June 2, 2023

ரயில் & ஃப்ளைட் அவான்ஸ் புக்கிங் கவுண்டர் ஓப்பன் ஆயிடுச்சா?

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு ரயில்கள் மட்டும் தற்போது இயங்கி வருகின்றன. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணத்துக்கு ஐஆா்சிடிசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கவுன்ட்டா்களில் ஏப்.15-ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மேலும் சில தனியார் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு செய்து செய்லப்டுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பின்னர் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஒருபோதும் நிறுத்தம் செய்யப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது. அதாவது கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இந்நிலையில், ஏப்ரல் 15 ஆம் தேதியிலிருந்து ரயில்களில் பயணிப்பதற்கான முன் பதிவு டிக்கெட் இன்று(வியாழக்கிழமை) தொடங்கியுள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பின்னர் ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் ஒருபோதும் நிறுத்தம் செய்யப்படவில்லை என்றும் வழக்கம்போல ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து பயணம் செய்ய முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய தேவையில்லை. தானாகவே அவை ரத்தாகி விடும். மேலும், டிக்கெட் கட்டணம் முழுவதுமாக அவர்களது வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். நேரடியாக கவுண்டரில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டை ரத்து செய்ய ஜூன் 21 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே அறிவித்துள்ளது. அத்துடன் சில தனியார் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.