அவர்களை அமைதியடைய செய்கிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் […]

May 9, 2017 admin
ஆங்கிலம் தன் அந்தஸ்தை இழந்து வருகிறதோ? அலசல்

ஆங்கிலம் தன் அந்தஸ்தை இழந்து வருகிறதோ?

“ஆங்கிலம்” இங்கிலாந்தில் தோன்றிய ஒரு மொழியாகும். இது யேர்மனிய மொழி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். யேர்மனிய மொழிக் குடும்பம், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இருந்து கிளைத்ததாகும். ஆயினும் ஆங்கிலம் பல மொழிகளினதும் கலப்பு மொழியாகும்.  இன்று உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளான சீனம், ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். 2007 ஆம் ஆண்டு கணிப்பின்படி ஆங்கில மொழியை தாய்மொழியாகக் கொண்டோரின் எண்ணிக்கை 350 – 375 மில்லியன் ஆகும். அத்துடன் உலகளவில் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் […]

May 7, 2017 admin
உடனடி செய்திகள்