எடிட்டர் ஏரியா
ராகுல் மேஜிக்? அல்லது நோட்டா கலாட்டா?
பாஜகவை 16 இடங்களில் நோட்டா தோற்கடித்து விட்டது. அந்த ஓட்டுக்கள் பாஜகவிற்கு விழுந்திருக்க வேண்டியவை. விழுந்திருந்தால் பாஜக சென்ற முறை போல் 115 இடங்களில் வென்றிருக்கும். காங்கிரசின் வெற்றியில் ராகுல் மேஜிக் ஏதும் இல்லை என ஒரு வலை தளத்தைக் காட்டி வாதிடுகிறார் நண்பர் வி. கிருஷ்ணமூர்த்தி (15 இடங்களைப் பட்டியலிடுகிறது வலைத்தளம்) நோட்டா ஓட்டுக்கள் எல்லாம் பாஜகவிற்கு விழுந்திருக்க வேண்டிய ஓட்டுக்கள்தான் என்று நான் நம்பவில்லை. (அவர் சொல்லும் காரணம், ஜி.எஸ்.டியினால் பாஜக மீது கோபம். […]