உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணை – பிசிசிஐ ரிலீஸ்!

உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணை – பிசிசிஐ ரிலீஸ்!

கொரோனா வைரஸ் முதலாம் மற்றும் இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக கடந்தாண்டு ரஞ்சிக் கோப்பை உள்பட வயதுவாரி கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு அனைத்துத் தொடர்களுக்குமான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் செப்டம்பர் 12ம் தேதி மகளிர் ஒருநாள் லீக் தொடருடன் இந்த ஆண்டின் உள்நாட்டு சீசன் தொடங்குகிறது. அதன்பின்னர் அக்டோபர் 20ம் தேதி உள்நாட்டு டி20 லீக் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் தொடங்குகிறது. இதன் இறுதிப்போட்டி நவம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது.

இதேபோல் மிகப்பெரிய தொடரான ரஞ்சிக் கோப்பை தொடர், வரும் நவம்பர் 16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடந்தாண்டு ரத்து செய்யப்பட்ட ரஞ்சி கோப்பை நிகழாண்டில் வரும் நவம்பர் 16-இல் தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 19 வரை 3 மாதங்கள் நடைபெறவுள்ளன.

இதன்பிறகு விஜய் ஹசாரே தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறுகிறது.

இப்படியாக நிகழாண்டில் மொத்தம் 2,127 உள்நாட்டு போட்டிகள் விளையாடப்படவுள்ளன.

அட்டவணை முழு விவரம் இதோ – இங்கே க்ளிக் செய்யவும்

 

error: Content is protected !!