மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘ஆரோக்யசேது’ ஆப் – மத்திய அரசு வெளியீடு!

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘ஆரோக்யசேது’ ஆப் – மத்திய அரசு வெளியீடு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 151 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையில் 19 எனப்படும் கொரோனா நோய்க்கு எதிரான உறுதியான போராட்டத்தில், இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதற்காக, அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் மொபைல் ஆப் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஆம்.. உலகம் முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘ஆரோக்யசேது’ என்ற இந்தச் செயலி, டிஜிட்டல் இந்தியாவில் இணைக்கப்பட்டுள்ளது.

அது சரி இந்த செயலி எப்படி உதவும்?

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் தங்களுக்கு உள்ளதா, என்று மக்கள், தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்துகொள்வதற்கு இந்தச் செயலி உதவும். ஒருவர் மற்றவர்களுடன் எவ்வாறு கலந்து பழகுகிறார்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; எந்த அளவிற்கு நவீன ப்ளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்; கணிப்பு நெறிகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இது கணக்கிடப்படும். பயனாளிகளே பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான முறையில் எளிமையானதாக அமைந்துள்ள இந்தச் செயலியை, ஸ்மார்ட் போன் செல்லிடப்பேசியில் பதிவேற்றிய பின்னர், இந்த செல்லிடப்பேசிக்கு அருகேயுள்ள இதர கருவிகளை, ஆரோக்யசேது கண்டறியும்.இந்த நவீன அளவுகோல்களின் (பாராமீட்டர்கள்) அடிப்படையில், இந்த தொடர்புகளில் ஏதேனும் ஒன்று பாசிட்டிவாக இருந்தால், எந்த அளவிற்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை, இந்தச் செயலி கண்டறியும்.

கோவிட்- 19 தொற்று எங்கு பரவக்கூடும் என்பதை மதிப்பீடு செய்து, உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் தனிமைப்படுத்துதலை உறுதி செய்யவும், இந்தச் செயலி, அரசுக்கு உதவும்.

இந்த செயலி பாதுகாப்பானதா?

இந்தச் செயலியின் வடிவமைப்பு, முதலில், தனிநபர் அந்தரங்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த செயலியால் சேகரிக்கப்படும் தனிநபர் புள்ளிவிவரங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு சங்கேதக் குறியீடுகளாக மாற்றப்படும் (Encrypt). மருத்துவ சிகிச்சை முறைகளுக்குத் தேவைப்படும் வரை, இந்தத் தகவல்கள் தொலைபேசியில் பத்திரமாக இருக்கும் .அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலிருந்தே இந்தியா முழுமையும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலான இந்தச் செயலி, பதினோரு மொழிகளில் கிடைக்கும். தேவைக்கேற்ற வகையில் இந்தச் செயலியை மாற்றியமைத்துக் கொள்ளும் வகையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..

அட்சினல் ரிப்போர்ட் :

இதனிடையே இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் டிராவல் ஹிஸ்டரியை வாட்ஸ்அப் கார்டாகப் பகிர்ந்து எச்சரிக்கை செய்கிறது. மேலும், அடுத்த கட்டமாகப் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. `GCC CORONA Monitoring’ என்னும் ஆப் மூலம், சென்னை மக்களை காய்ச்சல் இருந்தால் பதிவுசெய்ய அறிவுறுத்தியுள்ளது. மிக எளிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலி குறித்து ஆந்தை ரிப்போர்ட்டர் ஃபேஸ் புக் பேஜில் விளக்கமாக சொல்லி இருக்கிறோம்

error: Content is protected !!