அம்பானியின் மகன் ஆகாஷூக்கு நிச்சயதார்த்தம் ஆயிடுச்சு!

அம்பானியின் மகன் ஆகாஷூக்கு நிச்சயதார்த்தம் ஆயிடுச்சு!

சரவதேச பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பெற்ற நம்ம நாட்டை சேர்ந்த முகேஷ் அம்பானி என்ற கோடீஸ்வரரின் மகன் ஆகாஷ் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது என்றும் இவரின் திருமண பத்திரிகையின் மதிப்பு ஒவ்வொன்றின் விலையே ரூ.1.5 லட்சம் என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில் ஆகாஷ் அம்பானி, தன் கேர்ள் பிரண்டான வைர வியாபாரியின் மகளுடான திருமண நிச்சயதார்த்தம் முந்தா நேற்றுதான் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகாஷ் அம்பானி தனது பள்ளித்தோழி ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக முன்னரே வந்த தகவல்கள் படி இந்த நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய வைர வியாபாரியான ரோஸி புளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் ருஷெல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி, நீடா அம்பானிக்கு மொத்தம் 3 குழந்தைகள் இதில் மூத்தவர் ஆகாஷ் அம்பானி, இவருக்கு அடுத்தபடியாக ஈஷா என்ற இரட்டை சகோதரிகள் உள்ளனர்.ரோஸி புளூ டைமண்ட்ஸ் அதிபர் ருஷெல் மேத்தா, மோனா மேத்தா தம்பதியின் 3 மகள்களில் இளையவர்தன் ஸ்லோகா மேத்தா. வைர வியாபாரி நிரவ் மோடிக்கு மிகவும் நெருங்கிய சொந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும், மும்பையில் உள்ள அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரின் பள்ளிக் காலத்தில் இருந்தே இரு குடும்பத்தாருக்கும் நன்கு பழக்கம் என்பதால் இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிபரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி (வயது26). இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஸ்லோகா மேத்தா அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலும், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், பொலிட்டிக்கல் சயன்ஸில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தற்போது ரோஸி புளூ அறக்கட்டளை அமைப்பில் நிர்வாக இயக்குநராக ஸ்லோகா மேத்தா செயல்பட்டு வருகிறார்.

ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா மேத்தாவின் திருமண நாள் குறித்த உறுதியான செய்திகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஷ்லோகா மேத்தாவின் தாய், சமீபத்தில் வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினர் என்பதுதான் ஸ்பெஷல் ரிப்போர்ட்