32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 169 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 169)
சர்ச்சையை கிளப்பிய வைரமுத்து -வின் தமிழை ஆண்டாள் – முழுக்கட்டுரை! Running News

சர்ச்சையை கிளப்பிய வைரமுத்து -வின் தமிழை ஆண்டாள் – முழுக்கட்டுரை!

கடந்த 7ஆம் தேதி தினமணி நாளிதழ் சார்பில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்  நடந்த நிகழ்வு ஒன்றில்  பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கட்டுரையொன்றில் எழுதப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டிப் பேசினார். ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாகத் தகவல் வெளியானது. இது குறித்து வைரமுத்து, “தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன், என்னுடைய கருத்தால் எவரையும் புண்படுத்துவது […]

January 13, 2018 admin
ஹார்வார்டு தமிழ் இருக்கை என்பது மிகப்பெரிய ஊழல்: அய்யாதுரை Running News

ஹார்வார்டு தமிழ் இருக்கை என்பது மிகப்பெரிய ஊழல்: அய்யாதுரை

  உலகில் சுமார் 7102 மொழிகள் உள்ளன. இவற்றுள் 7 மொழிகளை பாரம்பரிய/தொன்மை மொழிகளென வகைப்படுத்தியுள்ளனர், மொழி ஆராய்ச்சியாளர்கள். இவை சமஸ்கிரதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சீனம், பாரசீகம் மற்றும் நமது தமிழ் மொழி. இந்த 7 மொழிகளில் 6 மொழிகள் உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்படுகின்றன. ஆனால் தொன்மையும், நுண்மையும், வன்மையும் மென்மையும், செம்மையும், செழுமையும், வளமையும், இளமையும், ஈடில்லா இலக்கணக் கட்டமைப்பும், இணையில்லா இலக்கியச் சிறப்பமைப்பும் தன்னகத்தே கொண்ட நம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு […]

January 12, 2018 admin
எம்.எல்.ஏ.கள் சம்பளம் எகிறிடுச்சு! ம்.. அப்புறம்..?. Running News

எம்.எல்.ஏ.கள் சம்பளம் எகிறிடுச்சு! ம்.. அப்புறம்..?.

 நம் தமிழக அரசு, நிதி பற்றாக்குறையால், தவித்து வருகிறது. ஆண்டுதோறும் கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. 1984 – 85ம் நிதிஆண்டில்,  2,129.59 கோடி ரூபாய் கடன் இருந்தது. பின், 2015 – 16ல், அரசின் கடன் சுமை, ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து, 95 கோடியே, 65 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு காரணமாக, தமிழக […]

January 11, 2018 admin
சங்கீதத்தில் சாதி இல்லையா? Running News

சங்கீதத்தில் சாதி இல்லையா?

பாடகர் ஸ்ரீனிவாஸின் பதிவு ஒன்றை வாசித்தேன். இசைக்கு சாதி கிடையாது. அதில் சாதியைப் புகுத்தாதீர்கள் என்கிறார். பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய CASTELESS COLLECTIVE குழுவினரின் இசை நிகழ்ச்சியின் பிரம்மாண்ட வெற்றி பலரை எரிச்சலூட்டி இருப்பதை உணர முடிகிறது. இசைக்கு சாதி கிடையாது என்கிறார் ஸ்ரீனிவாஸ். பல பத்தாண்டுகளாக இங்கே நடக்கும் மார்கழி சபாக்களில் சாதி இல்லையா? கர்நாடக சங்கீதத்தில் சாதி இல்லையா? சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் வந்து பேசும்போதும் ’நன்னா பாடுறேடி கொழந்த’ என்று சொல்வதில் […]

January 8, 2018 admin
கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தையை அடிக்கிற தாயைப் போலத் தொழிலாளர்கள்! Running News

கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தையை அடிக்கிற தாயைப் போலத் தொழிலாளர்கள்!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், உயர்நீதிமன்றத்தின் ஆணை இவற்றை விளங்ங்கிக் கொள்ள இந்தப் பதிவு உதவலாம். இரு தரப்புக் கருத்துகளையும் தொகுத்திருக்கிறேன் 1.பிரச்சினை என்ன? மூன்றாண்டுகளுக்கொரு முறை போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. 2013 செப்டம்பரில் போடப் பட்ட ஊதிய ஒப்பந்தங்கள் 2016 ஆகஸ்ட்டோடு முடிந்தது. அடுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கின.கடந்த 16 மாதங்களில் 23 மூன்று முறை அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன. 2.பேச்சு வார்த்தையில் என்ன முட்டுக்கட்டை? இரண்டு […]

January 6, 2018 admin
முன்னாள் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவரின் கடிதம்! : Running News

முன்னாள் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவரின் கடிதம்! :

ஐயா, திரு. விஜயபாஸ்கர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களே.. நான் கடந்த 35வருடங்களாக போக்குவரத்து துறையில் டிரைவராக பணியாற்றி, இன்று ஓய்வு பெற்றுவிட்டேன். பல நாட்கள் அந்த இன்ஜின் வேலை செய்தது இன்று உடலளவில் தளர்ந்து விட்டேன். ஒருநாள் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. என்னை நம்பி இத்தனை மக்கள் அமர்ந்து இருக்கின்றனரே என்று மனதில் வைத்து கொண்டு, அந்த வலியை தாங்கிக் கொண்டு வண்டியை கட்டுபாட்டில் வைத்து ஓரம் கட்டினேன். உடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியோடு […]

January 5, 2018 admin
தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தமிழக வாக்காளன் Running News

தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தமிழக வாக்காளன்

முப்பது ஆண்டுகளுக்கு முன் கையில் துட்டில்லாமல் தெருவில் அலைந்து கொண்டிருந்தவர்கள் திடீரென அரசியலில் இருந்தவர்களோடு அன்டிப் பிழைத்து பணத்தைக் கொள்ளையடித்து பெரிய மனிதர்களாக தங்களை கூறிக்கொண்டு, தேர்தலில் காசு கொடுப்போம் என்று உறுதி கொடுத்து பின் அந்த பணத்தையும் கொடுக்காமல் வெறும் 27 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்று தங்களை நாயகர்ளாக அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். அந்த கிரிமினலகள் .அதற்கும் துதிபாட சில கோஷ்டிகள். அரசியலில் தகுதியில்லாமல், அன்றைய செய்தித்தாள்களை கூடப் படிக்காமல், செய்திகளைக் கேட்டால் கூடத் தெரிவதில்லை. அவர்களை எல்லாம் […]

January 3, 2018 admin
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி! – கொஞ்சம் பிளாக் பேக் ரிப்போர்ட்! Running News

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி! – கொஞ்சம் பிளாக் பேக் ரிப்போர்ட்!

‘’நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்று பகிரங்கமாக இன்று ரஜினிகாந்த் அறிவித்து இருப்பது அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு கடந்த 22 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அவர் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிபடுத்தினார். முன்னதாக  மே மாதம் ரசிகர்களைச் சந்தித்த போது ‘போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று அவர் கூறியிருந்தார். அதன் பின் ‘2.0, காலா’ படப்பிடிப்பில் […]

December 31, 2017 admin
ஆர்கே நகர் தொகுதியில் வென்றது யார்? Running News

ஆர்கே நகர் தொகுதியில் வென்றது யார்?

முதல் முறையாக தமிழ்நாட்டில் கட்சி, சின்னம், தலைவர்கள், பாரம்பர்யம்,  சாதி, மொழி கடந்து தங்களின் மன உணர்வை உண்மையாக வெளிப்படுத்தி உள்ளார்கள்….பணம் விளையாடியது என்பதை ஒரு காரணமாக வைத்து டிடிவியின் வெற்றியின் தகுதியை தரம் குறைக்க முடியாது. காரணம் டிடிவிக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் ஒன்றை கவனிக்க மறந்து விட்டார்கள். அவர்கள் கணக்கின்படி ஒரு ஓட்டுக்கு ₹6000 என கணக்கெடுத்தால் டிடிவி வாங்கிய மொத்த ஓட்டுக்களுக்காக அவர் செலவு செய்ய வேண்டிய தொகை ₹ 53 கோடிகள். […]

December 25, 2017 admin
திரும்பி அழைக்கும் முறை – ஏன் வேண்டும்?! Running News

திரும்பி அழைக்கும் முறை – ஏன் வேண்டும்?!

இந்தியாவில் முதன்முதலாக, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான, எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளை திரும்ப அழைக்க குரல் கொடுத்தவர்கள், 1944இல் எம்.என்.ராய் மற்றும் 1974இல் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆவர். ஜேம்ஸ் மில்,“மக்கள் விரும்பாத மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைப்பது நல்லது”என்று கூறுகின்றார்.தற்போது சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், தைவான், உக்ரைன், வெனிசூலா, போட்ஸ்வானா, தான்சானியா, நமீபியா, மலாவி, ஜாம்பியா, உகான்டா, கயானா, கனடாவில் உள்ள சட்டமன்றங்களில், அமெரிக்காவில் அலாஸ்கா, ஜோர்ஜியா, கன்சாஸ், மின்னசோட்டா, மொன்டானா, ரோட் […]

December 20, 2017 admin
உடனடி செய்திகள்