32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 159 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 159)
ஆரோக்கிய அரசியலுக்கு வழி வகுங்கள்! Running News

ஆரோக்கிய அரசியலுக்கு வழி வகுங்கள்!

நான் மாவாட்டுகிறேன், தோசை சுடுகிறேன், கோழி கறி சமைக்கிறேன், மாட்டிறைச்சியை வீட்டில் பரிமாறுகிறேன், மாட்டை அடக்குகிறேன், Once upon a time இருபது வருடங்களுக்கு முன் பாதிக்கப் பட்டேன்,அந்த மதம் இந்த மதம் போன்ற விவாதங்கள் தான் நடக்கின்றது. ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது, பெட்ரோல், டீசல் விலையேற்றம், எரிவாயு விலையேற்றம், விலைவாசி உயர்வு, பூமி வெப்பமயமாகி நல்ல சுவாசத்திற்கான காற்று கிடைப்பதில்லை, விவசாயம் பாழ்பட்டு போய்விட்டது, தமிழக உரிமைகள் வஞ்சிக்கப்படுகின்றன. இப்படி இந்த தலைபோகிற விசயங் களை […]

October 28, 2018 admin
பேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்! Running News

பேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்!

சின்மயியை தந்தி டிவி பாண்டே பேட்டி எடுத்ததை கண்டேன். இதை விட மோசமாக ஒரு இண்டர்வியூ நடத்த முடியாது. வழக்கமாக கெஸ்ட்களை பேச விடாமல் அவரே பேசுவது என்பதற்காக சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆணுக்கு பெண்ணின் சிக்கல்களை புரிந்து கொள்வது எத்தனை கடினமாக இருக்கிறது என்பதை அந்த பேட்டி உணர்த்தியது. “இத்தனை ஆண்டுகளாக ஏன் சொல்லவில்லை?” “பெரிய மனிதர் அவரின் இமேஜ் என்னாவது?” “ஆண்களின் வாழ்க்கை அழிவது பாவமில்லையா?” இந்த ஆங்கிளில் தான் கேள்விகள் அமைந்திருந்தன. சின்மயி […]

October 22, 2018 admin
நாம் நிலத்தடி நீர் பேரிடரை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்! Running News

நாம் நிலத்தடி நீர் பேரிடரை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்!

தண்ணீரை அடிப்படை வளமாக பார்க்காமல் விற்பனை பண்டமாக பார்த்ததன் விளைவுதான் தற்சமயம் நடைபெறும் “டேங்கர் லாரிகளின்” வேலைநிறுத்தம். காலநிலை மாற்றத்தோடு நம்மை அச்சுறுத்தும் இன்னொரு விசயம் “நிலத்தடிநீர் பேரிடர்”. தற் சமயம், நம்முடைய விவசாயத்திற்கு தேவைப்படும் நீரில் 70% பூர்த்திசெய்வது நிலத்தடி நீர் ஆதாரங்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரின் அளவில் 90% பூர்த்திசெய்வதும் நிலத்தடி நீரே. 1960களில் ஏற்பட்ட பசுமைப்புரட்சியோடு சேர்ந்துவந்த உரம் சார்ந்த விவசாயம், பயிர் விளைச்ச லுக்கு அதிகமான நீரை கோரியது அதன் விளைவாக […]

October 17, 2018 admin
இந்திய மக்களுக்குத்தான் அதிக அளவு மன அழுத்தம்! – உலக சுகாதார மையம் தகவல்! ஆய்வு முடிவுகள்

இந்திய மக்களுக்குத்தான் அதிக அளவு மன அழுத்தம்! – உலக சுகாதார மையம் தகவல்!

டென்ஷன் என்றும் ஸ்டெரெஸ் எனவும் சொல்லப்படும் மன அழுத்தம் என்பது உலக அளவில் மிகப்பெரிய சுகாதார பிரச்சினையாக உள்ளது. இதில், இந்தியாவில், சிறுவர்களும், இளைஞர்களும் கூட பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், மனஅழுத்த விகிதம் வேகமாக அதிகரித்து உள்ளது என்று ஏற்கெனவே தெரிந்த நிலையில் மன அழுத்தம் மற்றும் உளவியல் ரீதியிலான பிரச்சனைகள் இந்தியாவில் தான் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மன அழுத்த தினமான அக்.10ம் தேதியையொட்டி உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள […]

October 11, 2018 admin
Me too இயக்கம் அவதூறு ஆக மாறிவிடும் அபாயம் உண்டு!- ஜெயமோகன்! Running News

Me too இயக்கம் அவதூறு ஆக மாறிவிடும் அபாயம் உண்டு!- ஜெயமோகன்!

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, நான் ஊடகத்துறையில் வேலை பார்க்கிறேன். இன்று எங்கள் அலுவலகத்தில் இந்த செய்தியை விவாதித்துக்கொண்டிருந்தோம் – https://www.thenewsminute.com/article/indian-medias-metoo-begins-women-journos-call-out-sexual-harassers-newsrooms-89548. இப்போது மேலைநாடுகளில் எல்லா துறைப்பெண்களும் பாலியல் தொந்தரவுகளை பற்றி ‘மீ டூ’ (#metoo) என்ற பெயரில் பேசத்தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் அதன் அலை தொடங்கியுள்ளதாக இந்தச்செய்தி குறிப்பிடுகிறது. இந்த செய்தியில் பல பெண்கள் பதிவு செய்த இடர்களை என் வேலையிடத்தில் நானும் சந்தித் திருக்கிறேன். அந்த வகையில் இப்படிப்பட்ட செய்திகள் வெளியாவதில் மகிழ்ச்சி அடை கிறேன் .  […]

October 9, 2018 admin
மேடையை தெறிக்கவிட்ட மெல்லிய பூங்காற்று! Running News

மேடையை தெறிக்கவிட்ட மெல்லிய பூங்காற்று!

ஈராக்கைத் தொடர்ந்து ஈரான் நாட்டுடனும் ஒரு ரவுண்டு முட்டி மோதிக் கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துடியாய்த் துடிக்கிறார். போர்கள் நடந்தால்தான் ஆயுதங்கள் விற்கும். ஆயுத வணிகர்களுக்கு பெரும் பணம் கொட்டும். போரில் வீழ்ந்த நாட்டில் தங்களுக்கு சாதகமான ஆட்சியை ஏற்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை சுரண்ட முடியும். இடிந்த பாலங்கள், கட்டடங்கள், சாலைகளைக் கட்டித் தருவதாகக் கூறி ஏராளமான அளவில் காசு பார்க்க முடியும். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அதிபர் டிரம்ப்பின் ஈரான் […]

September 29, 2018 admin
சட்டம் கள்ள உறவை நியாயப்படுத்தவில்லை! Running News

சட்டம் கள்ள உறவை நியாயப்படுத்தவில்லை!

திருமணத்திற்கு வெளியாயன உறவு குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் இல்லை! குடிமையியல் பிரிவில் குற்றம்!.தீர்ப்பைப் பற்றித் தெரியாமல் இந்தியாவெங்கும் இனி கள்ளக் காதல் உருவாகி விடும்னு பேசப்படுவதை என்னெவென்று சொல்வது! திருமணத்திற்கு வெளியான உறவு என்பது தனி மனித வாழ்க்கைனு சொன்னா, எல்லோரும் உறவு வச்சிக்கோங்கன்னு அர்த்தம் இல்லை. கணவன், மனைவி விருப்பப்பட்டு, புரிதலோடு செய்யும் எதுவும் அவரவர் குடும்பம், தனி உறவு சார்ந்தது.! மனைவியோ, கணவரோ யாரின் உறவையும் யாரின் தேர்வையும் பண்பாடு என்ற பெயரில் […]

September 28, 2018 admin
அமெரிக்க டாலருக்கும் நமது ரூபாய்க்கும் ஏன் இந்த வித்தியாசம்…?  புரிதலுக்கான ஒரு விழிப்புணர்வு பதிவு1 Running News

அமெரிக்க டாலருக்கும் நமது ரூபாய்க்கும் ஏன் இந்த வித்தியாசம்…? புரிதலுக்கான ஒரு விழிப்புணர்வு பதிவு1

ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.! எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.! ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்… என்ன,… அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான […]

September 27, 2018 admin
தாமரையின் ரெய்டில் சிக்கிய பிரபலம் + நடிகை! Running News

தாமரையின் ரெய்டில் சிக்கிய பிரபலம் + நடிகை!

செய்தியின் தலைப்பை பார்த்ததும் ஏதோ சினிமா செய்தி என்று நினைத்தால் இன்னும் நீங்கள் பச்சபுள்ளையாகவே இருக்கிறீர்கள் என்று அர்த்தம்…அதே நேரம், இதில் ஏதோ ஒரு அரசியல் கலந்திருக்கிறது என்று யோசித்திருந்தால் சபாஷ்… போட்டுக் கொள்ளுங்கள்…சமீபத்திய தமிழக நிகழ்வுகளில் அடிக்கடி பேசப்படுபவை வருமானவரித்துறை ரெய்டு… அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளை மட்டுமே குறிவைத்த ரெய்டு சமீப காலமாக அதிகாரிகள் வீடுகளுக்கும் பரவியிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு சாதமாக நடந்து கொள்ளாமல்போனால் இதுபோன்ற ரெய்டு பயமுறுத்தல்கள் எல்லா ஆட்சியிலும் வழக்கமான ஒன்றுதான்.அதிலும் கடந்த 4 ஆண்டுகளில் […]

September 23, 2018 admin
தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தினை ஆளுநர் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் கடமை! Running News

தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தினை ஆளுநர் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் கடமை!

ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது.அது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டது குறுக்குச்சால் ஓட்டும் நடவடிக்கை தவறானது.இது வேதனையானது. அதிர்ச்சியளிக்கிறது. இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மட்டுமில்லாமல் மாநில உரிமைகளை பறிப்பதாகும். எழுவர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றமே மாநில அரசு விடுதலை குறித்து முடிவு எடுக்கலாம் என்று சொன்ன பிறகு, தமிழக அரசின் அமைச்சரவையின் தீர்மானத்தினை ஆளுநர் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் அவரது கடமை.ஆனால் ஆளுநர் இதை புறந்தள்ளியது […]

September 13, 2018 admin
உடனடி செய்திகள்