32°C

‘நபார்டு’ வங்கியில் மேலாளர் வாய்ப்பு!

admin Published: March 24, 2018 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:
நாட்டின் விவசாயத்துறைக்காக துவக்கப்பட்ட நபார்டு வங்கியில் ரூரல் டெவலப்மென்ட் பேங்கிங் சர்வீஸ் பிரிவில், 92 துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: பொதுப் பிரிவில் 46, அனிமல் ஹஸ்பென்டரி பிரிவில் 5, சார்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் 5, எகனாமிக்ஸில் 9ம், என்விரான் மென்டல் இன்ஜினியரிங்கில் 2ம், புட் பிராசசிங்/புட் டெக்னாலஜியில் 4ம், பாரஸ்ட்ரியில் 4ம், சாயில் சயின்ஸ்/அக்ரிகல்சரில் 8ம், வாட்டர் ரிசோர்சில் 6ம், சோசியல் ஒர்க்கில் 3ம் காலியிடங்கள் இப்பிரிவில் நிரப்பப்பட உள்ளன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வயது: விண்ணப்பதாரர்கள் மார்ச் 1, 2018 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுப் பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கு தொடர்புடைய சிறப்பு கல்வித் தகுதி தேவைப்படும். விபரங்களை இணைய தளத்திலிருந்து அறியவும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.800.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என்ற மூன்று நிலைகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளது. கடைசி நாள் : ஏப்., 2, 2018

விபரங்களுக்கு
ஆந்தை வேலைவாய்ப்பு